மீண்டும் கால் பதிக்குமா
----------------------------------
இன்று இலங்கையில் நடக்கும் அரசியல் குழப்பங்களையெல்லாம்
தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு மீண்டும் ஈழத்தமிழர்களின் சமாதானப்பிரச்சனையில்
தலையிடுவதற்கு முயற்சிப்பது போன்ற நிலைப்பாட்டை தற்போது இந்தியா வெளிக்காட்டி
வருகின்றது ரசீவ்காந்தி மறைவுக்குப்பின் வந்த இந்திய அரசாங்கஙகள் இலங்கைப் பிரச்சனையில்
பெரும் பாலும் தலையிடாது ஒதுங்கியே இருந்து வந்துள்ளது ரணில் அரசும் விடுதலைப் புலிகளும்
நோர்வேயின் அனுசரணையுடன் சமாதான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டபோதும் அதற்குள்
மூக்கை நுளைக்காது பார்வையாளராகவே இருந்தது ஆனால் தற்போது இதில் இருந்து வெளியேறி
இலங்கைப்பிரச்சனையில் தலையிட முற்படுகிறதெனத் தோன்றுகின்றது
இதற்க்கு காரணம் இலங்கைப்பிரச்சனையில் மேற்குலக நாடுகளின் கூடுதல் கருசனையே
இதற்கும மேலாக அரசும் புலிகளும் செய்துகொண்ட போர் நிறுத்த ஒபந்தம் சிறு சிறு
தளம்பல்களுடன் இரண்டு வருடமாய் நீடிக்கின்றமையும் இதனால் புலிகளுக்கு சர்வதேசமட்டத்தில்
முன்பிருந்ததை விடவும் நன்மதிப்பும் மரியாதையும் உயர்ந்துவே காரணம்
இநியா நினைத்திருக்கலாம் வழமை போன்று புதிதாய் வரும் அரசும் புலிகளும் செய்யும்
ஒப்பந்தம் முன்பு மாதிரி மூன்று நான்கு மாதங்களில் முறிந்து விடும் என்று ஆனால்
எதவும் எதிர்பார்த்தமாதிரி நடைபெறவில்லை யப்பானின் ராசதந்திரிகளும் ஐரோப்பிய
ராசதந்திரிகளும் புலிகளை நாடிவந்து கதைப்பதும் கூட்டம் கூடுவதும் புலிகளை தனி
அரசு போல் மதிப்பதும் இந்தியாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கவேண்டும்
மேற்குலக நாடுகளின் பிரசன்னத்தால் இலங்கையில் தனது வல்லாதிக்க செல்வாக்கு
தளர்ந்து வருவதை உணர்ந்த இந்தியா மறைமுகமாக சில அரசியல் காய் நகர்த்தல்களை
செய்ய முற்படுகின்றது சமாதானத்துக்கு எதிராகக் குரல் கொடுக்கும் சந்திரிகாவை
பாடம் பண்ணி பக்குவப்படுத்தி இனவாத எச்சங்களையும் பின்னால் இழுத்து
உசுப்பிவிட்டு நோர்வே வெளியேறிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மீண்டும் கால்
பதிக்கப் பார்க்கின்றதோ என்ற ஐயப்பாடு எழுகின்றது சமீபகாலத்தில் கதிர்காமர்
கூட்டிய கூட்டம் ஒன்றில் இந்தியாவின் முன்நாள் அதிகாரியொருவர் புலிகளை
எச்சரிக்கும் தொனியில் வாய் மொழிந்திருக்கின்றார் பாதுகாப்பு மந்திரியும் காட்டம்
கலந்த தொனியில் பேசியிருக்கின்றார் ஆனால் புலிகளோ இந்தியாவிடம் நேசக்கரத்தை
நீட்டியவண்ணமே இருக்கின்றார்கள் மீண்டும் பேரினவாதிகளுடன் கைகொர்த்துக்கொண்டு
புலிகளை புறம் தள்ளிவிட்டு முடிவுகளை எடுக்கவேண்டாம் எனக்கேட்டிருக்கின்றார்கள்
முன்பு இந்தியாவை எதிர்த்து முழக்கமிட்ட சந்தாப்பவாத பேரினவாதிகள் இன்று
போற்றிப் புகழ் பாடுகின்றார்கள் இந்தியாவை உள்ளே வரும்படி அழைக்கின்றார்கள்
இந்தியாவையும் ஈழத்தமிழர்களையும் மீண்டும் முறுகல் நிலைக்கு கொண்டுவந்து
குழிர்காயப் பார்க்கின்றார்கள் இவர்களின் சூழ்ச்சியில் விழுந்து விடாது உண்மையான
நண்பர்களாகிய ஈழத்தமிழர்பால் அன்புக்கரம் நீட்டும் படி இந்தியாவை கேட்கின்றோம்
வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி புலிகளின் தடையை நீக்கி
பழயன மறந்து புதியன காண்பீர்களாக
Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்
சீதனம்
-----------
வரதட்சணை கொடுமை பற்றி எத்தனையோபேர் எத்தனையோ விதமாக எவ்வளவோ
சொல்லிவிட்டார்கள் ஆனால் அந்தக் கொடுமை இன்னும் நீடித்த வண்ணமே இருக்கின்றது
பெண்மையின் மேன்மை உணரப்படவில்லை அவளின் எதிர்காலமே பணத்தில்
அடங்கி இருக்கின்றது இது தமிழ் சமூகத்தில் பிறந்த பெண்கள் வாங்கிவந்த வரமா அல்லது
பெண்களை அடக்கி ஒடுக்கும் ஆண்களின் ஆணவப்போக்கா
ஒரு ஏழைப்பெண்ணிடம் எவ்வளவுதான் அறிவிருந்தாலும் அத்துடன்அழகிருந்தாலும்
திருமணம் என்னும் போது சீதனம் என்னும் பேய் தாண்டவம் ஆடுகின்றது பணம்
என்னும் முதலைகளை ஏவிவிட்டு பெண்ணின் தாய்தகப்பனை நடுங்கவைக்கின்றது
பெண் பிறப்பையே பெற்றவர்கள் வெறுக்கும் நிலையில் பொருளாதார நோக்கில்
ஆணைப்பெற்றவர்கள் ஆட்டிப்படைக்கின்றார்கள்
ஆண்மகன் அடி மடையனாக இருந்தாலும் அவனுக்கு நல்ல விலை கிடைக்கின்றது
ஒரு கன்னிப்பெண்ணின் களுத்தில் தாலி ஏறுவதற்கு பெற்ரோர்களையும் உடன்
பிறப்புக்களையும் கசக்கிப் பிழிய வேண்டி இருக்கின்றது பெண்ணை கருணையின்
வடிவம் எனறும்´´சத்தியின் உருவம் என்றும். தாய்மையின் பிறப்பிடம் என்றும்
போற்றும் தமிழ் சமதாயம் சீதனம் என்னும் பொல்லைக்கொண்டு பெண்களை
அடிப்பதும் ஏனோ சீர்திருத்தம் சமுதாயப் புரட்ச்சி என்று வாய்கிளிய பேசும்
இளைஞர்கள் கூட தங்களுக்கென்று திருமணப்பேச்சு வரும்போது தங்கள் பெற்ரோரை
கைகாட்டி விட்டு அவர்கள் பின் ஒழிந்து கொள்கின்றார்கள்
மகனுக்குப் பெண் தேடும் போது மனிதாபிமானத்தையே இழந்து விடுகின்றார்கள்
இவர்களால் எத்தனை ஏழைப்பெண்கள் திருமண வயதையும் தாண்டி முதிர் கன்னிகளாக
மனித உணர்ச்சிகளுக்கே அணைபோட்டு அளுதளுதே அறைகளில் முடங்கிக் கிடக்கின்றார்கள்
மலரவேண்டிய முட்டுக்கள் சீதனம் என்னும் விசம் பட்டு கருகிப்பொகின்றன
இளைஞர்களே சீதனம் என்னும் பூதம் தரும் பொருள் மூட்டையை வெறுத்து ஒதுக்குங்கள்
இந்தக் கொடுமையில் இருந்து நமது சமுதாயம் மீள வேண்டும்
சீதனம் இன்றி பெண்ணை கரம்பிடிக்க வாருங்கள் ஒரு பெண் மனைவியாக
உன்வீடு வருகின்றாள் என்றால் தெய்வமே வருவதென்று பொருள்
அவள் கற்புக்கு விலை இல்லை என்பார் புன்னகைக்கு பொன்நகை தகுமா
அகவே ஆண்களே பெண்கள்தான் உங்கள் குடும்ப விளக்கு அது எரிவதற்கு
எண்ணையாய் இருங்கள்
Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்