Donnerstag, Februar 12, 2004
குழந்தைகளுக்கு புட்டிப்பால் கொடுப்பது சரியா தாய்ப்பால் கொடுக்க மறுப்பது முறையா-
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தாய்ப்பால் என்பது ஒவ்வொரு குழந்தையின் பிறப்புரிமை என்பது முற்றிலும் உண்மை. பேறுகாலத்திலேயே, 'என்னால் என் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க முடியும்' என்று மனதளவில் தயார்ப்படுத்திக் கொள்வது ஒவ்வொரு தாயின் கடமையாகும். எல்லாம் சரிதான்.
ஆனால் நாம் ்தைச் சரியாகத்தான் சொல்கிறோமா? எப்பொழுதுமே 'எக்ஸ்ட்ரீமாக' தான் நம் அறிவுரைகள் −ருக்கிறதே தவிர, 'பாலன்ஸ்டாக' ்ருப்பதில்லை என்பது ;ந்த விஷயத்திலும் உண்மைதான்.
தாயாக என்னுடைய பத்து வருட அனுபவத்தில் மிக நெருங்கிய பந்தங்கள் மூலம் தெரிந்து கொண்டது....
1. சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் தாய்ப்பால் கொடுக்க முடியாமல், பிறந்த முதல் நாள் முதல், பாட்டில் பால் புகட்டப்பட்டு வளர்ந்த குழந்தைகள் மிக ஆரோக்கியமாக, மிக்க அறிவுடையவர்களாக வலம்வருவதைக் காண்கிறேன்.
2. −ந்தக் குழந்தைகளும் தெளிந்த சிந்தனையுடையவர்களாக, பெற்றோர் மீது மரியாதையும் அன்பும் உடையவர்களாகத் திகழ்வதை நிதர்சனமாகப் பார்க்கிறேன்.
(உ.ம்) எம்.பி.ஏ. படிப்பிற்கு சேர்ந்த தன் தாய்க்கு, எல்லா விதத்திலும் (வீட்டுப் பராமரிப்பிலும், தம்பியைக் கவனித்துக் கொள்வதிலும்) உதவி புரிந்து, உறுதுணையாக நின்ற 'பதிமூன்று வயது புத்திசாலிப் பையன்' பாட்டில் பால் புகட்டப்பட்டு வளர்ந்தவன்தான்.
அன்பு, மரியாதை, நல்ல குணங்கள் - −வற்றிற்குச் சூழலும், பெற்றோரின் நடவடிக்கைகளும், பெரியவர்களின் வழிகாட்டுதலுமே காரணம் என்பதை நாம் மறக்கக் கூடாது.
3. என் நெருங்கிய தோழியும், −ன்னும் சில பேர்களும் ஒரு கருத்தைச் சொன்னார்கள் :- 'தாய்ப்பால் புகட்டப்பட்டு வளர்ந்த முதல் குழந்தைக்கு (பரம்பரை) வீசிங்கும், சில காரணங்களால் பாட்டில் பால் புகட்டப்பட்டு வளர்ந்த −ரண்டாவது குழந்தைக்கு அந்தப் பிரச்னை வராததும் சில கேள்விகளை எழுப்புகிறதே' என்பதுதான் அது.
4. மிக முக்கியமான ஒரு கோணம்: சமீப காலத்தில், தாய்ப்பால் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ள நிலையில் நவநாகரிகமான பெண் கூட, தன் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என ஆத்மார்த்தமாக நினைக்கிறாள். ஆனால் சில சந்தர்ப்பங்களில் அறியாமை காரணமாகவோ, வேறு சில காரணங்களுக்காகவோ, தாய்ப்பால் கொடுக்க முடியாமல் போகும் போது அவர்கள் 'குற்ற உணர்ச்சி'க்கு ஆளாகிறார்கள். −து பின்னர் மன உளைச்சலாகவும் மாறுகிறது. குடும்பம், வேலை என்று பல்வேறு பாரங்கள் சுமக்கும் அவர்களால் நிம்மதியாக செயல்பட முடிவதில்லை. −து மிகவும் தவறானதல்லவா?
பாட்டில் பால் குடித்து நல்ல முறையில் வளர்ந்தவர்கள் பலர் −ருக்க, தாய்ப்பால் கொடுக்க −யலாத −ளம்தாய்மார்கள் சரியான தகவல்கள் −ன்றி குற்ற உணர்ச்சிக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாவதைத் தடுக்க வேண்டியது அனுபவமிக்க தாய்மார்களுடைய கடமையல்லவா?
பெண்களை, தாய்மைப் பேறுக்கு என்று மட்டுமே தயார் செய்த அந்தக் காலத்தில் வேண்டுமானால், தாய்ப்பால் பற்றிய கருத்துக்கள் சரியாக −ருக்கலாம். ஆனால் படிப்பு, கேரியர், போட்டி என்று உடம்பை வருத்திக் கொண்ட −ன்றைய பெண்களுக்கும் அது பொருந்துமா? என்ற கேள்வியை ஆழ்ந்து நோக்க வேண்டும்.
கட்டாயமாகத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்ற சங்கல்பம் செய்து கொண்டதினால், மாற்றுப் பாலைத் தவிர்க்க நினைத்ததில், மூன்று மாதத்திற்குப் பின் −ணை உணவு ஆரம்பித்த பிறகும், குழந்தை 'நச் நச்' சென்று அழுவதும், குறைந்த −டைவெளியில் '−ங்கா' (தாய்ப்பால்) டிமாண்ட் செய்வதும் ஒரு சாதாரண நிகழ்வாக −ருக்கிறது.
தாய்மார்கள், தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்ற விஷயத்தை மட்டுமே கிரகித்துக் கொண்டுள்ளார்களே தவிர அதற்கு தாங்கள் நல்ல சத்தான உணவை உட்கொள்ள வேண்டும் என்ற விஷயத்தைக் கிரகித்துக் கொள்ளவில்லை.
தாய்ப்பால் கொடுக்க நினைக்கும் −ளம் தாய்மார்கள் சத்தான உணவு உண்பது மட்டுமல்ல. தேவையான ஓய்வும் எடுத்துக் கொள்ள வேண்டும். கூட்டுக் குடும்பம் அரிதான −ந்தக் காலத்தில் எங்கே அந்த ஓய்வு கிடைக்கிறது? −தர சுமைகள் அழுத்துகிற நிலையில் எட்டு, ஒன்பது மாதக் குழந்தை தாய்ப்பாலுக்காக நச்சரிக்கும் போது, தொடக்கத்தில் ஆத்மார்த்தமான விருப்பத்துடன் கொடுத்து வந்த செயலானது, பிறகு, ஒரு கட்டாயத்தின் பேரில்... ஒரு தண்டனை போல ஆகி விடுகிறது.
−தையும் நாம் ஆராய்ந்து மனதில் கொள்ள வேண்டும். தாய்ப்பாலை ஆதரிப்பவள் என்ற அடிப்படையில் சில டிப்ஸ் −தோ -
1. உடைத்த கோதுமை (அ) கோதுமை ரவையை நெய்யில் வறுத்து நீரில் வேக வைத்து, பால், சர்க்கரை சேர்த்தோ மோர் உப்பு சேர்த்தோ காலை உணவாக எடுத்துக் கொண்டால் தாய்ப்பால் நன்கு ஊறும்.
2. வெந்தய தோசை செய்து சாப்பிட்டாலும் பால் ஊற உதவும்.
3. ஓட்ஸ் உணவும் பால் ஊற உதவும்.
4. கோதுமை மாவை நெய்யில் சிவக்க வறுக்கவும். பாதாம், முந்திரி, பிஸ்தா, திராட்சை, சாரைப் பருப்பு, −வைகளை பொடியாக நறுக்கி நெய்யில் வறுத்து மாவில் சேர்க்கவும். வெல்லம் பொடித்து −தனுடன் சேர்த்து லட்டுகளாகப் பிடித்து வைத்துக் கொண்டு குழந்தை பிறந்த பதினொரு நாள் கழித்து காலையில் −ரண்டு லட்டுக்கள் சாப்பிட்டு வர பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு போஷாக்குக் கிடைக்கும்.
5. காலம் மாறி விட்டதே என்று சோர்ந்து போகாமல், பேறுகாலத்தின் போதே கணவருடன் பேசி தாய்ப்பால் கொடுக்கும் வரையிலும் எளிமையான சமையலையும், வீட்டு வேலைகளில் உதவ ஒரு ஆளையும் வைத்துக் கொள்ளலாம். வெரைட்டி சமையல், விருந்துபசாரங்கள் எல்லாம் குழந்தை பெரிதாகும் வரை தள்ளிப் போடுங்கள்.
6. உங்களைப் போன்ற −ளம்தாய்மார்களுடனும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளுங்கள். ஒப்பிடுதல் மட்டும் வேண்டாம். −றுதியாக, ஆனால் முக்கியமாக, சொல்லிக் கொள்வது - தாய்ப்பால் கொடுக்க −யலாத −ளம்தாய்மார்கள் எவ்வித குற்ற உணர்ச்சியும் −ல்லாமல் அன்புடனும், அரவணைப்புடனும், சத்தான, சுகாதாரமான மாற்றுப் பால் புகட்டுங்கள். குழந்தைகளுக்கு நல்ல சூழலை உருவாக்கிக் கொடுங்கள். உங்கள் குழந்தைகளும் நல்லவர்களாக, வல்லவர்களாகத் திகழ்வார்கள்.
Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்
பருவம் அடையும் பெண்களை தனிமைப்படுத்துவது சரியா--
-----------------------------------------------------
வயதுக்கு வந்த உடன் பெண்களை தனியாக உட்கார வைப்பது சரிதான். அப்படி உட்கார −இப்போதைய சிறுமிகள் விரும்புவது −இல்லை. ஆனால் −ப்பழக்கம் சுகாதாரமானதாக −இருப்பதோடு, அவர்கள் மனதிற்கும், உடலிற்கும் முழு ஓய்வு கொடுப்பதும் அவசியம்.
முதலில் பயந்து போய் −ருக்கும் குழந்தைக்கு தைரியம் கொடுத்து, −இ−யல்பாகவே எல்லாப் பெண்களுக்கும் வருவது தான் எனக் கூறி அவர்களது மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும். நம் ஊர்களில் வயதுக்கு வந்த உடன் பாலுடன் முட்டை கலந்து குடிக்கச் செய்வதும், நல்லெண்ணெயுடன் முட்டை கலந்து குடிக்கும் வழக்கமும் உள்ளது. −வை புரதச் சத்தும், கால்சியச் சத்தும் நிறைந்தவை. குளிக்கும் போது வயதுக்கு வந்த பெண்ணை நிறைய மஞ்சள் பூசிக் குளிக்கச் செய்வதும், தண்ணீரில் மாவிலை கலந்து குளிக்க வைக்கும் பழக்கமும் உண்டு. மஞ்சளும், மாவிலையும் மிகச் சிறந்த தொற்று நீக்கியாகச்
செயல்படுகிறது. சில ஊர்களிலும், கிராமங்களிலும் கீரை விதை ஒரு தேக்கரண்டியுடன் பாலும் அருந்தும் பழக்கம் உள்ளது. கீரை விதை எலும்புகளுக்கு வன்மையை அளிக்கிறது.
கைக்குத்தல் அரிசியில் செய்த பிட்டு, பனைவெல்லாம் கலந்த மாவு உருண்டை தரும் வழக்கம் உண்டு. அரிசியில் −ருக்கும் மாவுச் சத்தானது மற்ற தானியங்களில் உள்ள மாவுச் சத்தை விட வித்தியாசமானது. −இந்த மாவுச் சத்தில் நூறு சதவீதம் அமினோ பெக்டின் என்ற சத்து −இருக்கிறது. −இது நாம் உண்ணும் உணவுகள் எளிமையாக செரிப்பதற்கு காரணமாக அமைகிறது. அரிசியில் எட்டு சதவிகிதம் புரதச் சத்து −இருக்கிறது. −இந்தப் புரதச் சத்தானது வளர்சிதை மாற்றத்தின் காரணமாக எளிதில் உடலை வளர்க்கும் சத்தாக மாறி நம் உடல் உள்ளுறுப்புகளை உறுதியாக்குகிறது. கைக்குத்தல் அரிசியில் வைட்டமின் 'பி' உயிர்ச் சத்து உள்ளது. தோலுக்கும், ரத்த நாளங்களுக்கும், ஊட்டத்தையும், உறுதியையும்
அளிக்கிறது.
ரத்தப் போக்கு அதிகமாக −இருந்தால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் அதனை நிவர்த்தி செய்ய பனைவெல்லம் (−இரும்புச் சத்து நிறைந்தது) கலந்த மாவு உருண்டை வழங்கப்படுகிறது.
உறவினர்கள் அனைவரும் வந்து குழந்தைகளை ஆசீர்வாதம் செய்வதுடன் வகை வகையாகச் சத்து நிறைந்த உணவுகளைப் 'பொங்கிப் போடும்' வழக்கமும் உண்டு. அதில் முக்கியமாக உளுந்தஞ்சோறு, உளுந்தங்களி, உளுந்தங்காடி முதலியவை செய்வார்கள். உளுந்து கொண்டு செய்யப்படும் உணவு வகைகள் −இடுப்பு எலும்பிற்கு (pelvic bones) வன்மையைக் கொடுக்கும். புரதச் சத்து நிறைந்தவை.
தற்போது டீன் ஏஜ் பெண்கள் கடுமையாக வேதனைப்படுவது அவர்களுக்கு வரும்
மாதவிடாயின் போது ஏற்படும் கடுமையான வயிற்றுவலி பிரச்சினைக்குத் தான். அவர்கள் வயதிற்கு வந்த உடன் பெற்றோர்கள் அவர்களுக்கு சத்தான உணவுப் பொருட்களைக் கொடுப்பதோடு, குறைந்தது ஒரு வாரமாவது முழு ஓய்வு கொடுத்து கவனித்துக் கொண்டால் மாதவிடாய்க் கோளாறுகள், முதுகு வலி முதலியவை வராது. 'அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை' என்பது புரியும்
Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்
எதிர்பாராததின் இன்பம்
உங்களுக்குத் தெரிந்த கதைதான்.
ஒருவனுக்கு நாற்பது வயதாகியும் திருமணம் ஆகவில்லை.
Ôஉனக்கு ஏன் இன்னும் திருமணம் ஆகவில்லை?Õ என்று ஒருவர் அவனிடம் கேட்டார்.
Ôஎனக்கு வரப்போகும் மனைவி இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று நான் கற்பனை செய்து வைத்திருந்தேன். அவளை ஊர் ஊராய்த் தேடி அலைந்தேன். ஓராண்டு, இரண்டாண்டு அல்ல... பல ஆண்டுகள் தேடி அலைந்தேன்’
Ôஒருத்திகூடவா கிடைக்கவில்லை?Õ
Ôகிடைத்தாள்!Õ
Ôபிறகென்ன... அவளைக் கல்யாணம் செய்துகொண்டிருக்க வேண்டியதுதானே?Õ
Ôஅவளுக்கு என்னைப் பிடிக்கவில்லை. அவளும் தனக்கு வரப்போகும் கணவன் இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று கற்பனை செய்து வைத்திருந்தாளாம். அந்தக் கணவன் நானில்லை என்று கூறிவிட்டாள்...Õ
கற்பனை உலகம் வேறு, உண்மை உலகம் வேறு.
கற்பனை உலகத்தில் சிறிது நேரம் உலாவலாம். ஆனால், அதில் வாழ முடியாது.
கற்பனை உலகம் அழகானதுதான். ஆனால், அந்த அழகு நமக்குத் தெரிந்த அழகு.
உண்மை உலகத்தில் நாம் அறியாத அழகுகளும் இருக்கும்.
கற்பனை உலகத்தில் நமக்குத் தெரிந்ததே இருக்கும். அதனால், எதிர்பாராதவற்றைச் சந்திக்கும்போது ஏற்படும் சிலிர்ப்பு (ஜிலீக்ஷீவீறீறீ) இருக்காது.
உண்மை உலகத்தில் சிலிர்ப்புகளுக்குப் பஞ்சமே இருக்காது.
சிலிர்ப்புகளால் ஏற்படும் ஆனந்தமே தனி.
திருமணத்திற்கு முன் நானும் எனக்கு வரக்கூடிய மனைவி பற்றிக் கற்பனை செய்து வைத்திருந்தேன்.
நான் கவிஞன் வேறு. கற்பனைக்குக் கேட்கவா வேண்டும்?
என் கற்பனை மனைவி வெறும் பூக்களாலும் நிலாவாலும் இசையாலும் ஆனவள்.
நானும் கதையில் வந்தவனைப் போல, என் கற்பனை மனைவியைத் தேடி அலைந்திருந்தால், என் ஆயுளுக்கு எனக்குத் திருமணம் ஆகியிருக்காது.
அவனுக்காவது அவன் கற்பனை செய்தபடி ஒருத்தி கிடைத்தாள்.
எனக்கு நிச்சயம் கிடைத்திருக்க மாட்டாள்.
ஏனென்றால், வெறும் பூக்களாலும் நிலாவாலும் இசையாலும் ஒரு பெண்ணைப் படைக்க முடியாது.
ஒருவேளை அப்படிப் படைத்தால்கூட, அவளோடு வாழ முடியாது.
ஏனென்றால், வாழ்வதற்கு உணவு வேண்டும்; உடை வேண்டும்; உறையுள் வேண்டும்.
பூக்களை உண்ண முடியாது. நிலாவை உடுத்த முடியாது. இசையில் குடியிருக்க முடியாது.
Ôநாமெல்லாம் காதலிக்காமல் கல்யாணம் செய்துகொண்டோமே, நினைத்துப் பார்த்தால் வருத்தமாக இருக்கிறதல்லவா?Õ என்று ஒருமுறை என் நண்பரிடம் வேடிக்கையாகக் கூறினேன்.
அவர், Ôநல்லவேளை... பெற்றோர்கள் பார்த்துத் திருமணம் செய்துவைக்கிற மரபு ஒன்று இருக்கிறது. அதனால்தான் நமக்கெல்லாம் மனைவி என்று ஒரு பெண் கிடைத்திருக்கிறாள். இல்லையென்றால் கிடைத்திருப்பாளா? நம்ம மூஞ்சியை யார் காதலிப்பார்கள்?Õ என்றார்.
யோசித்துப் பார்த்தால், அதுவும் உண்மைதான்.
காதலித்துத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் பலருக்குத் திருமணமே ஆகாது.
காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள் திருப்தியாக இருக்கிறார்களா என்றால், பெரும்பாலும் இல்லை.
காதலுக்குக் கண் இல்லை என்பார்கள். காதலுக்குக் கண் உண்டு. ஆனால், அதில் பார்வைக்கோளாறு உண்டு.
காதல் கண் நிறைகளை மட்டுமே பார்க்கும்; குறைகளைப் பார்க்காது.
திருமணம் இதற்கு நேர் மாறான நிலையை உண்டாக்குகிறது.
திருமணமானவர்கள் பெரும்பாலும் மற்றவருடைய குறைகளையே பார்க்கிறார்கள். நிறைகளைப் பார்ப்பதில்லை.
ஒருவர் நயமாகச் சொன்னார்:
காதல் டெலிஸ்கோப்; கல்யாணம் மைக்ராஸ்கோப்.
காதல் தூரத்தில் இருக்கும் அழகுகளைக் கண்டு ரசிக்கிறது.
நிலா தூரத்திலிருந்து பார்ப்பதால்தான் அழகாக இருக்கிறது.
காதல் தூரத்திலிருந்து பார்க்கிறது.
திருமணம் இருவரை அருகில் கொண்டு வருகிறது.
அதனால் காதலிக்கும்போது புலப்படாத குறைகள் புலப்படுகின்றன.
காதலர்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறாத போது ஏமாற்றம் ஏற்படுகிறது. அதனால் வருத்தம், கோபம், சண்டை.
Ôநீ இப்படிப்பட்டவள் என்று தெரிந்திருந்தால், உன்னை நான் கல்யாணம் செய்திருக்க மாட்டேன்Õ என்று காதலன் சொல்கிறான்.
Ôநீ இப்படிப்பட்டவன் என்று தெரிந்திருந்தால், நான் உன்னைக் காதலித்திருக்கவே மாட்டேன்Õ என்று காதலி சொல்கிறாள்.
இந்தப் பிரச்னைக்கெல்லாம் காரணம், மற்றவர்கள் நாம் எதிர்பார்க்கும்படி இருக்க வேண்டும் என்று நினைப்பதுதான்.
இது சாத்தியமில்லை என்பதை அறிந்துகொண்டால், வாழ்க்கையில் துன்பங்கள் உண்டாக வழியில்லை.
உங்கள் மனைவி, நீங்கள் எதிர்பார்ப்பதுபோல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்.
உங்கள் மனைவிக்கும் அப்படி நினைக்க உரிமை உண்டு.
உங்களால் அப்படி இருக்க முடியுமா?
மற்றவர்கள் நீங்கள் எதிர்பார்ப்பது போல் இருக்க வேண்டும் என்று எப்படி நீங்கள் நினைக்கிறீர்களோ, அப்படியே உங்களைப் பற்றி மற்றவர்களுக்கும் நினைக்க உரிமை உண்டு.
மற்றவர்கள் எதிர்பார்ப்பின்படி உங்களால் இருக்க முடியுமா?
முடியாதென்றால், மற்றவர்களைப் பற்றி அப்படி நினைக்க உங்களுக்கு ஏது உரிமை?
மனிதர்கள் கயிற்றில் ஆடும் பொம்மைகள் அல்லர். குறிப்பிட்ட வேலைகளுக்காகத் தயாரிக்கப்பட்ட ரோபாட்டுகளும் அல்லர்.
அவர்கள் உயிரும் உணர்வும் உடையவர்கள். பல்வேறுபட்ட குணாதிசயங்களை உடையவர்கள்.
தான் நினைக்கிறபடியே மற்றவர்கள் இருக்க வேண்டும் என்று நினைப்பவன் மூடனாக இருக்கிறான்; வன்முறையாளனாகவும் இருக்கிறான்.
அவன் படைப்பின் ரகசியத்தை அறியாதவனாக இருக்கிறான்.
படைப்பு என்பதே வகைகளால் (க்ஷிணீக்ஷீவீமீtஹ்) ஆனது. வகைகள் வாழ்க்கைக்குத் தேவை.
வகைகளால் இந்த உலகம் அழகாக இருக்கிறது.
உலகம் முழுவதும் ஒரே நிறமாக இருந்தால் எப்படி இருக்கும்?
உணவில் அறுசுவையை விரும்புகிறோம். உணர்வில் நவரசத்தை விரும்புகிறோம்.
உங்களுக்குப் பிடித்த உணவுதான் மற்றவர்களுக்கும் பிடிக்க வேண்டுமா?
உங்கள் ரசனைதான் எல்லோருக்கும் இருக்க வேண்டுமா?
வாழ்க்கையில் வகைகளை அனுபவிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
வாழ்க்கையில் எதிர்பாராதவற்றை எதிர்பார்க்க வேண்டும். அவை நேரும்போது எதிர்கொள்ள வேண்டும். அதனால் ஏற்படும் சிலிர்ப்பை, இன்பத்தை அனுபவிக்க வேண்டும்.
இந்த உலகத்தை நீங்கள் படைக்கவில்லை. எனவே, நீங்கள் விரும்புகிறபடிதான் இந்த உலகம் இருக்க வேண்டும் என்று நினைக்க உங்களுக்கு உரிமை இல்லை.
Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்