Mittwoch, Juli 14, 2004
தாயின் மேன்மை
உலகில் மனிதராய் பிறந்த ஆண் பெண் ஆகிய எல்லோரும்
குழந்தைப் பிராயத்தில் தாயின் அரவணைப்பிலே இருக்கின்றார்களள் ஆகவே குழந்தைகள் மனித சமூதாயத்தில்
நல்ல அறிவாளிகளாகவும் அல்லது முட்டாள்களாவதும்
குணசாலியாவதும் அல்லது தீயோனாவதும் பலசாலியாவதும்
நோயாளியாவதும் அல்லது சுயனலம் தேடும் மனிதர்கள்
ஆவதும் அந்தத்தாய் கொடுக்கும் பயிற்சியே முக்கிய ஆதாரம்
என்பதில் எதிவித சந்தேகமும் இல்லை
தாயைப் போல பிள்ளை என்ற பழமொழி பொய்ப்பதில்லை
தாய்மார்கள் குழந்தைகளுக்கு தேசப்பற்றையும் தாய் மொழி
மேன்மைகளையும் எடுத்துச்சொல்லி தேசாபிமானத்தின் பேரில்
உண்டான விருப்பாக அவர்களுக்கு சிறுவயதில் இருந்தே
மனதில் பதியவைக்க தாய்மார்கள் முயற்ச்சிக்க வேண்டும்
அது குழந்தைகளுக்கு பால்ய வழக்கமாகிவிடும்
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்றபடி அவர்கள்
மனதில் இருந்து எப்போதும் நீங்கமாட்டாது
குழந்தையிலே ஒரு தாய் நல்ல பழக்கங்களை சொல்லிச்சொல்லி
ஊட்டுவாளானால் அவர்களால் நமது தேசம் விடுதலை பெற்று
முன்னேறுவதில் தடையேதும் இல்லை மூட நம்பிக்கைகளும்
குருட்டுப் பழக்கவழக்கங்களும் நம் தேசத்தை விட்டு விலகவேண்டுமானால் அது நமது தாய்மாரின் உதவியில்லாமல்
விலகமாட்டாது நமது பண்பாடுகளையும் நாகரீகங்களையும்
பேணிப்பாதுகாப்பது தாயெனும் தெய்வங்களே வீரத்துக்கும்
விவேகத்துக்கும் சளைக்காத தாய்மார் வயிற்றில் பிறந்த
குழந்தைகளக்கு பயம் உண்டாகலாமா தாய்மார்கள் பயந்தவர்களாக இருப்பார்களானால் அவர்களால் வழர்க்கப்படும்
குழந்தைகளும் அடிமைக்குணம் உடையவர்களாக இருப்பார்கள்
மானமிழந்தபின் உயிர் வாழ்தல் ஏதடா மகனே என உபதேசம்
செய்த தாய்மாரும் நம் தேசத்தில் அக்காலத்தில் வாழ்திருக்கிறார்கள் அன்று தேசம் சுதந்திரத்தை அனுபவித்தது
இன்று நமது தேசம் உன்னத நிலையை அடைய வேண்டுமானால் தேசவிடுதலைக்காய் வேண்டிய புத்திமதிகளை
தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு புகட்டி நமது தமிழ்
இனத்துக்கே வீரம் செறிந்த புகழையும் சுதந்திர நாட்டையும்
உருவாக்குவார்கள் என்பது எங்கள் எதிர்பாப்பாகும்
Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்