<$BlogRSDUrl$>

தாலி -------- தாலி என்பது இந்துப்பெண்களின் புனித ஆபரணமாக மதிக்கப்படுகின்றது அதிலும் தமிழ் பெண்களிடம் அது ஒரு வேலியாகவே அமைந்துள்ளது திருமணமான பெண்கள் திருமாங்கலியத்தை மேன்மை பொருந்திய ஆபரணமாக மதிக்கின்றார்கள் திருமணத்தின் போது மணமகனினால் மணமகள் களுத்தில் அணிவிக்கப்படும் மாங்கலியம் மணமக்களை குடும்ப பந்தத்தில் இணைத்துவிடுகின்றது அவர் சார்ந்தவர்களிடம் அப்பெண்ணுக்கு மறைமுகமான மதிப்பும் மரியாதையையும் ஏற்படுத்துகின்றது சுமங்கலி என்னும் நாமமும் சேர்ந்து விடுகின்றது காதல் எண்ணத்துடன் அவளை வட்டமிட்ட வாலிபர்கள் கூட பெண் ஏற்றுக்கொண்ட தாலிக்கு மதிப்பளிக்கின்றார்கள் மாற்றான் மனைவி என்று விலகிவிடுகின்றார்கள் தாலியை பல பெயர்களில் அழைக்கின்றார்கள் பண்டைய காலந்தொட்டே தாலி அணிவிக்கும் பண்பாடு தமிழர்களிடயே நிலவி வருகின்றது ஆதிகாலத்தில் குகைவாழ் மானிடர்களை அச்சுறுத்திய காட்டு விலங்குகளை வீரம் செறிந்த ஆண்மகன் அவற்றை அழித்து அந்த மிருகங்களின் கால் நகங்களையோ அல்லது பல்லுகளையோ எடுத்து மாலையாகத் தொடுத்து களுத்தில் அணிந்து கொள்வான் அது அவனின் வீரத்துக்கு அடையாளமாகும் சில சமையங்களில் அவனைச்சார்ந்தவர்கள் தலைவனாகவும் ஏற்றுக்கொள்வார்கள் தான் அணிந்த மாலைகளை மனைவிக்கு அணிவித்து மகிழ்வான் அந்த வீரன் மாற்றுக்குகைகளில் இருக்கும் ஆண்கள் வேறு குகைகளுக்குச்சென்று அங்கிருக்கும் பெண்களையும் பொருட்களையும் கவர்ந்து சென்றுவிடுவார்கள் சில நேரங்களில் இரண்டு குகைக்கும்சண்டை நடைபெறும் அதில் வெற்றி பெற்ற வீரன் தான் கவர்ந்து சென்ற பெண்ணில் ஒருத்திக்கு தனது வீரமாலையை அணிவித்து மனைவிஆக்கிக்கொள்வான் வீரனின் மாலையை அணிந்திருக்கும் பெண்ணை மற்ற ஆடவர்கள் அவன் இல்லாதபோதும் பயத்தின் காரணமாக நெருங்கமாட்டார்கள் இதுவே நாளடைவில் பெண்ணை மற்ற ஆடவர்களிடம் இருந்து பாதுகாக்கும் வேலியாகிவிட்டது இன்றுவரை தாலி ஒரு வேலிதான்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்
இந்து மதம் __________ இந்து மதம் இன்ன காலத்தில்தான் இன்னாரினால்த்தான் தோற்றுவிக்கப் பட்டதென்று கூறமுடியாத தொன்மையான மதம் இந்து மதம்தான் இந்தப் பெயர்கூட முன்பு இதற்கு இல்லை என்றே கூறுகின்றார்கள் நமக்கு ஆதாரமாக இருக்கும் வேதநூல்களிலும் கூட இந்தப்பெயர் குறிக்கப்படவில்லை நாடு கடந்த பிரித்தானியரே சிந்து நதிப்பிரதேசத்தை இந்து என்றும் பாரதத்தை இந்தியா என்றும் அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களை இந்துத் தெய்வங்கள் என்றும் அழைத்தார்கள் பல்லாயிரரம் அண்டகளுக்கு முன்பு உலகம் பூராவும் பரவியிருந்த ஓரே சமயம் எனபதால் அதற்கு பெயர் தேவைப்பட்டிருக்காது பின்பு பல சமயங்கள் தோன்றியதால் அவற்றை பிரித்துக் காட்டுவதற்காக ஒரு பெயர் தேவைப்பட்டிருக்கலாம் இந்து மதத்தில் உள்ள வேதங்களும் புராணங்களும் இதிகாசங்களும் நமக்குக்கிடைத்த பொக்கிசங்களாகும்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

This page is powered by Blogger. Isn't yours? Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது தேன்கூடு, தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி http://ta.wikipedia.org