<$BlogRSDUrl$>

தாய் வழி வந்த வாய் மொழி அதுவே தாய் மொழி ----------------------------------------------------------------- இயற்கையருளால் மாந்தனுக்கு அமைந்துள்ள ஒப்புயர்வில்லா ஆற்றலே ‘மொழி’. மாந்தனுக்குரிய முகாமையான அடையாளமே மொழிதான். மொழியென ஒன்று அமையாதிருந்தால், மாந்தனும் ஒருவகை விலங்கினைப் பிறப்பே. மாந்தனுக்கும் விலங்குகட்கும் புலனறிவு ஐந்தும் பொதுவானவை. ஆயினும், விலங்குகட்கில்லாச் சிறப்பாக, ஆறாவது அறிவை மாந்தன் பெற்றுள்ளமையால், விலங்கினின்றும் முற்றிலும் வேறுபட்டு உயர்நிலையில் விளங்குகிறான். இதனையே தொல்காப்பியர், “மக்கள் தாமே ஆறு அறிவுயிரே” என்று மாந்தனைச் சிறப்பிக்கிறார். தொடக்ககால மாந்தன், விலங்குகளைப் போன்றே காடு மலையெங்கும் இரைதேடி அலைந்து திரிந்தவன்தான். விலங்கொத்த தொடக்க நிலையில், மாந்தனின் ஆறாவது அறிவு மலர்ச்சியடையாமையால், அவனது மனமும் வளர்ச்சி பெறவில்லை. காலப்போக்கில் மாந்தனின் ஆறாம் அறிவு முதிர முதிர, இயல்பான மனவளர்ச்சி பெறலானான். மனவளர்ச்சியால் எண்ணும் - சிந்திக்கும் திறமும் பெருகிற்று. நாளடைவில், எண்ணத்தைப் புலப்படுத்தும் ஒலிக்கருவியாக, மொழியை அமைத்துக் கொண்டான். யாரோ சிலர் கூடி குறுகிய கால இடைவெளியில் உருவாக்கப்பட்டதோ அல்லது வேத ஆரியர் கூற்றுப்படி கடவுளால் படைக்கப்பட்டதோ அன்று மொழி. கழிபல ஊழிகளாக, கணக்கற்ற தலைமுறையாளரால் சிறிது சிறிதாக ஆக்கப்பெற்றதாகும். இவ்வாறு மொழி தோன்றி, மாந்தன் பேசக் கற்று 50,000 ஆண்டுகட்கு மேலாகிவிட்டன. தொடக்க காலத்து விலங்குநிலை மாந்தனோடு, இன்றைய அறிவு மாந்தனை ஒப்பு நோக்கினால், இடைப்பட்டகால மாந்த வளர்ச்சி வியப்பூட்டுவதாகும். விலங்கினங்கள் கணக்கற்ற ஊழிகளாக, இம்மியும் மாறாது அப்படியே இருப்பதற்கும் - மாந்தன் மட்டும் அறிவு வளம் பெற்று, செயற்கரிய செய்யும் திறம் கொண்டு, பல்துறை வல்லவனாக உலகை வியப்பிலாழ்த்தி வருவதற்கும் அடிப்படைக் கரணியம் தான் என்ன? மொழி! மாந்தனுக்கு இயற்கை வழங்கியுள்ள மொழியின் ற்றலே இத்துணை வளர்ச்சிகளுக்கும் கரணியமாகும். மாந்தனின் சிறப்புகளுக்கெல்லாம் மொழியே அடிப்படையாதலால், மொழியைப் போற்றிவளர்ப்பதும், காப்பதும், ஏன், வழிபடுவதும்கூட தலையாய கடமையாகும். மொழியின் அருமையுணர்ந்தமையால், நந்மொழியைத் ‘தமிழ்த்தாய்’ ‘தமிழன்னை’ என்றெல்லாம் சிறப்பிக்கிறோம். இவ்வழக்கு வேறெந்த மொழிக்கும் கிட்டாத, தமிழுக்கு மட்டுமே உரிய தனிச் சிறப்பாகும்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்
மனிதனைப் பயமுறுத்தும் உயிர்க்கொல்லி நோய் ---------------------------------------------------------------- மனிதனின் காலத்தை வெல்லும் விஞ்ஞான சாதனைகள் ஒருபுறம் விண்ணைத் துளைத்து உயர்ந்து கொண்டிருந்தாலும், மனிதனை வெல்லும் பேரழிவுச் சக்திகள் அவனுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் சவால் விட்டுக் கொண்டுதானிருக்கின்றன. அதுவும் வேறெந்த காலகட்டத்திலும் இல்லாத வகையில் விஞ்ஞான மனிதன் அசுர வேகத்தில் வளர்ந்துக் கொண்டிருக்கும் இந்நிலையில் கிட்டத்தட்ட மனித சமுதாயத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பேரழிவுச் சங்கதி எய்ட்ஸ் என்னும் உயிர்க்கொல்லி நோய். இன்னும் இதற்கான தீர்வு (சிகிச்சை) காணப்படாத நிலையில் இந்நோயை வரவிடாமல் தடுப்பதொன்றே இன்று இதை பரவவிடாமல் செய்வதற்கான ஒரே வழி. அவ்வகையில் இந்நோயினைப் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 1-ம் தேதி எய்ட்ஸ் விழிப்புணர்வு தினமாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் உலக நாடுகளின் தலைவர்கள் மக்களுக்கு எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு செய்திகளையும், இந்த உயிர்க்கொல்லியை எதிர்த்துப் போராட மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களையும் உலக மக்களுக்கு அறிவிப்பது வழக்கம். எய்ட்ஸ் என்னும் இந்த உயிர்க்கொல்லி நோய் வரக் காரணமாக இருப்பது எச்.ஐ.வி. எனும் வைரஸ். ஆனால், இங்கு பலர் எச்.ஐ.வி. கிருமி இருந்தாலே எய்ட்ஸ் நோய் வந்து விட்டதாக தவறாகக் கருதி விடுகிறார்கள். எச்.ஐ.வி. கிருமிகள் எய்ட்ஸ் வரக் காரணமாக இருப்பவைதான். ஆனால், அது நம் உடலின் எதிர்ப்பு சக்தி நிலைகளை பாதித்து பல வகையான உடல் நோய்களை உருவாக்கக்கூடிய சாத்தியக்கூறுகளை உருவாக்கும் போதுதான் எய்ட்ஸ் என்று குறிப்பிடப்படுகிறது. ஒருவரால் எச்.ஐ.வி. கிருமியுடன் எய்ட்ஸ் நோய் இல்லாமலே பல ஆண்டுகள் இருக்க முடியும். ஏன், எய்ட்ஸ் நோய் தாக்கப்படாமலேயே இயல்பாக வாழ்ந்து மடியும் சாத்தியக்கூறுகளும் உண்டு. இது அவரவரின் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தது. அதனால் எச்.ஐ.வி. பாஸிட்டிவ் என்றவுடனேயே அவருக்கு எய்ட்ஸ் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால், எய்ட்ஸ் நோயால் பாதிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. ஒருவர் தான் எச்.ஐ.வி. கிருமியால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்ற முடிவுக்கு எப்படி வருவது? ஒருவருக்குத் தன் கடந்த காலத்தில் எப்போதேனும் எச்.ஐ.வி. கிருமிக்காக சோதிக்கப்படாத இரத்தம் மற்றும் இரத்தக் கூறு மாற்று நிகழ்ந்திருந்தாலோ, தவறான உடலுறவு பழக்கங்கள் இருந்தாலோ, தான் உடலுறவு கொண்ட அந்த நபர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கக்கூடிய சாத்தியக்கூறு பற்றி அறியாத நிலையில் அவர் தன்னை எச்.ஐ.வி. கிருமிக்கான மருத்துவ சோதனைக்கு உட்படுத்திக் கொள்வது நல்லது. மேலும் ஊசி மூலம் போதைப் பொருள் ஏற்றிக்கொள்ளும் பழக்கமுடையோர்கள் (அவருக்கென்றில்லாமல், அவர் உடலுறவு கொள்ளும் நபருக்கு அப்பழக்கமிருக்கலாம். அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்). இப்படி இதுபோன்ற ஏதாவதொன்றில் ஒருவர் சம்பந்தப்பட்டவராக இருக்கும் பட்சத்தில் அவர் நிச்சயமாகத் தன்னை மருத்துவ சோதனைக்கு உட்படுத்திக் கொள்வது நல்லது. காரணம் எச்.ஐ.வி. கிருமி ஒருவரின் உடலுக்குள் நுழைந்து ஐந்து வருடங்களுக்குப் பிறகுதான் இக்கிருமியால் பாதிக்கப்பட்டதை மருத்துவ சோதனைகளால் உறுதி செய்ய முடியும். அதேநேரத்தில் எச்.ஐ.வி.யால் தாக்கப்பட்ட ஒருவர் ஐந்து வருடங்களுக்கு மேலாகியும் எந்த பாதிப்பும் இல்லாமல் இருப்பார். அதனால் அவர் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்படவில்லை என்ற முடிவுக்கு அவரே வந்து விடக் கூடாது. இன்றைய நிலையில் எச்.ஐ.வி. கிருமி இவர்களைத்தான் பாதிக்கும் என்று குறிப்பிட்ட பகுதியினரை மட்டும் காட்ட முடியாது. எச்சரிக்கையுடன் இல்லாத பட்சத்தில் நம்மில் யாரை வேண்டுமானாலும் எச்.ஐ.வி. தாக்கக்கூடும். இன்று புதிதாய் எச்.ஐ.வி. கிருமியால் தாக்கப்படுவோரில் பெரும்பான்மையோர் 19-லிருந்து 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கிறார்கள். சிறியவர்கள் மற்றும் வளரும் குழந்தைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. இவர்கள் பெரும்பாலும் பிறப்பின்போது தத்தம் தாயிடமிருந்தே இக்கிருமியை பெறுகிறார்கள். ஐ.நா.வின் எய்ட்ஸ் அறிக்கை இந்தியாவில் 40 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எச்.ஐ.வி. கிருமியால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளது. நகரங்களில் ஒரு சதவீதத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. எச்.ஐ.வி.யால் புதிதாக பாதிக்கப்பட்டோரில் 50 சதவிகிதத்திற்கும் மேல் 25 வயதுக்கு உட்பட்ட இளையவர்களே என்பது இங்கு அதிர்ச்சி தரும் செய்தி. உலகில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுவது இந்தியாவில்தான். அதேபோல மூன்றாம் உலக நாடுகளில்தான் எய்ட்ஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை விபரீதமாக உயர்ந்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணிகளாக சொல்லப்படுவது வறுமை, கல்வியின்மை, சமுதாயத்தின் சில பிரிவினரை ஒதுக்கி வைத்தல், பெண்கள் நடத்தப்படும் விதம் போன்றவைகளே. எச்.ஐ.வியால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அதிகம் பெண்களே பாதிக்கப்பட்டுள்ளனர். சிறு வயது பிரிவினரில் ஒரு ஆணுக்கு பதினாறு பெண்கள் என்ற விகிதத்தில் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை வறுமை, கல்வி, பெண்களுக்கான முன்னுரிமை இவற்றில் அரசு கவனம் செலுத்தாதவரை எச்.ஐ.வி.யின் தாக்கம் அபாயகரமாக அதிகரித்துக் கொண்டேயிருக்கும். இதிலிருந்து விடுபட நாம் செய்ய வேண்டியதெல்லாம் தனிநபர் மத்தியிலும், சமுதாய அளவிலும் எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான். நமது நாளைய சமுதாயம் எச்.ஐ.வி.யிலிருந்து விடுபட வேண்டுமானால் நாம் இன்றைய இளைய சமுதாயத்திடம் இதைப்பற்றி நிறைய பேச வேண்டும்; அவர்களை பேச விட வேண்டும். வீட்டிலும் கல்விக் கூடத்திலும் அவர்களுக்கு எய்ட்ஸ் சம்பந்தமான விளக்கங்களை, அதுகுறித்த அவர்களின் சந்தேகங்களுக்கான விடைகள் வழங்கப்பட வேண்டும். தனி நபர் ஒழுக்கத்தில் இங்கே நாம் கவனம் செலுத்துவதில்தான் எய்ட்ஸ§க்கு எதிரானப் போராட்டத்தில் நம் வெற்றியை தீர்மானிப்பதாய் இருக்கும்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்
கைலாசம் படுக்கையில் கிடக்காமல், யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் சட்டென்று போய்ச் சேர்ந்துவிட்டார். படித்துப் பெரியவர்களாகி, வெளிநாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் ரகுவும் வாசுவும் பறந்து வந்து, அப்பாவுக்குச் செய்யவேண்டிய காரியங்களையெல்லாம் அனைவரும் பாராட்டும் வகையில் செய்து முடித்தார்கள். சாரதாதான் பாவம்... கணவர் மறைந்த அதிர்ச்சியிலிருந்து விடுபட முடியாமல் தவித்துக்கொண்டிருக் கிறாள். கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் துணையாக, அந்நியோன்னியமாக வாழ்ந்துகொண்டிருந்த சமயத்தில், திடுமென்று தனியாகிப் போனாள் சாரதா. இன்னும் சில நாட்களில், ரகுவும் வாசுவும் தத்தம் மனைவிமார்களுடன் கிளம்பிப் போய்விடுவார்கள். அதன்பின் சாரதா என்ன செய்வாள்? ‘சாரதா! நான் முன்னாடி போயிட்டேன்னா, நீ இந்த வீட்டில் தனியாகவே இரு. அதற்குண்டான மனோபலத்தை ஆண்டவன் உனக்குக் கொடுப்பான். நீ முந்திக்கொண்டால், நானும் தனியாகத்தான் இருப்பேன். யாரிடமும் போய் இருக்கமாட்டேன்... என்ன?’ _ இது ஒரு எழுதப்படாத ஒப்பந்தம். ஆக, சாரதா வீட்டில் தனியாகத்தான் இருக்கப் போகிறாள்! நீண்ட பெருமூச்சு ஒன்றை வெளியேற்றினாள் சாரதா. ரகுவும் வாசுவும் குடும்பத்தோடு நடு அறையில் டி.வி. பார்த்துக்கொண்டிருந்தார்கள். ‘‘எல்லாம்தான் முடிஞ்சாச்சே... மேலே என்ன ப்ளான்?’’ \ பேச்சை ஆரம்பித்தாள் மிஸஸ் சுதா ரகு. ‘‘டிக்கெட் ‘புக்’ பண்ணியாச்சு. ஆனா, அப்பா கட்டளைப்படி அம்மா தனியாதான் இருக் கப்போறாளாம்!’’- -_இது ரகு. ‘‘சுதா கேட்டது அதை இல்லே! நாம இப்போ போனா அடுத்த ட்ரிப் இலங்கைக்கு எப்பவோ..? அதனாலே சொத்து பத்தெல்லாம் பற்றி முடிவு பண்ண வேணாமான்னு கேட்கறா. இல்லையா சுதா?’’ ‘‘அம்மாகிட்ட இதைப் பற்றி யார் கேட்கிறது.. எப்படிக் கேட்கிறது?’’ ‘‘சங்கடம்தான்.. இருந்தாலும் நடக்க வேண்டியது நடக்கணும் இல்லையா?’’ ‘‘இந்த வீட்டிலே அம்மா இருக்கப் போறாங்க. அவங்களுக்கப்புறம்தான் எல்லாம். டெபாசிட், ஷேர் எல்லாமே அம்மா பேரில்தானே இருக்கு? ஆனா, நகை நட்டு நிறைய இருக்கு!’’ ‘‘புரிஞ்சுதான் பேசறியா? கொட்டை கொட்டையாய் வைர மூக்குத்திகளையே அம்மா இன்னும் கழட்டலை. அதனால நகைகளைப் பற்றி எனக்கு நம்பிக்கை இல்லை. அவங்க உபயோகிக்காததுன்னு பார்த்தா, இருக்கிற இருபது ஏக்கர் நிலமும் அந்தப் பழைய பங்களாவும்தான்!’’ ‘‘அது கிடைச்சாலே ஜாக்பாட்தான்! கோடிக்கணக்குல தேறுமே!’’ ‘‘இவ்வளவு பேசறியே, நீதான் அம்மாகிட்ட கேளேன் சுதா! இல்லே, ரமா கேட்கட்டும். இதெல்லாம் பொம்பளைங்க விஷயம்தானே?’’ ‘‘ஐயோடா... அம்மா பிள்ளைங் களுக்கு நடுவுல நாங்க வரக்கூடாது! அது தப்பு.’’ ‘‘வாசு, நீ போய்க் கேளு! நீதான் அழகா, கோவையா பேசுவே!’’ ‘‘ஊஹ§ம்! அது மரியாதையா இருக்காது. நீதான் பெரியவன். நீ கேட்கறதுதான் முறை!’’ பூனைக்கு யார் மணி கட்டுவது? ‘‘ரகு, வாசு... கீழே வாங்களேன்.’’ ‘‘பிரச்னை தீர்ந்தது! அம்மாவே கூப்பிட்டுட்டாங்க! ஓடுங்க... இதான் சான்ஸ்! நிலம், வீடு ரெண்டையும் கேளுங்க!’’ போருக்கு அனுப்புவது போல், கணவர்களைத் தயார்படுத் தினார்கள். ‘‘ரமா, சுதா.. நீங்களும் வந்தா தைரியமா இருக்கும்!’’ ‘‘வேண்டாம்! நாங்கதான் சொல்லிக் கொடுத்தோம்னு அம்மா நினைப்பாங்க!’’ ரகுவும் வாசுவும் நல்ல பிள்ளைகளாக அம்மாவைப் பார்க்க ஓடினார்கள். சாரதா இரண்டு சூட்கேஸ்களில் கைலாசத்தின் உடைகளை அடுக்கிக் கொண்டிருந்தாள். அவள் நெஞ்சு கனத்தது. மகன்களைப் பாசத்துடன் அணைத்துக்கொண்டாள். ‘‘இதெல்லாம் அப்பாவோட டிரஸ்! வேட்டி, ஷர்ட், எல்லாம்கூட இருக்கு. எப்பவுமே உங்களுக்கு அப்பா வோட டிரஸ்னா ஒரு தனி ஆசை யாச்சே! அவருக்குத் தெரியாமல் போட்டுப் பார்ப்பீங்க. அப்புறம், அப்பாகிட்ட திட்டு வாங்குவீங்க. இப்போ... (கண்களைத் துடைத்தபடி) இதையெல்லாம் இனிமே நீங்கதான் போட்டுக்கணும். இதை நீங்க போட்டுக்கிட்டா, அவரே உங்ககூட இருக்கிற மாதிரி ஒரு திருப்தி இருக்கும். ஆளுக்கொரு சூட்கேஸ் எடுத்துக்குங்க. கொண்டுபோய் ரமாகிட்டயும் சுதாகிட்டயும் காட்டுங்க. சந்தோஷப்படுவாங்க!’’ பெட்டிகளுடன் மாடி ஏறி வந்தவர்களை நான்கு விழிகள் எரித்துவிடுவது போல் பார்த்தன. ‘‘எல்லா கண்றாவியையும் பார்த்தோம். பாத்திரக்காரனுக்குப் போடவேண்டியதையெல்லாம் உங்க தலையில கட்டிட்டாங்களாக்கும்! தூக்கிப் போடுங்க. சொத்தைக் கேட்டு வாங்குங்கன்னா, சொத்தையைக் கொண்டுவந்திருக்கீங்க!’’ ‘‘படபடன்னு பேசிப் பிரயோஜனமில்லை சுதா. இது பொறுமையா யோசிக்கவேண்டிய விஷயம். இந்தப் பழசையெல்லாம் டிஸ்போஸ் பண்ணணும். ஆனா, அம்மாவின் மனசு நோகக்கூடாது. முதல்ல அம்மாகிட்டேர்ந்து நிலமும் வீடும் நம்ம கைக்கு வரட்டும். யோசியுங்க!’’ நால்வரும் யோசித்து, கூட்டிக் கழித்து, வகுத்துப் பெருக்கி ஒரு சாணக்கியத்தனமான முடிவுக்கு வந்தனர். ‘‘ஐயோ... ஐயோ! பிரமாதமான ஐடியா. நல்லபடியா முடிச்சுட்டு வாங்க. அம்மாவின் மனசைத் தொட்டுடுவீங்க. நமக்கு ஜாக்பாட்தான்! நிலமும் வீடும் நம்ம கையில். மத்தது அம்மாவுக்குப் பிறகு... தொடரும்...’’ ‘‘அம்மா! நாங்க எவ்வளவு நல்ல காரியம் செய்துட்டு வந்திருக்கோம் தெரியுமா? மனசு நிறைஞ்சு இருக்கு. அப்பா ரொம்ப சந்தோஷப் பட்டிருப்பார்!’’ ‘‘என்னடா.... அப்பா டிரஸ்ஸைப் போட்டிருக்கீங்களா? கிட்ட வாங்க...’’ அம்மா கைகளை விரித்து குழந்தை களைக் கூப்பிடுவது போல அழைத்தாள். ‘‘இல்லம்மா! நம்ம அப்பா மாதிரி ரொம்ப பேரால வாழமுடியாதும்மா! அவர் கர்ணன் மாதிரி! எத்தனை பேரைப் படிக்க வெச்சிருக்கார்... எத்தனை பேருக்கு வேலை வாங்கித் தந்திருக்கார்...’’ ‘‘அப்பா அள்ளி அள்ளிக் கொடுப் பார்டா கண்ணா! Ôகேட்டுக் கொடுத் தால் பிச்சை... கேட்காமல் கொடுக் கறதுதான் தர்மம்’னு சொல்வார்!ÕÕ ‘‘அதேதாம்மா! நாங்களும் இப்ப அதைத்தான் செய்துட்டு வரோம்.ÕÕ அம்மாவுக்குப் புரியவில்லை. ‘‘நீ கொடுத்தியே, அப்பாவோட டிரஸ்... அது எல்லாத்தையும் முதியோர் இல்லங்களுக்கும் அநாதை இல்லங்களுக்கும் கொடுத்துட்டோம். அவங்களுக்கு ரொம்ப உபயோகமா இருக்கும், இல்லையாம்மா? வாசுகூட ‘அம்மாவிடம் சொல்லிட்டுக் கொடுக்கலாமேÕன்னான். ரமாவும் சுதாவும் ‘நல்ல காரியத்தைச் செய்துட்டுச் சொல்லுங்க! அம்மா சந்தோஷப்படுவாங்கÕன்னு சொன்னாங்க...’’ _ சோகத்தையும் தர்ம சிந்தனையையும் சேர்த்துப் பிழிந்து கொடுத்தான் ரகு! சாரதா பதிலே பேசாமல், அவர்களை அணைத்து, தலையில் கைகளை வைத்து ஆசி கூறினாள். ‘அம்மா உருகிவிட்டாள்.. மனம் இளகிவிட்டாள். இனிமேல் அப்பாவின் சொத்து நம் கைக்கு வர எந்தத் தடையும் இல்லை!’ மறுநாள் காலையில் வழக்கத்துக்கு மாறாக கீழே அம்மாவைப் பார்க்கச் சில புதுமுகங்கள். கையில் ஃபைல்கள், பேப்பர்கள், இத்யாதி இத்யாதி... யார் இவர்கள்? சாரதா கூப்பிட்டனுப்ப, கீழே இறங்கி வந்தார்கள். நால்வரையும் சாரதா புன்னகையால் வரவேற்றாள். ‘‘இவன் ரகு, இது வாசு... ரமா, சுதா நீங்களும் வந்து உட் காருங்க! இவங்க என் மருமகள்கள். இவர்தான் ராமச்சந் திரன். நம்ம வக்கீல்...’’_ சாரதாவின் முறையான அறிமுகம். வக்கீலின் வரவு, சொத்து பற்றிய செய்தியைக் கோடிட்டுக் காட்ட, வாரிசுகளின் முகங்களில் மகிழ்ச்சி! அட! அம்மாவின் மூக்குத்திகளைக் காணோமே! மனசு வந்ததே கழட்ட! மருமகள்களின் பார்வையில் பட்ட முக்கியமான தடயம்! நால்வரையும் நோட்டம் விட்டார் வக்கீல். ‘‘அம்மா உங்களைப் பத்தியெல்லாம் ரொம்ப உயர்வாகச் சொன்னாங்க. சந்தோஷம்! நீங்க நல்லா இருக்கணும்!’’ என்றார். ‘‘என் பிள்ளைகளையும் மருமகள்களையும் எவ்வளவு புகழ்ந் தாலும் தகும். திடீரென்று எனக்கு ஏற்பட்ட இந்தப் பிரிவில், கண்களைக் கட்டிக் காட்டில்விட்ட மாதிரி ஒரு கலக்கம், திகில், துக்கம்... இதுக்கு நடுவில் என்னைத் தெளிவாகச் சிந்திக்க வெச்சதே இவங்களுடைய தர்ம சிந்தனைதான்! தங்களைவிடக் கீழ் நிலையில் உள்ளவர்களிடம் இவர்கள் காட்டும் கருணையில் நான் மெய்சிலிர்த்துப் போனேன். ‘தர்மம் தலைகாக்கும்’னு இவங்க நல்லாவே உணர்ந்திருக்காங்க...’’ அம்மா புகழப் புகழ, ரகுவும் வாசுவும் அவர்களின் மனைவிமார்களும் ஆனந்தத்தின் உச்சத்துக்கே போயிட்டாங்க! ராமச்சந்திரன் தன் பையைத் திறந்தார். ‘‘பத்திரத்தைப் படிக்கட்டுமா அம்மா!’’ ‘‘வக்கீல் சார்... நானே சொல்றேன்! ரகு, வாசு... அப்பா நம்மகூட இல்லையேங்கற துக்கத்தைத் தவிர, அவர் நமக்கு ஒரு குறையும் வைக்கலே! நீங்க முதியோர் இல்லம், அநாதை இல்லம் பற்றிப் பேசினது எனக்குள் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது! உங்களைப் போலவே நானும் உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி தரப்போறேன்...’’ ‘ஓகோ! நாம எதிர்பார்த்தது சொத்து மட்டும்தான். ஆனா, அம்மா சொல்றதைப் பார்த்தா எல்லாத்தையுமே பிரிச்சுக் கொடுத்துடுவாங்க போலிருக்கே!’ வாரிசுதாரர்களின் மனம் பட்டாம்பூச்சியாகப் படபடத்தது. சாரதா தொடர்ந்தாள்... ‘‘வக்கீலிடம் சொல்லி எல்லா ஏற்பாடும் செய்துட் டேன். நிலத்தையும் பங்களாவையும் காந்தி அநாதை ஆசிரமத்துக்கும், என் நகைகளை வித்து ஒரு டிரஸ்ட் ஏற்படுத்தி, ஏழைப் பெண்களின் கல்யாணத்துக்கு உதவும் படியும் பத்திரம் தயாராயிட்டுது. சம்பந்தப்பட்ட நிர்வாகிகளும் வந்திருக்காங்க. ரகு, வாசு... என்னுடைய இந்த தர்ம சிந்தனைக்கு முன்னோடியே நீங்கதானே! வாங்க, நான் கையெழுத்துப் போட்டாச்சு. நீங்களும் போடுங்க...’’ வக்கீல் காட்டிய இடங்களில் எல்லாம் ரகுவும் வாசுவும் தேள் கொட்டிய திருடர்களைப் போல வாயைத் திறக்காமல் கையெழுத்துப் போட, ரமாவும் சுதாவும் தலை சுற்றி சோபாவில் சரிந்தனர்! ‘‘என் பிள்ளைகளைப் பற்றி நான் ரொம்பவும் பெருமைப்படுகிறேன்...’’ என்று ராமச்சந்திரனிடம் சாரதா கூறிக்கொண்டிருந்தது அவர்கள் காதில் விழுந்ததா?

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்
இன்றைய நிலையில் தமிழ் பெண்களை அறியாமலே புரட்சி ஒன்று அரங்கேறி வருகின்றது ------------------------------------------------------------------------------------------------------------------------- பெண்ணிலை மாற்றம் தொடர்பாகப் பலரும் பலவிதமான கருத்துக்களையும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனினும் இவர்கள் யாரது கருத்திற்கும் எட்டாமல் சத்தமேயில்லாமல் புரட்சி ஒன்று நடந்துகொண்டுதானிருக்கிறது. தாங்கள் ஒரு புரட்சி செய்வதை அப்பெண்கள் அறியாமலிருப்பதும், அப்பெண்ணின் புரட்சிகர நடவடிக்கையைச் சமூகம் ஏற்றுக்கொள்ளாமல் போவதோடு அதனை விமர்சிப்பதும் அத்தகைய புரட்சியை மேற்கொள்ள பிறபெண்கள் முயலாததற்குக் காரணமாக அமைகிறது. கல்வியறிவு, பொருளாதாரப்பலம் என்பனவற்றையெல்லாம் மீறி ஒரு பெண்ணின் தன்மானம் கேள்விக்குள்ளாக்கப்படும் போது, அப்பெண் பொங்கியெழும் சம்பவங்கள் இடம்பெறினும் பின்னர் அப்பெண்ணுக்குப் போதிய ஆதரவு சமூகத்திலும் குடும்பத்திலும் கிடைக்காமற் போவது அப்பெண்ணை குற்றவுணர்விற்கு உள்ளாக்குகிறது. தான் காதலித்த ஒருவனை ஒரு பெண் மறுக்கத் தலைப்படும்போது, அப்பெண்ணின் நடத்தை கேள்விக்குள்ளாகிறது. சமூகத்தின் அப்பார்வை ஆணிண் அடக்கு முறைகளுக்குப் பெண்ணைப் பணிந்து போகச் செய்கிறது. தான் காதலித்த ஒருவன், 'சீதனமில்லாமல் வீட்டுக்காரர் கல்யாணம் செய்யவிட மாட்டினமாம்' என்று தன் காதலைப் பெற்றோரைக் காட்டி விலை பேசிய போது, அவனைத் திருமணம் செய்வதற்காக இரண்டு வருடங்கள் உழைத்துப் பணம் சேர்த்தார் ஒரு பட்டதாரிப்பெண். இரண்டு வருடக் கடின உழைப்பின் பின் பணத்திற்காக என்னை மறுதலித்த ஒருவன் என்ற எண்ணம் மனதில் விதைக்கப்பட்ட பின்னும் அப்பெண் அவனை மணக்கத் துணிந்தது காதலுக்காகவல்ல, குடும்பத்தின், சமூகத்தின் நிர்ப்பந்தத்திற்காகவே. தான் அவனை மறுப்பின் தனதும் தன கீழுள்ள சகோதரிகளினதும் நடத்தை கேள்விக்குள்ளாக்கப்படும் என்ற நிலையில் அப்பெண் மனதில் தோன்றிய வெறுப்புடனேயே மணவாழ்க்கைக்குள் நுழைகிறாள். இன்னொரு பெண்ணோ பலவருடங்களாகத் தன்னை விரும்பிய ஒருவன் சீதனம் வேண்டித் தன்னை மறுத்த போது, அவனை மறுக்கும் உரிமை தனக்குமுண்டென உணர்ந்தாள். திருமண தினத்தன்று அருட்தந்தை 'இவரைத் திருமணம் புரியச் சம்மதமா?' என வினாவியபோது அவனை மறுத்தாள். 'தான் செய்தது சரியே' என்ற நிமிர்வுடன் அவள் வெளியேறிச்சென்ற போது அந்த 'நிமிர்வு' சமூகத்தின் பார்வையில் 'திமிர்' ஆனது. அந்த நிமிர்வை அவள் தொடர்ந்து பேண முடியாத வகையில் குடும்பமும் சமூகமும் அவளை நிந்தித்தபோது 'நீ செய்தது சரியே' என அவளைத் தட்டிக்கொடுத்து உளப்பூர்வமான ஆதரவைத் தர யாரும் வராத நிலையில், பிறப்பாலும் வளர்ப்பாலும், 'ஒரு தமிழ்ப்பெண் இப்படித்தான் இருக்கவேண்டும்' என்றூட்டப்பட்ட உணர்வுகளே அவளை மனச்சிதைவு நிலைக்குள்ளாக்கியபோது அவளது புரட்சி பயனற்றதாகிப்போனது. சூழ நின்ற சமூகம், அப்பெண்ணிற்கு ஏற்பட்டிருக்கக்கூடிய மன வேதனையையும், அதன் பலனாகவே எதிர்காலத்திலும் தன் திருமண வாழ்வைக் கேள்விக்குறியாக்கும் இத்தகைய முடிவையெடுக்க அவள் துணிந்தாள் என்பதையும் புரிந்துகொள்ளாது. 'ஒரு பொம்பிளை இப்பிடியே நடக்கிறது' எனக் கடுமையாக விமர்சித்தது. மறைமுகமாக 'ஒரு ஆம்பிளை செய்தாலும் பரவாயில்லை' என்ற கருத்தும் வெளிப்படுத்தப்பட்டது. தன் தன்மானத்திற்கு விழுந்த அடியைத்திருப்பிக்கொடுக்க முனைந்த அவள் நிமிர்வு 'அவளுக்கு ஆணவம் தலைக்கேறிப்போச்சு' என விமர்சிக்கப்பட்டது. இத்தகைய விமர்சனங்கள் அப்பெண்ணைத் தன்னுள் மேலும் ஒடுங்கச்செய்தது. இப்பெண்ணுக்கு உளப்பூர்வமான ஆதரவைக் கொடுத்து இனிவரும் வாழ்க்கையை அவள் நம்பிக்கையுடன் வாழ வழிகாட்டப்போவது யார்? பெண்கள் துணிச்சலான முடிவுகளை எடுத்துத் தமது வாழ்வைத் தாமே தீர்மானிக்கத் தயங்குவதற்குச் சமூகத்தின் இத்தகைய விமர்சனங்களே காரணமாக அமைகின்றன. எதிர்பார்க்காத இடத்தில் இன்னொரு பெண்ணைச் சந்திக்க நேர்ந்தது. அந்தப் பெண்ணின் வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள் 'இந்தப் பெண்ணிடம் இவ வளவு தெளிவா? என ஆச்சரியப்படவைத்தன. பதினேழு வயதுடைய அப்பெண் கல்வியறிவோ, பொருளாதாரப் பலமோ அற்றவள். ஒரு வயதுக் குழந்தையை இடுப்பில் ஏந்திய வண்ணம் வந்த அப்பெண்ணை ஏனைய பெண்கள் நோக்கியவிதம், சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத செயலொன்றை அவள் புரிந்திருக்கவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. அப்பெண்ணுடன் தனியே பேசமுற்பட்ட எனக்கு அப்பெண்மேல் பெருமதிப்பு ஏற்பட்டது. திருமணம் செய்வான் என்ற நம்பிக்கையில் ஒருவனிடம் தன்னை இழந்து கர்ப்பிணியானாள். திருமணம் செய்ய அவன் மறுத்தபோது நீதிமன்றத்தை அணுகினாள். அவளைத் திருமணஞ்செய்யும்படி நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது அப்பெண் எடுத்த முடிவு வியக்கத்தக்கது. 'என்னை ஏமாத்தினவனை ஏனக்கா நான் கல்யாணம் செய்யவேணும்? என்ரை பிள்ளைகளுக்குத் தகப்பன் ஆரெண்டு சனத்துக்குக் காட்டத்தான் நான் கோர்ட்டிற்குப் போனனான்' சுயமரியாதை மிக்கதொரு பதில். சமூகத்தினரால் ஏற்கமுடியாத பதில். ஏனெனில் சமூகத்தின் பார்வையில் அவள் நடத்தை சரியில்லாதவள் பிள்ளை, தகப்பன் பேர் தெரியாத பிள்ளை. கூலி வேலைக்குச் சென்று தன் மகனை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அப்பெண்ணை அவளைச் சூழவுள்ளோர் மதிக்கத் தவறியதேன்? அரச திணைக்களமொன்றில் தொழில் புரியும் பெண்ணொருவர் சோகம் ததும்பிய முகத்துடனேயே தினமும் வேலைக்கு வருவார். எந்நேரமும் 'அவர்லு} அவர்லு}' என்று தனது கணவரைப்பற்றியே ஏதாவது கூறிக்கொண்டிருப்பார். சிறிது காலமாக எதுவும் பேசாது அப்பெண் அமைதியாயிருந்தது ஆச்சரியமளித்தது. 'என்ன கதையையே காணேல்லை' என்ற கேள்விக்குப் பதிலாக அப்பெண் கண்ணீர் உருக்கத் தொடங்கினாள். திருமணம் செய்த நாளிலிருந்தே 'நான் உன்னை வீட்டுக்காரரின்ரை ஆய்க்கினைக்காண்டித்தான் கட்டினனான்' என்று சண்டைபிடித்து அப்பெண்ணை உளவியல் hPதியான வன்முறைக்குள்ளாக்கிய அவளது கணவன், அச்சண்டையின் உச்சக்கட்டமாக குழந்தையைப் பிரசவித்த பதினான்காம் நாள் தனது அடிவயிற்றில் அடித்தததாகக் கூறி 'இப்பவும் அடி வயிற்றிலை அந்த வலி நிரந்தரமாத் தங்கீற்றுதக்கா' என்று அழுதாள். அண்மையில் தனது கணவன் ஒரு பெண்ணை வீட்டிற்கே அழைத்து வந்ததைக் கூறியபோது, வேதனையிலும் அவமானத்திலும் அவள் முகம் கன்றியது. 'என்னாலை அந்த அவமானத்தைத் தாங்க முடியேல்லையக்கா அப்பவே பிள்ளையைத் தூக்கிக்கொண்டு அம்மா வீட்டை போயிட்டன். தாயும் மகனுமாவந்து நிற்கினம். மணவிலக்குத் தரட்டாம், சீதனமா வாங்கின காசைத்திருப்பித் தாங்கோ, மணவிலக்குத் தாறன் என்று சொல்லிப்போட்டன். என்ர காசை ஏனக்கா நான் விடுவான்' என்று ஆவேசப்பட்டாள். இவ வளவு துணிச்சலும், தன்னம்பிக்கையும் உரிமைக்காகப் போராடும் குணமும் இந்தச் சின்ன உருவத்தினுள்ளா என்ற ஆச்சரியங்கலந்த மௌனத்தில் இருந்த என்னை 'என்னக்கா! நான் செய்தது பிழையே, நீங்களும் பேசாமல் இருக்கிறீங்கள்?' என்று கவலை தொனிக்க வினாவினாள். சுற்றமும் உறவும் ஏற்படுத்திய கண்டனங்களும், விமர்சனங்களும் உளாPதியான ஆதரவைத் தேடும் மனோநிலையை அவளுள் ஏற்படுத்தியிருப்பதை உணர்ந்து ஆதரவுடன் அவள் கைகளைப் பற்றினேன். 'மூன்று வருட காலமாக வேதனையை அனுபவித்த உங்களுக்குத்தான் நீங்கள் எடுத்த முடிவின் பரிமாணம் தெரியும். நீங்கள் சரியான முடிவையே எடுத்திருப்பீர்கள். மற்றவர்களின் விமர்சனத்தையிட்டுக் கவலைப்படாதீர்கள்' என்று கூறினேன். 'மூன்று வருடத்தில் எனது திருமண வாழ்க்கை முறிந்தது எனக்கு எவ வளவு வேதனையாயிருக்கும் என்று இந்தச் சனத்திற்கு ஏனக்கா விளங்குதில்லை?' என்று கண்ணில் நீருடன் வினாவினாள். 'உங்கள் வாழ்க்கை உங்கள் பொறுப்புத்தான். நீங்கள் யாருக்கும் விளக்கம் கொடுக்கவேண்டிய தேவையில்லை. பிள்ளையை நல்லவனாக வளர்ப்பதில் கவனத்தைச் செலுத்துங்கள்' என்று மட்டுமே என்னால ஆறுதல் கூறமுடிந்தது. சமூகத்தில் இடம்பெறும் இத்தகைய சம்பவங்கள் வெறும் வம்புக்கு வாய்ப்புத்தரும் சம்பவங்களாகாமல் முற்போக்கான மாற்றம் ஆக வேண்டுமானால் முதலில் நாங்கள் - பெண்கள் மாறவேண்டும். பாதிக்கப்படும் பெண்ணைப் புரிந்துகொள்ளாமல், அவளின் நடவடிக்கைகளை விமர்சிப்பதன் மூலம் மேலும் அவளுக்கு வேதனையை வழங்கும் இத்தகைய போக்கு மாறவேண்டும். புரிந்துணர்வுள்ள பெண் சமுதாயமொன்று உருவாவதன் மூலமே சமூகத்தில் மாற்றங்கள் நிகழும். வீடும் நாடும் வளம

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

This page is powered by Blogger. Isn't yours? Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது தேன்கூடு, தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி http://ta.wikipedia.org