<$BlogRSDUrl$>

இலங்கை அரசியலில் இன்று இன்று இலங்கையில் நடக்கும் அரசியல் குழப்பங்களுக்கு அதிகாரப்போட்டியே காரணம் இலங்கை அரசியல் அமைப்பில் வளங்கப்பட்டுள்ள அதிகாரங்களை சனாதிபதியா அல்லது பிரதமரா கையாழ்வது என்பதில் ஏற்பட்ட போட்டியாகும் நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனையைத் தீர்க்க மனமில்லாது இரு பேரினவாதக் கட்சிகளும் தங்களுக்குள் பலப்பரிச்சையில் இறங்கியுள்ளன இரு சகாப்தங்களாக தொடர்ந்து வரும் இனப்பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுபேன் எனக்கூறி மக்களின் ஆணையைப் பெற்று பாராளுமன்றத்தை கைப்பற்றிய ரணிலின் ஐ:தே. கட்சி வந்தவுடனேயே சமாதானத்தில் சிறிது நாட்டங்காட்டத்தொடங்கியது அத்தருணத்தில் விடுதலைப் புலிகள் அறிவித்திருந்த ஒருதலைப் பட்சமான சமாதானத்துக் கான போர் நிறுத்த அறிவிப்பை ஏற்று மூன்றாம் தரப்பு ஆதரவுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இரு தரப்பும் கைச்சாத்திட்டு கண்காணிப்புக்குளுவின் மேற்பார்வையில் சிறு சிறு தளம்பல்களுடன் ஆறு சுற்று பேச்சுவரை நகர்ந்து அங்கு முடிவெடுக்கப்பட்ட சிலவற்றை அரசாங்கம் நிறைவேற்ரதால் பேச்சுவார்த்தைகள் மறு தரப்பினால் தற்காலிகமாக இடை நிறுத்தம் செய்யப்பட்டாலும் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறாது இரு தரப்பும் இன்று வரை அதனை கடைப்பிடித்து வருகின்றார்கள் இருந்தபோதும் பேச்சுவார்த்தைகளினால் எடுக்கப்பட்ட முடிவுகளை ரணில் அரசால் நிறைவேற்ர முடியாதுபடி நிறைவுற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி சந்திரிகா சில தடைகளை போடத் தொடங்கினார் இதை உணர்ந்த விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் தற்போதைய தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய அதிகாரங்கள் நிறைந்த இடைக்கால நிர்வாகத்தை கோரினார்கள் அதற்கேற்ப அரசாங்கமும் அதிகாரம் குறைந்த சில வரைவுகளை புலிகளிடம் ஒப்படைத்தது இவற்றை நிராகரித்த புலிகள் தாங்கள் பல சட்ட அறிஞர்களைக் கொண்டு தமிழ் மக்களின் இன்னல்களை பூர்த்தி செய்யக் கூடிய இடைக்கால அறிக்கையை அரசாங்கத்திடம் ஒப்படைத்தார்கள் இதனை ஏற்றுக் கொண்ட அரசாங்கம் சில முரண்பாடுகளை பேச்சுமூலம் தீர்க்கலாம் என முடிவெடுத்தது இதனை பொறுக்க முடியாத பேரினவாதம் கொண்ட சந்திரிகா குமுறி எழுந்தார் பேரினவாதக் கூச்சலிடும் கும்பலுடன் சேர்ந்து சூழ்ச்சி வலையை பின்னத் தொடங்கினார் பேரினவாதக் கூச்சலில் குழிர்காய நினைத்தார் தனது இருப்புக்கே இது பின்னடைவை தந்துவிடும் என்று எண்ணினார் தனக்கிருக்கும் வானழாவிய அதிகாரங்களை பயன் படுத்தாவிட்டால் ரணிலின் அரசாங்கம் இதனால் மக்களிடம் நன்மதிப்பை பெற்று விடும் பின்னால் தன் அரசியல் வாழ்கை ஆட்டம் கண்டுவிடும் என்று எண்ணிய அவர் இதனால் வரும் பின் விழைவுகளை ஒருகணமேனும் சிந்திக்காது அரசியல் சதுரங்கத்தில் காய்களை நகர்த்தத் தொடங்கினார் புலிகள் கொடுத்த இடைக்கால வரைவால் அவர்கள் தனி நாடு கோருகின்றார்கள் நாட்டை இரண்டாகப் பிரிக்கப் போகின்றார்கள் என்று தென் பகுதியில் பேரினவாதிகள் கொக்கரித்துக் கொண்டிருக்க ரணிலும் நாட்டில் இல்லாத சந்தர்ப்பதத்தையும் பயன் படுத்தி இரவோடு இரவாக முக்கிய மந்திரிகளின் அதிகாரங்கள் மூன்றை தன்னகப்படுத்திக் கொண்டார் அத்துடன் அவசரகாலச் சட்டத்தையும் பிரகடனப் படுத்தினார் ஆலோசகர்கள் சூழ்ந்திருக்க அன்றய இரவு நாடகம் முடிந்தது மறுநாள் பொழுது புலர்ந்தது நாடே அச்சத்தில் மீண்டும் அவசரகாலச் சட்டமா மீண்டும்சோதனைச் சாவடிகளா இந்த நாட்டில் என்ன நடக்கின்றது அதிகாரப்போட்டியின் உச்சக்கட்டம் அரங்கேறுகின்றது சமாதானத்தின் குரல்வளை நசிக்கப்படுகின்றது சமாதானத்தை விரும்பிய உலக நாடுகள் சங்கடப்படுகின்றன பேரினவாதிகள் பட்டாசு கொளுத்தி சந்தோசப்படுகின்றார்கள் தமிழர்கள் பெட்டிப்பாம்பாக அடங்கிவிட்டார்கள் நடமாட்டத்தை குறைத்து விட்டார்கள் உலக நாடுகள் சந்திரிகா மீது குற்றக்கணைகளை வீசத்தொடங்கின இதனால் மிரண்டுபோன சந்திரிகா மறுநாளே அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தவில்லை என்று பின் வாங்கினார் சந்திரிகாவின் முன்னுக்குப்பின்னா அறிக்கைகள் விடுவதும் பின் அதை மறுதலிப்பதும் இன்று நேற்றல்ல அவர் பதவி வகிக்கும் காலம் தொட்டே செய்து வருகின்றார் அவரின் செய்கைகளைப்பார்த்தால் மூளை பேதலித்தவர்ளின் செயலைப் போன்றதே அவர் ஒரு அரசியல் முதிர்ச்சியற்ற எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற நிலைப் பாட்டைக் கொண்டுள்ளார் இன்றய இலங்கையின் அரசியல் சூழ்னிலையில் அவரின் செயல்பாடு அவரை சார்ந்திருக்கும் பெரும்பான்மை மக்களாலும் வெறுக்கும் நிலை உருவாகி உள்ளது உலக நாடுகளும் சந்திரிகாவை ஒதுக்கும் நிலமை வந்துள்ளது புலிகளின் இடைக்கால வரைவை உலக நாடுகள் பலவும் வரவேற்றுள் நிலையில் சந்திரிகாவின் முடிவால் சமாதானம் வெகுதூரம் பின் தள்ளப்பட்டுள்ளது சமாதானத்துடன் தொடர்புடைய பாதுகாப்பு அமைச்சை ரணிலிடம் இருந்து பறித்தெ டுத்ததன் மூலம் அரசாங்கம்சக்கரம் இல்லாத தேர் போன்றநிலையில் உள்ளது சமாதானச் செயல்ப்பாட்டை நகர்த்த முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது ஊடகத்துறையை கையில் எடுத்து தனது செயல்ப்பாட்டை நியாயப்டுத்தும் ஊது குழல் ஆகப் பயன் படுத்துகின்றார் நீதித்துறையில் தனது சார்புள்ளவரை காப்பாற்றி வைத்துள்ளார் காவல்துறையில் தனது விசுவாசிகள் புகுத்தப்படுகின்றார்கள் பாராளுமன்றத்தை கூட்டாது இரு வாரங்களுக்கு உறங்கு நிலையில் வைத்துள்ளார் அவரது ஆலோசகர்களின்ஆட்டத்துக்கு போட்ட கூத்து இப்போது அட்டங்கண்டு விட்டது அவசரகாலச் சட்டம் பிசு பிசுத்து விட்டது அரசாங்கம் அமைக்க அம்மணிக்கு ஆழ்ப்படித்துத் தருவோம் என்ற அண்ணன் தம்பி உறுதி மொழி எல்லாம் மண்கவ்விப்போச்சுது இடைக்கால யோசனை சமர்ப்பித்த இரண்டு நாளில் பேரினவாதிகள் நடத்திய வேள்வியில் சந்திரிகா அம்மையார் பலிக்கிடா ஆனார் இப்போது ஆப்பிளுத்தமந்தி நிலைஆனார் ரணிலின் அரசு தமிழருக்கு கேட்பதயெல்லாம் அள்ளிக் கொடுத்து விட்டதாக பேரினவாதிகளுக்கு ஒரு புறம் தூபம் போட்டுக் கொண்டு மறுபுறம் தான் சமாதானம் விரும்பும் வெள்ளைப் புறாவாக வெளியுலகுக்கு காட்டியதெல்லாம் இன்று வெளுத்து விட்டது தன் செயலால் தான் ஒரு பேரினவாதிதான் என்பதை நிரூபித்துள்ளார் பெரும் அரசியல் பரம்பரையை சேர்ந்தவர் என வாய்ச்சவடால் விடும் இவரிடம் எந்தவித பரந்த நோக்கமும் கிடையாது குறுகிய இனவாதப் போக்கும் சந்தர்ப்பவாத அரசியலும் தான் உள்ளது இலங்கையை தனது பதவி மோகத்தால் ஒரு பதட்ட நிலைக்கு தள்ளியுள்ளார் மீண்டும் ஒரு போருக்கு அடிக்கல்நாட்டுகின்றார்போலும் இவற்றை எல்லாம் மேவியபடி ரணில் மிகவும் நிதானத்துடன் காய் நகர்த்தல்களை செய்துகொண்டிருக்கின்றார் சமாதானம் பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்புடையதாய் இருப்பதால் அந்தஅமைச்சு இல்லாமல் சமாதானப் பேச்சு வார்த்தையில் பங்குகொள்ள முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார் முக்கியமான அமைச்சுப் பொறுப்புகளை வைத்திருக்கும் சனாதிபதியே சமாதான முன்னெடுப்புகளை நகர்த்தவேண்டும் என பந்தை சந்திரிகா பக்கம் தட்டியுள்ளார் அத்துடன் அதிகார அம்மணியுடன் முட்டி மோதாமல் ஒத்துப்போக முனைகின்றார் பொல்லைக் கொடுத்து தானே அடிவாங்கிய கதையாக அம்மணி மேலே சமாதானத்தைக் குலைத்த பழி வந்து சேர ரணில் இப்போது நல்லபிள்ளை ஆகிவிட்டார் சனாதிபதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்தபோது மறுப்பேதும் இல்லாது ரணில் சென்று வந்துள்ளார் சந்திரிகாவின் கூட்டணியைச் சேர்ந்த பாராளுமன்ற அங்கத்தவர் ஒருவர் முன்பு தேசிய அரசொன்றை அமைப்பதற்கு அறைகூவல் விட்டபோது அவரை நையப் புடைத்த அம்மணியார் இப்போது அதற்கு அழைப்பு விடுகின்றார் சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பார்கள் எல்லாம் காரியத்துடன்தான் சனாதிபதிப் பதவி என்னம் இரண்டு வருடங்களுக்குத்தான் சந்திரிகாவுக்கு நிலைக்கும் அதன் பின் அவர் விரும்பினாலும் அந்தப் பதவிக்கு போட்டிஇட முடியாது அரசியல் சட்டப்பிரகாரம் ஒருவர் இருமுறை சனாதிபதிப் பதவிக்கு போட்டி இடலாம் சந்திரிகா இப்போது கடசித்தரிப்பில் நிக்கின்றார் இனி அவர் இறங்கவேண்டியதுதான் ஆனால் இதை அவரால் சீரணிக்க முடியாமல் தவிக்கின்றார் பதவிச்சுகம் கண்டவர் இனி இறங்கிவந்து எதிர்க்கட்சியில் அமருவாரா தலமை பதவி கண்டவர் என்னமொரு சனாதிபதியின் கீழ் அமர விரும்புவாரா ஆகவே எல்லாக் கட்சிகளுடனும் சேர்ந்து தேசிய அரசொன்றை நிறுவி தனது காலம் வரை கடத்திவிட்டு கடசியில் சனாதிபதி அட்சி முறையை மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நீக்கிவிட்டு தானும் போட்டியிட்டு முதல் மந்திரிப்பதவியை வகிக்கும் பாராளுமன்ற ஆட்சிக்கு மாறுவதே அவரின் தேசிய அரசின் அறைகூவலாகும் ஆனால் ரணிலோ அரசியல் குள்ள நரியின் கூடாரத்தில் வளாந்தவர் இந்த சலசலப்புக்கு அஞ்சுமா தெரியவில்லை அரசியல் நாடகம் என்னம் முடியவில்லை இதைப்பார்த்துக்கொண்டு இருக்கும் தமிழ் இனமும் வெளி உலகமும் ஆச்சரியப்படவும் இல்லை அதிசையிக்கவும் இல்லை இது கடந்த ஐம்பது வருடமாக தமிழர்களுக்கு அளும் கட்சி சிறிதேனும் உரிமை கொடுக்கக் கைநீட்டினால் அதை தட்டி பறிப்பதே எதிர்க்கட்சியின் நாடகமாக இருக்கின்றது இதுவரை தமிழர் தரப்பால் வளங்கப்படாத எழுத்துவடிவத்தில் ஆன இடைக்கால வரைவை அரசிடம் கையளித்தபின்பு பேரினவாதம் எதிர்க்கட்சி வடிவில் சன்னதமாடி சமாதானத்துக்கு தடை போட்டுள்ளது மூன்றாம் தரப்பாகசமாதானத்தை கொண்டுவர முயற்ச்சிக்கும் நோர்வே நாட்டினரும் இந்த இழுபறி நிலைக்குள்ழும் சமாதானத்தை தொடரவைக்க இங்கு வந்துள்ளனர் சந்திரிகாவையும் ரணிலையும் தனித்தனியாகச் சந்தித்துப் பேசியதில் இருவரிடமும் சமாதானத்துக்கு ஏற்ற பதில்ஏதும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளனர் மேலும் இவற்றை எல்லாம் எந்த சலனமும் இல்லாமல் மிகவும் கூர்மையாகவும் நிதானமாகவும் அவதானித்துக் கொண்டிருக்கும் விடுதலைப் புலிகளுடனும் நோர்வே தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் அப்போது தலைவர் பிரபாகரன் தாங்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாகவும் தங்கள் மீது போர் வலிந்து மறுபகுதியினரால் திணிக்கும் போது அந்த சூழ்னிலைக்கு ஏற்றாற்போல் முடிவெடுப்பதாகக் கூறியுள்ளார் அத்துடன் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள போராளிகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கும்படி நோர்வே தரப்பை கேட்டுள்ளார் புலிகளுடன் சந்திப்பை முடித்துக்கொண்டு மீண்டும் கொழும்பு திரும்பிய நோர்வே தரப்பினர் ரணிலையும் சந்திரிகாவையும் சந்தித்து புலிகள் கூறியவற்றை கூறியுள்ளனர் இருந்தபோதும் அவர்களிடம் எந்தமாற்றத்தையும் காணமுடியவில்லை கடசியாக பத்திரிகையாளரை சந்தித்த நோர்வே தரப்பினர் இலங்கை சமாதான நடவடிக்கைகளில் இருந்து சிறிது காலம் விலகி இருப்பதென அறிவித்துள்ளனர் இலங்கை அரசியலில் ஒரு திடமான அரசு அமையும் போது மீண்டும் சமாதானத்தை தொடரலாம் என்று கூறியுள்ளனர் இனி இலங்கையில் என்னென்ன காட்சி விரியுமோ என்னென்ன நாடகம் நடக்குமோ எல்லாம் சந்திரிகாவின் நெஞ்சினிலே ஈழத்துத் தமிழ் இனத்தை எங்கு விடப்போகின்றாய் என் இறைவா_-

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

This page is powered by Blogger. Isn't yours? Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது தேன்கூடு, தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி http://ta.wikipedia.org