Samstag, ஆகஸ்ட் 21, 2004
பெற்ற பிள்ளையும் பணமும்
அரிசி வியாபாரம் செய்து வந்த வியாபாரி ஒருவர் தம்முடைய இரண்டு மகன்களிடத்தில் மிகவும் பிரியமாக இருந்தார்.
அவருடைய மனைவி இறந்து விட்டாள். மகன்களுக்குத் திரு மணம் செய்து வைத்தார். அவருக்கு வயது அதிகமாகவே, அவருடைய சொத்துக் களை இரண்டு மகன்களுக்கும் பிரித்துக் கொடுத்தார்.
தம்மை அவர்கள் நன்றாகக் கவனித்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில், அவர் தமக்காக எதையும் வைத்துக் கொள்ளவில்லை.ஆரம்பத்தில் தந்தையை நன்றாகக் கவனித்து வந்த வர்கள் பின் நாட்களில் அலட்சியப்படுத்தி விட் டார்கள்.
அந்தக் கிழவர் மிகவும் வருத்தப்பட்டுத் தம்முடைய நண்பர் ஒருவாpடம் போய் விவரத் தைச் சொல்லி, ஆலோசனை கேட்டார்.
உம்மால் இனி ஒரு பயனும் இல்லை. சொத்துக் கள் யாவும் தங்கள் வசததில் ஆகிவிட்டது என்பதால் இவ்வாறு செய்கின்றனர் என்று கூறி ஒரு யோசனை சொல்லி அனுப்பினார்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, கிழவர் அறையினுள் போய்க் கதவைத் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு, ரூபாய்களை எண்ணினார்.
மகன்கள் இருவரும் கதவுத் துவாரத்தின் வழியாக உற்றுப் பார்த்தனர். அப்போது கத்தை கத்தையாக நோட்டுக்களை இரும்புப் பெட்டியில் வைத்துப் பூட்டினார் கிழவர். மறுநாள் காலையில், இரண்டு மகன்களும், அப்பா, இரவு இரும்புப் பெட்டியில், நிறைய நோட்டுக்களை வைத்தீர்களே, ஏது? என்று அன்போடு கேட்டனர்.
ஒரு நண்பனுக்குக் கடன் கொடுத்து இருந்தேன். அவன் இப்போது வட்டியும் அசலுமாகத் திருப்பித் தந்தான் என்றார் கிழவர்.
அன்று முதல் இரண்டு மகன்ளும் போட்டி போட்டுக் கொண்டு கிழவரை மிகவும் உபசாரத்துக் கவனித்துக் கொண்டனர்.கிழவர் நிம்மதியாகவும், சுகமாகவும் இருந்தார்;. ஒரு நாள் மகன்களுக்குத் தொpயாமல் கிழவர் இரும்புப் பெட்டியில் வைத்திருந்த ரூபாய்களை எடுத்துக் கொண்டு போய் அவருடைய நண்பாிடத்தில் திருப்பிக் கொடுத்து, விவரத்தைக் கூறி, அவர் கூறிய யோசனைக்கும் ரூபாய் தந்து உதவியதற்கும் நன்றி தெரிவித்தார் சில மாதங்களுக்குப் பிறகு கிழவர் திடீரென இறந்து விட்டார்.
அவருடைய மகன்கள் ஆவலோடு இரும்புப் பெட்டியைத் திறந்தனர். அதில் ஒரு குறிப்பு காணப்பட்டது. பணம் எதுவும் இல்லை.
தனக்கென்று எதையும் வைத்தக் கொள்ளாமல், பிள்ளைகளை நம்பி, எல்லாவற்றையும் பிரித்துக் கொடுத்து விட்டால் பிறகு சோற்றுக்குத் திண்டாட வேண்டிவரும். அம்மாதிரியான முட்டாள்தனத்தை எவரும் செய்யக்கூடாது. அதற்கு நானே உதாரணம் என்று இருந்தது.
Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்