<$BlogRSDUrl$>

வேலை பார்க்கும் பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் ---------------------------------------------------------------------------- இன்று சகல துறைகளிலும் முன்னேறி பார் போற்றும் அளவிற்கு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கும் பெண் சமுதாயத்தைப் பார்த்து மகிழ்வு கொள்ளும் அதேவேளை வேலைக்குப் போவதால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத்தான் தீர்வே இல்லாமல் இருக்கிறது. வேலை பார்க்கும் பெண்களுக்கு உள்ள பிரச்சினை நம் நாட்டுக்கு மட்டும் உரியது என்று எண்ண வேண்டõம். நாகரிகம் வளர்ந்து விட்டதாகக் கருதப்படும் மேலை நாடுகளிலும் கூட இந்தப் பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. பிரச்சினையின் தன்மையும், பரிமாணமும் வேண்டுமானால் வேறாக இருக்கலாம். அங்குள்ள சமுதாயச் சூழ்நிலையினை ஒட்டி தன்மையும் பரிமாணமும் வேறுபடுகின்றன. வேலை பார்க்கும் பெண்கள் பலவழிகளில் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர் சமுதாயக் கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்படுவது உண்மை. இத்தகைய மாற்றம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது என்றாலும், சமூகம், விரைந்து இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்வது மூலம், இன்றைக்கு குடும்பங்களில் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற பல சிக்கல்களைத் தவிர்த்திடலாம். குறிப்பாக ஆண்கள் தங்கள் மனோபாவத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். பெண்கள் அடிமைகள் என்கிற கருத்தில் இருந்து விடுபட வேண்டும். இன்றைய யுகத்திலும் கூட பெண்கள் வேலைக்குச் செல்வது தவறு என்று சுட்டிக்காட்டுபவர்கள் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். வேலைக்குப்போகும் பெண்களை சந்தேகக் கண்ணோட்டத்தில் நோக்கும் எத்தனையோ கணவன்மாரை நாம் காணத்தான் செய்கிறோம். சொந்தக்கணவன் மார்களே சந்தேகத்தில் நோக்கும் போது அடுத்தவர்களின் மனநிலை எப்படியிருக்கும்? வேலைக்குப்போவது என்பது ஒரு விளையாட்டு விஷயமோ அல்லது ஒரு வேடிக்கையான விஷயமோ அல்ல. பொருளாதார சிக்கலினால் தான் ஒரு பெண் வேலைக்குப் போகிறாள். சம்பாதிக்கவே அவள் வேலை ஒன்றைத்தேடுகிறாள் என்பதை அவளைச் சார்ந்தவர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல அவர்கள் மீது நம்பிக்கை வேண்டும். வாழ்க்கையில் சமபங்குதாரராக பெண்களை ஏற்றுக்கொள்கின்ற மனோபாவத்தை ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும். பெண் என்பவள் எப்போதும் ஒரு இயந்திரமாகவே செயல்படுகின்றாள். குடும்பப் பொறுப்பு என்ற ஒரு பாரியசுமை அவள் மீது திணிக்கப்படுகிறது. அத்தனையும் அவள் தூக்கி சுமந்து கொண்டிருக்கிறõள். பொருளாதாரத்திலும் சிக்கல் ஏற்படும்போது வேலைக்கு செல்ல தயாராகிறாள். பெண்கள் வேலைக்குப்போவது ஒரு வேடிக்கையானதோ நகைப்புக்குரிய விடயமாகவோ கொள்ள முடியாது. ஒரு குடும்பத்தை உயர்த்தும்வகையிலோ அல்லது சிக்கல்களைக் குறைக்கும் வகையிலோ அல்லது தனது கற்ற கல்வியைப் பயன்படுத்தும் வகையிலோ ஒரு பெண் வேலைக்குச் செல்கிறாள். இதனைப் பிரச்சினைக்குரிய விடயமாக கருதுவது முட்டாள்தனம். வேலைக்குப்போகும் சில பெண்கள் தவறு செய்கிறார்கள். இல்லை என்று நாம் மறுத்துக் கூறுவதற்கு இடமில்லை. ஆனால் அதே நேரம் எல்லாப் பெண்களையும் அப்படி நினைக்கக்கூடாது. தன் பிள்ளையை வேலைக்கனுப்பும் பெற்றோர் அவள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். ஒரு கணவன் வேலைக்குப்போகும் தன் மனைவி மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று ஒரு குடும்பத்திலுள்ள அனைவருமே பெண்கள் மீது நம்பிக்கை வைக்கவேண்டும். ஒரு பெண் ஏன் வேலைக்குப் போகிறாள்? எதற்காக வேலைக்குப்போகிறாள்? என்ற கேள்வியை உங்கள் மனதுக்குள் கேளுங்கள். அருமையான விடைகள் கிடைக்கும். பெண்களை சந்தேகக் கண்ணோடு நோக்காதீர்கள். இன்றைய பொரு ளாதார சூழ்நிலையில் குடும்பத்திலுள்ள பெண்கள் வேலைக்குப் போய் சம்பாதிப்பது சாத்தியமே! இருந்தாலும் அவள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வென்பது தான் கிடைப்பதாயில்லை. வேலை பார்க்கும் பெண்களின் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. ஆண்கள் விட்டுக் கொடுத்து தீர்க்காவிட்டால் பெண்கள் தாங்களாகவே இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடுவார்கள் என்பதில் ஐயமில்லை. அது நிச்சயமாக இருக்காது. எனவே வேலைக்குப் போகும் பெண்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு செயல்படுங்கள்!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

This page is powered by Blogger. Isn't yours? Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது தேன்கூடு, தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி http://ta.wikipedia.org