<$BlogRSDUrl$>

மனைவி என்பவள் கணவனுக்கு அடிமையா? --------------------------------------------------------- பெற்ரோர்கள் ஒரு பெண்ணை திருமணப் பந்தம் மூலம் ஒரு ஆணிடம் ஒப்படைத்தபின் கணவனே கண்கண்ட தெய்வம் என்னும் பழமொழிக்கொப்ப ஆண் ஆதிக்கத்தின் கீழ் அகப்படுகின்றாள் எவ்வளவு படித்தவளாக இருந்தாலும் வேலை பார்ப்பவளாக இருந்தாலும் அவளுக்காக அந்தவீட்டின் சமையல்கட்டு அவளுக்காக காத்துக்கொண்டிருக்கும் காலை- மாலை- இரவு என உணவு தயாரிப்பதும் பெரும்பாலும் இவள் தலையினிலே வீளும் அங்கு முதியவர்கள் இருந்தால் அவர்களை பராமரிப்பதும் இவள் பொறுப்பாகும் பெரும்பாலும் கணவன்மார் மனைவியருக்கு உதவி செய்வது மிகவும் அரிதே கணவன் வேலைக்குப் போகும்போதும் அவருக்கான பணிவிடைகள் மனைவி செய்யவேண்டும் மனைவி வேலைக்குப் போகிறவராக இருந்தாலும் கணவனால் எந்த உதவியும் மனைவிக்கு கிட்டாது காலை எழுந்தது முதல் தூங்கப்போகும் வரை பதினைந்து பதினாறு மணித்தியாலங்கள் மனைவியானவள் வீட்டுக்காக உழைக்கின்றாள் இவற்றை கணவன் மார்கள் பொருட்படுத்துவதில்லை தங்கள் வேலைப்பளுகாரணமாக மனைவிமீது எரிந்து விளுவார்கள் தாங்கமுடியாத வேலைப்பழுவை சுமப்பவளிடம் சொற்கணைகளை வீசும் போது உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளைக் கொட்டி விடுகின்றாள் இதனால் குடும்பத்தில் முரண்பாடு சண்டை ஏற்படுகின்றது ஆண் ஆதிக்கம் அங்கு தலை தூக்குகின்றது மனைவியை அடித்து உதைத்து பெண்ணை அடிமை கொள்ள நினைக்கின்றது இதை குடும்பச் சண்டை என அயலவர்களும் சமூகமும் கண்டுகொள்வதில்லை குழந்தைகள் பிறந்தாலும் அவளே பார்க்கவேண்டும் தாலி என்னும் மூக்கணாங்கயிறு போட்டு அடக்கிவைத்திருக்கும் ஆணினம் பாலுறவிலும் அவர்கள் விரும்பிய நேரமெல்லாம்அவனது இச்சையைத் தணிப்பதற்கு அவள் உதவவேண்டும் பெண் விரும்பாதபோதும் நோயுற்றபோதும் சில கணவன்மார் பலாற்ககாரம் புரிகின்றார்கள் குழந்தை கிடைக்காவிட்டால் கணவன் மீது குறையிருந்தாலும் மனைவிமீதே பளியைப் போட்டுவிடுகின்றார்கள் ஆண்கள் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தாலும் மனைவி அதை தட்டிக் கேக்கக்கூடாது ஆனால் மனைவியானவள் தேவையிருந்து வேறு ஆடவருடன் கதைத்தால்கூட அதற்கு தக்க விளக்கமளிக்கவேண்டும் இல்லையேல் அவளுக்கு வேறுவிதமாக பட்டங்கட்டி கணவனே நீதிபததியா இருந்து தண்டனை வளங்கிவிடுவார் மனைவியானவள் அடங்கி ஒடுங்கிநாள்முழுவதும் அடிமை போன்று உழைக்கும் பெண்ணுக்குத்தான் நல்ல மனைவி எனும் முத்திரை குத்தப்படும் ஊதியம் இன்றி உழைக்கும் மனைவி சமத்துவம் பேசினால் நன்றிமறப்பர் சொல்லடி கொடுப்பர் சுருங்கக்கூறின் கணவனுக்குஅடிமையாக அவனது பாலுறவுக்கு தேவையாக அவனது பிள்ளைகளைச் சுமப்பவளாக வீடு வாசல்களை சுத்தம் பண்ணி பாதுகாப்பவளாக மேலும் தனது தேவைகளையும் உணவையும் கவனிப்பவளாக ஒரு அடிமைபோன்ற பெண் மனைவியென்ற பெயரில்ஆணுக்கு தேவைப்படுகின்றாள் இந்த இலச்சனத்தில் அவளிடம் இருந்தே சீதனம் சீர்வரிசை என்றுவாங்கிக்கொண்டுஅவளையே அடிமையாக்கும் விசித்திர சமூதாயத்தை என்னவென்று சொல்வது ஆணும் பெண்ணும் சமம் என்று எப்போது ஆண்கள் கருதுகின்றார்களோ அப்பொழுதுதான் பெண்ணுக்கு விடுதலை கிடைக்கும் அல்லது பெண்கள் எஙகள் பழைய சடங்கு சம்பிறுதாயங்களை தூக்கி எறியவேண்டும் புதிய விழிப்புணர்ச்சியுடன்சமுதாயத்தில் சகல நிலைகளிலும் சரிசமமாகப் பங்குபற்றவேண்டும் அடுப்பஙகரையும் அகல் விளக்கும் கதியென இருந்தால் கணவன் மாரென்ன நீங்கள் எல்லோருக்கும் அடிமைதான் பெண்களே உறங்கியது போதும் விழித்திடுங்கள் உங்கள் விடியல் நாளை உங்கள் கைகளில்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

This page is powered by Blogger. Isn't yours? Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது தேன்கூடு, தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி http://ta.wikipedia.org