<$BlogRSDUrl$>

ஈழமும் யசீர் அரபாத்தும்

ஈபலஸ்தீன மக்கள் தம் 'தந்தை" என்று மதித்துப் போற்றும் பலஸ்தீனத்தின் மாபெரும் தலைவன் யசீர் அரபாத் 11.11.2004 அன்று காலையில் தனது 75 ஆவது அகவையில் பிரான்ஸ் நாட்டு மருத்துவமனையில் உயிர் நீத்தது பலஸ்தீன மக்களுக்கு மட்டுமல்ல விடுதலை வேட்கையுடைய அனைவருக்கும் ஓர் பேரிழப்பாகும். 1929 இல் எகிப்தில் கெய்ரோ நகரில் பலஸ்தீன பெற்றோருக்கு மகனாக தோன்றிய இவர் 1933 - 49 வரை ஜெருசலேத்தில் தனது மாமனுடன் வாழ்ந்து 1949 இல் குடியியல் பொறியியலாளராக பட்டம் பெற்றார். 1956 இல் எகிப்திய இராணுவத்தில் பணியாற்றிய இவர் பலஸ்தீன விடுதலை இயக்கத்தை (பி.எல்.ஓ.) அவ்வாண்டே உருவாக்கினார். பி.எல்.ஓ. அமைப்பை வழி நடத்தி இவர் அந்த இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று 1971 இல் பலஸ்தீன விடுதலை அமைப்பை ஜோர்தான் புறந்தள்ளியதால் லெபனானில் இவருடைய பணி அமைந்திருந்தது. 1974 இல் ஐ.நா. மன்றத்தில் ஒரு கையில் அமைதியின் சின்னமான ஒலிவ் இலையையும் மற்றைய கையில் துப்பாக்கியையும் ஏந்திய நிலையில் ஐ.நா. மன்றத்தில் இவர் நிகழ்த்திய முதல் உரை வரலாற்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியாகும்.1982 இல் லெபனான் பெய்ரூட்டில் இருந்த பலஸ்தீன விடுதலை இயக்கத்தை இஸ்ரேல் தாக்கியதன் விளைவாக அவர் துனிசியாவுக்குச் சென்றார். 1988 இல் பலஸ்தீன விடுதலை இயக்கத்தைப் பயங்கரவாத அமைப்பு என்று கூறி இஸ்ரேல் தடை செய்தது. எம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை இலங்கை அரசு அண்மைக் காலம் வரை பயங்கரவாத இயக்கம் என்று வர்ணித்து முறையாக இயங்க முடியாதவாறு தடைசெய்தது. இலங்கையைப் பொறுத்த வரையிலும் இவ்வியக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்ட போதும் அமெரிக்காஇ இங்கிலாந்து போன்ற நாடுகளில் விடுதலைப் புலிகளின் மேல் விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது. பலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கு பல நாடுகளில் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்தது. இந்நிலையிலும் தன் தாயகத்தை மீட்க யசீர் அரபாத் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அவருடைய வீரம் செறிந்த வரலாறுக்கு சான்று பகரும்.தம்மை அழிக்கும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு நல்குவதை எதிர்த்து வளைகுடா மோதலின் போதுஇ சதாம்சைனுக்கு தார்மீக ஆதரவு இராஜ தந்திர அடிப்படையில் இவர் வழங்கியது இன்று குறிப்பிடத்தக்கது.1993 இல் நோர்வேயின் தலை நகராகிய ஒஸ்லோவில் இஸ்ரேல்- பலஸ்தீன போரை முடிவிற்கு கொண்டு வர அமைதி ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த அமைதி ஒப்பந்தத்தை நிறைவேற்றியதற்காக இவருக்கும் அன்றைய இஸ்ரேல் பிரதமர் ராபினுக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டதை எதிர்த்து இஸ்ரேலின் அமைச்சரை யுதர்கள் சுட்டது இங்கு நினைவு கொள்ளத்தக்கது. இவை அனைத்தையும் கடந்த நிலையில் அமைதிக்காக பாடுபட்டதற்காக அரபாத்திற்கும் இஸ்ரேல் பிரதமர் ராபினுக்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவரின் வாழ்வின் உச்சக் கட்டமாக 1996 இல் நடைபெற்ற தேர்தலில் பலஸ்தீன மக்கள் இவரை தம் தலைவராக தேர்ந்தெடுத்து நிர்வாகத்தை இவர் கையில் ஒப்படைத்தனர்.இவ்விதம் வாழ்நாள் முழுவதும் பலஸ்தீன மண்ணை மீட்பதற்கு தம் உயிரை துச்சமென மதித்துப் போராடிய யசீர் அரபாத்தின் இறுதிக் கால வாழ்வு துன்பம் தோய்ந்ததாகவே விளங்கியது. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக யசீர் அரபாத் ரம்லாவிலுள்ள மாளிகையில் இருந்து வெளியே வரமுடியாதபடி வீட்டுச் சிறையிலே வைத்து அவரை இஸ்ரேலியர் துன்புறுத்தினர்.இவ்வாறு மக்களுக்காக அவர் நடாத்திய போராட்ட வாழ்வு தற்போது நிறைந்துள்ளது.இவ்வேளையில் ஈழத் தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்திற்கும் யசீர் அரபாத் நடாத்திய பலஸ்தீன விடுதலைப் போராட்டத்திற்கும் இடையில் நெருங்கிய உறவு உண்டென்பதை நாம் மறக்க முடியாது.இப்போராட்டத்திலுள்ள ஓர் அடிப்படை வேறுபாடு யசீர் அரபாத் இழந்த பலஸ்தீனத்தை மீட்கப் போராடினார். எம் தலைவன் வேலுப்பிள்ளை பிரபாகரனோ இருக்கின்ற தமிழீழ மண்ணை இழக்காதிருக்கப் போராடுகின்றார். ஒன்றுஇ இழந்த மண்ணை மீட்க நடாத்திய போராட்டம் மற்றது இருக்கின்ற மண்ணை இழக்காதிருக்க போராடும் போராட்டம். எனவேஇ தமிழீழப் போராட்டம் வரலாற்று அடிப்படையிலும்இ வாழ்வியல் - அளவியல் அடிப்படையிலும் வலுவுடையது என்பதை நாம் உணர்வோமாக.ழமும் யசீர் அரபாத்தும்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

This page is powered by Blogger. Isn't yours? Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது தேன்கூடு, தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி http://ta.wikipedia.org