<$BlogRSDUrl$>

ஐம்பதாவது அகவை காணும் பிரபாகரன்

தேசத்துரோகிகளையும், காட்டிக் கொடுப்பவர்களையும் இனங்கண்டு வேட்டையாடும் படலம் ஆரம்பமானது. 1976 ஆம் ஆண்டு ஆடிமாதம் 2 ஆம் திகதி உரும்பிராயைச் சேர்ந்த நடராசா என்ற பெற்றோல் நிலையை முகாமையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். 1977 ஆம் ஆண்டு மாசி மாதம் மாவிட்டபுரத்தில் வைத்து கருணாநிதி என்ற பொலிஸ் கான்ஸ்டபிள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1977 வைகாசி 18 ஆம் திகதி இனுவிலில் வைத்து இரு தமிழ் பொலிஸ் கான்ஸ்டபிள்களும், 1978 தை 27 ஆம் திகதி கொழும்பில் வைத்து பொத்துவில் தொகுதியின் தமிழர் கூýட்டணி வேட்பாளர் கனகரத்தினமும் சுட்டுக் கொல்லப்பட்டார். 1978 சித்திரை 7 ஆம் திகதி, கொழும்பு 4 ஆம் மாடிசித்திரவதையில் புகழ்பெற்ற இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை உட்பட இலங்கை பொலிஸின் சி.ஐ.டிபிரிவைச் சேர்ந்த 4 பேர் முருங்கன்- மடு வீதிக்கு உட்புறமான காட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். தமிழ் இளைஞர்களை கொன்றொழிப்பதிலும், சித்திரவதைகள் மேற்கொள்வதிலும் பஸ்தியாம்பிள்ளை முன்னின்று செயற்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1978 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 25 ஆம் திகதி முதன் முறையாக புதிய தமிழ்ப் புலிகள் இயக்கத்தின் இராணுவ நடவடிக்கைகளிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ நடவடிக்கைகள் வரை மொத்தமாக 11 இராணுவ நடவடிக்கைகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பகிரங்கமாக உரிமை கோரினர். இதையடுத்து, 1978 வைகாசி 19 ஆம் திகதி 'தமிழீழ விடுதலைப் புலிகள் தடைச்சட்டம்" இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கொடூரமான சட்டம் தமிழ் மக்களை அழிப்பதற்கு சகல விதமான அதிகாரங்களையும் படைத்தரப்புக்கு வழங்கியது. அதே 1978 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 7 ஆம் திகதி ஐ.தே.கட்சியின் ஜே.ஆர்.ஜெயவர்தன அரசு புதிய அரசியலமைப்பை உருவாக்கி தமிழ்மொழியை இரண்டாம் பட்ச நிலைக்குத் தள்ளியது. இதைத் தொடர்ந்து 1979 ஆடி 20 ஆம் திகதி ஜே.ஆர்.ஜெயவர்தனவுடன் இனவெறி அரசு விடுதலைப்புலிகள் தடைச்சட்டத்திற்குப் பதிலாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அமுலுக்குக் கொண்டு வந்தது. இந்தப் பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் ஒருவரை எவ்வித விசாரணைகளுமின்றி 18 மாதம் சிறையில் வைக்க முடியும். அத்துடன், படைகளால் கொல்லப்படுவோரின் உடல்களை மரண விசாரணைகள், நீதி விசாரணைகளின்றி அழித்து விட முடியும். இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்ட அதேதினம், வடக்கில் அவசர கால நிலையை பிரகடனப்படுத்தி 1979 மார்கழி 31 இற்குள் அதாவது 6 மாதங்களுக்குள் வடக்கே விடுதலைப் போரை அழித்து ஒழிக்குமாறு உத்தரவிட்டு பிரிகேடியர் வீரதுங்கவை வட மாகாணத்துக்கு அனுப்பினார் ஜே.ஆர்.ஜெயவர்தன. இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது இராணுவ அடக்குமுறையைத் தீவிரமாக்கி, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிப்பதற்கு சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முனைந்தபோது, ஆயுதப் போராட்டத்தையும் அரசியல் போராட்டத்தையும் உறுதிப்படுத்தி விரிவாக்க வேண்டுமென்ற நோக்கில் புலிகளின் தலைவர் பிரபாகரன் அரசின் எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளை முறியடிப்பதற்காக கெரில்லா அமைப்பு முறையை பலப்படுத்தி அரசியல் பிரிவையும் விரிவாக்கம் செய்ய முடிவு செய்தார். இதன்படி 1979 ஆம், 80 ஆம் ஆண்டுகளில் ஆயுதப் போராட்ட நடவடிக்கைகளை தற்காலிகமாக பின்போட்டு விட்டு விடுதலைப் புலிகள் அமைப்பை பலப்படுத்துவதில் பிரபாகரன் அதிக கவனம் செலுத்தினார். இக் காலகட்டத்திலேயே புரட்சிகர அரசியல் கோட்பாட்டைக் கொண்ட அரசியல் திட்டத்தை வரைந்து இதனூடு அரசியல் விழிப்புணர்வு கொண்ட போராளிகளை உருவாக்கியதுடன் சர்வதேச ரீதியில் தமிழீழ விடுதலைக்கு, குரல் கொடுக்குமுகமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் கிளைகளை நிறுவி சர்வதேச முற்போக்கு அமைப்புகளுடனும் நல்லுறவுகளை ஏற்படுத்துவது பிரபாகரனின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகவிருந்தது. ஏனெனில், இலங்கை இராணுவத்தினதும், அரசினதும் அடக்கு முறைகளையும் இன அழிப்புகளையும், கொடூர சித்திரவதைகளையும் தனது ஆறு வயது முதலே நேரில் அனுபவித்த வேதனை, அதனால் கிளர்ந்தெழுந்த விடுதலை வேட்கை, சிங்கள இனவாத அரசுக்கு தமிழர்கள் யார் என்பதைக் காட்ட வேண்டுமென்ற ஆக்ரோர்ம், அதனால் பிறந்த புலிகள் அமைப்பு என்பவற்றை வெற்றிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டுமென்பதில் தனது 5 வயது முதல் 50 வயது வரை வெற்றி நாயகனாகத் திகழும் பிரபாகரனின் சிறுவயது பராயம் வித்தியாசமானது. வல்வெட்டித்துறையில் வேலுப்பிள்ளை - பார்வதி தம்பதியினரின் கடைசிக் குழந்தையாக 26-11-1954 ஆம் ஆண்டு பிறந்தார் பிரபாகரன். இவருக்கு ஒரு அண்ணனும், இரு அக்கமார்களும். பிரபாகரனின் தந்தை இலங்கை அரசாங்கத்தின் மாவட்ட காணி அதிகாரியாகக் கடமை புரிந்தார். பிரபாகரன் தனது கல்வியை வல்வெட்டித்துறையில் ஊரிக்காடு என்னுமிடத்திலுள்ள சிதம்பராக் கல்லூரியில் 10 ஆம் வகுப்பு வரையிலும் கற்றார். யாழ்ப்பாணத்தில் அந் நாட்களில் செல்வம் மிக்க குடும்பங்களில் பிறந்த குழந்தைகள் ஆங்கிலம் கற்பதும், வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போவதும் அரச பணிகளில் அமர்வதுமே இலட்சியமாகக் கொள்வது நடைமுறையாக இருந்து வந்தது. ஆனால், பிரபாகரனின் சிந்தனையோட்டம் சிறு வயதிலேயே வேறு விதமாக அமைந்தது. தந்தையுடன் வெளியிடங்களுக்குச் செல்லும் போது சிங்களப் பொலிஸார் அப்பாவித் தமிழர்கள் மீது மேற்கொண்ட கொடூரத் தாக்குதல்கள், துன்புறுத்தல்கள் பிரபாகரனின் மனதில் ஆழமான வடுக்களை ஏற்படுத்தின.அதிலும் குறிப்பாக, 1958 ஆம் ஆண்டில் நடந்த முதலாவது தமிழின அழிவில் நிகழ்ந்த பயங்கரச் சம்பவங்கள் அவர் மனதில் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தின. சிங்கள இனவெறியர்களால் தமிழர்கள் ஈவிரக்கமில்லாமல் கொல்லப்பட்ட நெஞ்சை உறுத்தும் சம்பவங்கள், சிறுவர்களை கொதிக்கும் தார்ப் பீப்பாக்களினுள் உயிருடன் போட்டுக் கொன்ற கோரங்கள், பாணந்துறையில் இந்து மதகுரு ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்டமை போன்றவற்றை கேட்டதாலும், கண்டதாலும் சிங்கள இனவெறியர்களின் பிடியிலிருந்து தமிழ் மக்களைக் காக்க வேண்டுமென்ற எண்ணம் பிரபாகரனிடம் துளிர்விட்டது. தமிழர்களுக்கெதிராக ஆயுத வலிமையை பிரயோகிக்கும் சிங்கள இனவெறி அரசினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியுமென்பதை பிரபாகரன் உறுதியாக உணர்ந்தார். இதனால் படிக்கும் காலத்திலேயே பிரபாகரனும் அவருடைய நண்பர்கள் சிலரும் சேர்ந்து கைக்குண்டுகளை தயாரிக்கப் பழகினார்கள். ஒருமுறை பிரபாகரன் கைக்குண்டுகளைத் தயாரித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக குண்டொன்று வெடித்ததால் பிரபாகரனின் காலில் எரிகாயம் ஏற்பட்டது. மருத்துவ சிகிச்சையின் பின்னர் அந்த இடம் கருமையாக மாறியதால் "கரிகாலன்' என்னும் புனைபெயரும் பிரபாகரனுக்கு சிறுவயதில் ஏற்பட்டது. 10 ஆம் வகுப்பு வரை படித்த பிரபாகரன் விடுதலைப் போராளியாகச் செயற்படத் தொடங்கியதால் படிப்பைத் தொடர முடியவில்லை. போராட்ட முஸ்தீபுகள் இரகசியமாக கருக்கட்டத் தொடங்கின. இதேவேளை, பிரபாகரனின் போக்குகள், செயற்பாடுகள் அவரது பெற்றோருக்கு புரியவில்லை. பிரபாகரன் புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளும் சந்தர்ப்பம் தானே தேடிவந்தது. ஒரு முறை பிரபாகரனைத் தேடி வந்த பொலிஸார் அதிகாலை 3 மணியளவில் அவரின் வீட்டுக் கதவைத் தட்டினர். கதவைத் தட்டும் சத்தம் கேட்டவுடனேயே பொலிஸார் வந்து விட்டதை உணர்ந்து கொண்ட பிரபாகரன் பெற்றோருக்குக் கூடத் தெரியாமல் வீட்டின் பின் வழியாகத் தப்பிவிட்டார். வீட்டுக் கதவைத் திறந்த பிரபாகரனின் தாயார் ஏராளமான பொலிஸார் குவிந்து நிற்பதைக் கண்டு திகைத்து விட்டார். ஏனெனில், பிரபாகரன் இரகசிய இயக்கத்தில் இருப்பதை அவர் அப்போது அறிந்திருக்கவில்லை. வீடு முழுவதும் சல்லடை போட்டுத் தேடிய பொலிஸார் பிரபாகரனின் பெற்றோரை எச்சரித்து விட்டு வெறுங்கையுடன் திரும்பினர். இந் நிகழ்விற்குப் பின்னர் பிரபாகரன் வீட்டிற்குத் திரும்பவில்லை. பிரபாகரன் புரட்சிகர இயக்கத்தில் இணைந்திருப்பதை அறிந்து கொண்ட அவரது தந்தை பிரபாகரன் தங்கியிருந்த இடத்திற்குச் சென்று அவரை வீட்டிற்கு அழைத்து வந்தார். வீட்டிற்கு வந்த பிரபாகரன் பெற்றோரிடம் தனது நோக்கம் விடுதலை வேட்கை பற்றி வாதிட்டார். இதன்போது 'உங்களுக்கோ, குடும்பத்திற்கோ நான் ஒரு போதும் பயன்படமாட்டேன். என்னால் உங்களுக்கு எந்தத் தொல்லையும் வேண்டாம். என்னை என் போக்கில் விட்டு விடுங்கள். இனி எதற்கும் என்னை எதிர்பார்க்காதீர்கள்" என்று கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிப் போய் இரகசிய இயக்க வேலைகளில் ஈடுபடத் தொடங்கினார். பிரபாகரனின் புரட்சிகர போராட்டத்தின் ஆரம்பகாலத் தோழர்களாக பிரபாகரனின் உறவினர்களும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்களாகவுமேயிருந்தனர். இதேவேளை, தமிழ்ப் பகுதியில் அரசியல் சூனிய நிலையொன்று உருவானது. சிங்கள பேரினவாதிகளின் தமிழ்த்தேசிய இன ஒடுக்குமுறைக்கெதிராகக் கிளர்ந்தெழுந்து தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னடத்திச் செல்ல புரட்சிகரமான அரசியல் அமைப்பொன்று இன்றியமையாதது என்பதை தமிழ் இளைஞர்கள் உணரத் தொடங்கினர். இதனால், 'தமிழ் மாணவர் பேரவை" என்ற மாணவர் இயக்கம் 1970 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு பலம் பொருந்திய இயக்கமாக வளரத் தொடங்கியது. இதில் தீவிரவாதக் குழுவின் முக்கியமானவராக பிரபாகரன் இயங்கினார். இக் குழுவில் வயதில் மிகவும் குறைந்தவராக பிரபாகரன் இருந்ததனால், அனைவராலும் 'தம்பி" என்ற செல்லப்பெயர் கொண்டு அழைக்கப்பட்டார். தொடக்க காலத்தில் கைக்குண்டுகள் செய்வதற்கும் துப்பாக்கியால் சுடுவதற்கும் இவர்கள் தாமாகவே பயிற்சி பெற்றனர். இந்த தீவிரவாதக் குழுவில் பிரபாகரனுக்கு நெருக்கமான வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 25 பேருக்கு மேற்பட்டோர் இருந்தனர். இக் காலகட்டத்தில் அரசுக்கு தமது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் அரச பேரூந்தொன்றை எரிப்பதென்ற முடிவை பொறுப்பேற்றுக் கொண்ட பிரபாகரன் உட்பட நான்கு பேர் சென்றனர். ஆனால், அச்ச மிகுதியால் மூன்று பேர் இடைநடுவில் திரும்பிச் சென்று விட்டனர். ஆனால், அப்போது 16 வயது சிறுவனாக இருந்த பிரபாகரன் மட்டும் மனத் துணிவுடனும் எடுத்த முடிவை நடத்திக் காட்ட வேண்டுமென்ற சபதத்துடனும் தனியாகச் சென்று அரச பேரூந்தொன்றைக் கொளுத்திவிட்டு திரும்பி வந்தார். இதேநேரத்தில் தமிழ் மாணவர் பேரவையின் நடவடிக்கைகளை கவனித்து வந்த சிங்கள அரசாங்கம் அதை ஒடுக்குவதற்கு முயன்றது. தமிழ் மாணவர் பேரவை இளைஞர்கள் சிலரைக் கைது செய்து பொலிஸார் சித்திரவதை செய்தனர். சித்திரவதையை தாங்க முடியாத சிலர் சக தோழர்களை காட்டிக் கொடுத்து விட்டனர். இதனால் பலர் கொழும்பிலுள்ள 4 ஆம் மாடிதடுப்பு முகாமில் வைத்துக் கொடூர சித்திரவதைகளை மேற்கொண்டனர். இதனால், பிரபாகரன் தமிழகத்திற்குச் சென்றார். ஆனால், தமிழகத்தில் தொடர்ந்தும் இருக்க விரும்பாத பிரபாகரன் 1972 ஆம் ஆண்டு மீண்டும் தமிழீழம் திரும்பினார். இந்நிலையில், ஆங்காங்கு சிதறுண்டு இருந்த இளைஞர்களிடையே காணப்பட்ட தீவிரவாத செயற்பாடு ஒரு புரட்சிகர தலைமையை நாடிநின்றது. இப் புரட்சிகர சூýழலில் தான் 'புதிய தமிழ்ப் புலிகள்" என்ற இயக்கம் 1972 ஆம் ஆண்டு பிரபாகரனால் தொடங்கப்பட்டது. இதுவே பிரபாகரனின் விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப நிலை. இவ்வாறு படிப்படியாக வளர்ச்சி கண்ட விடுதலைப் புலிகள் அமைப்பு தமது மூýன்று திட்டங்களில் ஒன்றான துரோகிகளை அழித்தலைச் செயற்படுத்திய அதேவேளை, இரண்டாவது திட்டமான படையணிகள் மீதான தாக்குதல்களையும் தொடங்கியது. 1981 ஆம் ஆண்டு வைகாசி 31 ஆம் திகதி சிங்கள இராணுவப் படைகளும், ஐக்கிய தேசியக் கட்சி காடையர்களும் இணைந்து யாழ் நகரை எரிய10ட்டினர். தென்னாசியாவிலேயே தலைசிறந்த யாழ். நூலகத்தை எரிய10ட்டிவிலை மதிப்பற்ற 94 ஆயிரம் புத்தகங்களை சாம்பர் மேடாக்கினர். இவ்வாறு தமிழினம் மீது கலாசார படுகொலைத் திட்டமாக அமைந்த இந்த அழிவுகளை தலைமை தாங்கிச் செய்து முடித்தவர் அப்போதைய ஐ.தே.கட்சியின் ஆட்சியில் அமைச்சராகவும் பின்னர் எதிர்க்கட்சித் தலைவராகவுமிருந்து 24-10-1994 அன்று குண்டுத் தாக்குதலுக்கு பலியான காமினி திசாநாயக்கவே ஆவார். இராணுவ அட்டூழியத்தாலும் வன்முறையாலும் தமிழீழ மக்களை அடி பணியச் செய்து விட முடியாது என்பதை சிங்கள இனவாத அரசுக்கு உணர்த்த வேண்டுமெனத் தீர்மானித்த பிரபாகரன் படையினர் மீது தாக்குதல்களை ஆரம்பிக்கும்படி போராளிகளுக்குக் கட்டளையிட்டார். தாக்குதல்களும் தீவிரமடைந்தன. 1981 ஐப்பசி 15 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை வீதியில் வைத்து இராணுவ வாகனமொன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் அவர்களின் ஆயுதங்களும் புலிகளால் கைப்பற்றப்பட்டன. இத் தாக்குதலே தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இராணுவத்தினருக்கு எதிரான முதலாவது ஆயுத நடவடிக்கையாகும். 1982 ஆடி2 ஆம் திகதி வடமராட்சி நெல்லியடியில் பொலிஸார் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதுடன், 3 பேர் படுகாயமடைந்தனர். இவர்களின் ஆயுதங்களும் புலிகளால் கைப்பற்றப்பட்டன. இதேயாண்டு புரட்டாதி 29 ஆம் திகதி இனவெறியர் ஜே.ஆர்.ஜெயவர்தன ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்காக யாழ்ப்பாணம் வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொன்னாலை பாலத்தில் வந்து கொண்டிருந்த கடற்படை வாகனங்களுக்கு கண்ணிவெடிகள் வைக்கப்பட்டன. இதே ஆண்டு ஐப்பசி 27 ஆம் திகதி சாவகச்சேரி பொலிஸ் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பொலிஸார் கொல்லப்பட்டதுடன், 3 பேர் படுகாயமடைந்தனர். இங்கிருந்து பெருந்தொகையான ஆயுதங்களையும் பொலிஸாரிடமிருந்து கைப்பற்றினர். இத் தாக்குதலையடுத்து வட மாகாணத்திலுள்ள பல பொலிஸ் நிலையங்கள் மூடப்பட்டன. வடக்கில் பொலிஸ் நிர்வாகம் நிலை குலைந்து முடங்கிப் போனது. 1983 மாசி 18 ஆம் திகதி பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதேயாண்டு பங்குனி மாதம் 4 ஆம் திகதி பரந்தன் உமையாள்புரத்தில் இராணுவத் தொடரணி மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் தொடுத்து நேரடிச் சமரில் ஒரு மணித்தியாலம் ஈடுபட்டனர். இத் தாக்குதலில் இராணுவ கவச வண்டியொன்று சேதமடைந்ததுடன், ஐந்து இராணுவத்தினர் காயமடைந்தனர். 1983 சித்திரை 2 ஆம் திகதி வட மாகாணத்தில் பாதுகாப்பையும் அமைதியையும் ஏற்படுத்துவதற்கான வழிவகைகளை ஆராய்வதற்காக யாழ் அரச அதிபர் "பாதுகாப்பு மாநாடு' ஒன்றைக் கச்சேரியில் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த போது மாநாடு தொடங்குவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்பு யாழ்.கச்சேரி செயலக கட்டிடத்தைக் குண்டு வைத்துத் தகர்த்து தமது எதிர்ப்பை இலங்கை அரசுக்கு விடுதலைப் புலிகள் வெளிப்படுத்தினர். இதேயாண்டு வைகாசி 18 ஆம் திகதி வடக்கில் நடக்கவிருந்த உள்ராட்சி தேர்தல்களை பகிர்;கரிக்கும்படி பிரபாகரன் தமிழீழ மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். சித்திரை 29 ஆம் திகதி இலங்கை இனவெறி அரசை ஆதரிக்கும் சகல துரோகிகளுக்கும் எச்சரிக்கையாக மூன்று ஐ.தே.கட்சி ஆதரவாளர்கள் விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக ஐ.தே.கட்சி சார்பில் நின்ற சகல தமிழ் வேட்பாளர்களும் தேர்தலிலிருந்து விலகியதுடன், பலர் ஐ.தே.க.விலிருந்தும் விலகிக் கொண்டனர். இதே திகதி நல்லூர் கந்தர்மடத்தில் தேர்தல் சாவடிக்கு காவலில் நின்ற இராணுவ, பொலிஸார் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு இராணுவ வீரர் கொல்லப்பட்டார். இத் தாக்குதலையடுத்து விடுதலைப் போராளிகள் என்று சந்தேகிக்கும் எவரையும் கண்ட இடத்தில் சுட்டுத் தள்ளவும், பிரேத பரிசோதனை, நீதி விசாரணை எதுவுமின்றி சடலங்களை புதைக்கவும் இராணுவத்துக்கு ஜே.ஆர். அரசு அதிகாரங்களை வழங்கியது. இதற்குப் பதிலடியாக 1983 ஆடி 23ஆம் திகதி நள்ளிரவில் திருநெல்வேலியிலுள்ள பலாலி வீதியில் விடுதலைப் புலிகளின் தாக்குதல் படைப்பிரிவொன்று இராணுவத்திற்கெதிரான அதிரடித் தாக்குதலுக்காக காத்து நின்றது. 14 போராளிகளைக் கொண்ட இப் படைப்பிரிவில் தலைவர் பிரபாகரனும் ஒரு போராளியாக நின்று கொண்டு தாக்குதலுக்கான தலைமைப் பொறுப்பை லெப்டினன்ட் செல்லக்கிளியிடம் கொடுத்திருந்தார். புலிகள் காத்திருந்த இராணுவ தொடரணி குறிப்பிட்ட இடத்துக்கு வந்ததும் கண்ணிவெடியை வெடிக்க வைத்து தாக்குதல் தொடுக்கப்பட்டது. இத் தாக்குதலில் இராணுவத்தினர் 13 பேர் கொல்லப்பட்டனர். ஆயுதங்கள் பல கைப்பற்றப்பட்டன. பிரபாகரன் மட்டும் இத் தாக்குதலில் 7 இராணுவத்தினரை சுட்டுக் கொன்றார். இத் தாக்குதலையடுத்து நிலைகுலைந்த சிங்கள அரசு இலங்கைத் தீவு முழுவதும் இனப்படுகொலையை கட்டவிழ்த்து விட்டது. ஆயிரக் கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக் கணக்கான தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டனர். தமிழரின் கோடிக் கணக்கான சொத்துகள் அழிக்கப்பட்டன. இந்த இன அழிப்பு நடவடிக்கையால் விழிப்புணர்வு பெற்ற இளைஞர்களும், யுவதிகளும் விடுதலைப் புலிகளுடன் இணையத் தொடங்கினர். இதனால், புலிகளின் கெரில்லா படையணி பல்மடங்காகப் பெருகியது. இந்நிலையில், கெரில்லா அணிகளை புரட்சிகர மக்கள் இராணுவமாகக் கட்டியெழுப்பும் நோக்குடன் அரசியல், இராணுவ அமைப்புகளை விரிவுபடுத்தும் நடவடிக்கையில் இறங்கினார் பிரபாகரன். இதனால், ஆடி1983 இல் இருந்து 1984 மாசி வரை இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி பாரிய கெரில்லா பயிற்சித் திட்டங்களை வகுத்து அரசியல், இராணுவ அமைப்புகள் விரிவாக்கம் செய்யப்பட்டன. கெரில்லா போர் முறை மரபுவழி யுத்த முறையாக மாற்றமடைந்து முன்னேற்றமடைந்ததால் ஆட்டம் கண்ட இலங்கையரசு இந்திய அரசின் துணையோடு திம்புப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்தது. இந்திய அரசின் தலைமையில் விடுதலைப் புலிகளுடன் 1985 ஆடிமாத முற்பகுதியில் ப10ட்டான் தலைநகர் திம்புவில் பேச்சுகள் ஆரம்பமாகின. சகல தமிழ் குழுக்களும் கலந்து கொண்டன. தமிழர் தேசியம், தமிழர் தாயகம், தமிழர் தன்னாட்சி உரிமை என்ற விடுதலைப் புலிகளின் கோரிக்கையை ஏனைய தமிழ்க் குழுக்கள் ஏற்றுக் கொண்டன. ஆனால், இதை இலங்கை அரசு நிராகரித்து விட்டது. இதனால், திம்பு பேச்சுவார்த்தையில் சிக்கல் நிலை தோன்றியது. அதேவேளை, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இலங்கை இராணுவம் திருகோணமலையிலும், வவுனியாவிலும் இனப்படுகொலையில் ஈடுபட்டு 200 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்களை கொன்று குவித்ததால் திம்பு பேச்சுவார்த்தை முறிவடைந்தது. திம்பு பேச்சுகள் தோல்வியடைந்ததையடுத்து இந்தியாவிலிருந்து புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் நாடு கடத்தப்பட்டார். இதனால், பிரபாகரனுக்கும் இந்திய அரசுக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, 1986 ஆம் ஆண்டு ஐப்பசியில் தமிழகத்திலிருந்த தலைவர் பிரபாகரன் உட்பட விடுதலைப் புலி உறுப்பினர்கள் தமிழக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதுடன், தொலைத்தொடர்பு சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட பிரபாகரனும் ஏனைய போராளிகளும் குற்றவாளிகளைப் போல் நடத்தப்பட்டார்கள். பின்னர் பிரபாகரன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இதேவேளை, தங்களிடமிருந்து பறித்த தொடர்பு சாதனங்களை திருப்பித் தர வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து 1986 கார்த்திகை 22 ஆம் திகதி நீராகாரமின்றி சாகும் வரையான உண்ணாவிரதத்தை பிரபாகரன் தொடங்கினார். இதையடுத்து பணிந்த இந்திய அரசு தொடர்பு சாதனங்களைத் திருப்பிக் கொடுத்தது. இதற்குப் பின்னர் பெங்கரில் நடந்த சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன பிரபாகரனுக்கு முதலமைச்சர் பதவி தருவதாக இந்திய அரசின் மூலம் பிரபாகரனுக்கு தெரியப்படுத்தினார். ஆனால், பிரபாகரன் அந்த யோசனையை அடியோடு மறுத்து விட்டார். தமிழ் நாட்டில் இருக்கும் வரை தனக்குத் தொந்தரவு இருக்கும் என்பதை உணர்ந்து கொண்ட பிரபாகரன் 1987 தை 3 ஆம் திகதி தமிழீழம் திரும்பினார். இதையடுத்து, இலங்கை இராணுவம் மீதான தாக்குதல்கள் உக்கிரமடைந்தன. இலங்கை துருப்புகள் முகாம்களுக்குள் முடக்கப்பட்டன. இலங்கை அரசு பெரும் எடுப்பில் வடமராட்சி மீது மேற்கொண்ட ஒப்பரேர்ன் லிபரேர்ன் இராணுவ நடவடிக்கை புலிகளால் முறியடிக்கப்பட்டது. இந்நிலையில் 1987 ஆடி 24 ஆம் திகதி, இந்திய அதிகாரிகள் சிலர் பிரபாகரனை யாழ்ப்பாணத்தில் சந்தித்து இந்தியப் பிரதமர் பிரபாகரனை சந்திக்க விரும்புவதாக தெரிவித்ததுடன், டில்லிக்கு அழைத்துச் செல்ல அவசரப்படுத்தினார்கள். இதன்போது பிரபாகரன் தமிழ் மக்களுக்கு ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதில், "இன்று தமிழ்மக்கள் தங்கள் இலட்சியத்தை வென்றெடுக்கும் தலைமையை பெற்றிருக்கிறார்கள் என்று அறுதியிட்டுக் கூறுகின்றேன். நீங்கள் எனக்களித்து வரும் பொறுப்புகளை நான் உறுதியுடனும் நேர்மையுடனும் உண்மையுடனும் செய்வேன் என நம்புகிறேன். தற்காலத்தில் காணப்படும் இடைக்கால தீர்வுகள் எமது பிரச்சினையின் தீர்வுகளாக அமையாது. எனவே, தமிழ் மக்களுக்கு நிம்மதியான சுபீட்சமான எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் நிரந்தரத் தீர்வுக்காகவே நான் பாடுபடுகின்றேன். இந்தத் தீர்வு தமிழீழம் என்றே நான் நம்புகின்றேன். இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் விசேட அழைப்பின் பேரிலேயே நான் தமிழீழத்தை விட்டு உத்தியோகப10ர்வமாக இந்தியா செல்கிறேன் எனத் தெரிவித்து விட்டு ஹெலிகொப்டரில் டில்லி சென்றார். போகும் வழியில் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரைச் சந்தித்து பேசிவிட்டே சென்றார். டில்லி சென்ற பிரபாகரனும் அவரது ஆலோசகர்களும் அசோகா ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு இந்தியாவின் இலங்கைக்கான தூதுவர் தீக்ர்த், இந்திய வெளிநாட்டுத்துறை செயலர் மேனன் ஆகியோர் பிரபாகரனை சந்தித்து இந்தியாவும் இலங்கையும் செய்து கொள்ளவுள்ள ஒப்பந்தம் பற்றி தெரிவித்து விட்டு அதன் பிரதிகளை பிரபாகரனிடம் கொடுத்து விட்டுச் சென்றனர். இந்த ஒப்பந்தத்தை பிரபாகரன் முற்றாக நிராகரித்தார். அவரை சம்மதிக்க வைக்க பல முயற்சிகள் நடந்தன. நான்கு நாட்கள் சென்றுவிட்ட போதும் ராஜீவ் காந்தி பிரபாகரனைச் சந்திக்கவில்லை. பிரபாகரன் ஒப்பந்தத்தை ஏற்கமாட்டார் என்று உறுதிபடத் தெரிந்ததும் ஏனைய தமிழ்க் குழுக்களின் பிரதிநிதிகள் டில்லிக்கு அழைத்து வரப்பட்டு ஒப்பந்தத்துக்கு சம்மதம் பெறப்பட்டது. இதையடுத்து இலங்கை- இந்திய ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஆடி 29 ஆம் திகதி கொழும்பு செல்லப் போவதாக ராஜீவ் காந்தி அறிவித்து விட்டு பிரபாகரனைச் சந்தித்து விட்டு அவரின் சம்மதம் பெறாமலேயே பிரபாரன் ஒப்பந்தத்திற்குச் சம்மதம் தெரிவித்து விட்டதாக பொய் செய்திகள் வெளியிடப்பட்டன. இதை மறுத்து பிரபாகரன் அறிக்கையொன்றை வெளியிட்டார். 1987 ஆடி 29 பிரபாகரனை டில்லியில் ஹோட்டல் அறையில் கறுப்பு ப10னை படையின் காவலில் வைத்து விட்டு கொழும்பில் ராஜீவ் காந்தியும் ஜே.ஆர்.ஜெயவர்தனவும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். ஒப்பந்தம் முடிந்து இந்தியா திரும்பிய ராஜீவ் காந்தி பிரபாகரனுக்கு பல உறுதிமொழிகளை வழங்கினார். இதையடுத்து பிரபாகரன் தமிழீழம் திரும்பினார். இந்திய- இலங்கை அரசுகளின் ஒப்பந்தம் தொடர்பான விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை சுதுமலையில் நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் பல இலட்சம் தமிழ் மக்கள், இந்திய இராணுவத் தளபதிகள், ஊடகவியலாளர்கள் மத்தியில் பிரபாகரன் தெளிவுபடுத்தினார். அதில் எம் மக்களது விடுதலைக்காக எம் மக்களது விமோசனத்துக்காக நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்திய அரசிடம் ஒப்படைக்கிறோம். இதிலிருந்து தமிழ் மக்களின் பாதுகாப்பை இந்திய அரசு ஏற்றுக் கொள்கிறது. ஆயுதக் கையளிப்பு இந்தப் பொறுப்பு மாற்றத்தைத் தான் குறிக்கிறது. நாம் ஆயுதங்களை கையளிக்காது போனால் இந்திய இராணுவத்துடன் மோத வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும். தனியரசே தமிழீழ மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும் என்பதில் நான் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளேன். தமிழீழ மக்களின் நலன்கருதி இடைக்கால அரசில் பங்குபற்ற அல்லது தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை எமக்கு ஏற்படலாம். ஆனால், நான் எந்தக் காலகட்டத்திலும் தேர்தலிலும் பங்குபற்றப் போவதில்லை. இதை நான் உறுதியாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என்றார். பிரபாகரனின் உத்தரவின் பேரில் ஆயுதங்கள் பலாலி இராணுவ முகாமில் வைத்து இந்திய இராணுவத்திடம் கையளிக்கப்பட்டன. ஆனால், இந்தியப் பிரதமர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது விடுதலைப் புலிகளுக்கும் தமிழீழ மக்களுக்கும் எதிரான செயல்களைப் புரிய தமிழ்த்துரோக குழுக்களைத் தூண்டினார். இந்நிலையில் விடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த இந்திய- இலங்கை ஒப்பந்தத்திலுள்ள 5 கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரி தியாகி திலீபன் நீராகாரமின்றி சாகும் வரையான உண்ணாவிரதத்தை 1987 ஐப்பசி 15 இல் ஆரம்பித்தார். இந்தியாவின் துரோகத்தனத்தினால் 1987 ஐப்பசி 26 இல் தியாக மரணமடைந்தார். திலீபனின் மரணத்தைத் தொடர்ந்து பருத்தித்துறைக் கடற்பரப்பில் விடுதலைப் புலிகளின் மூ த்த தளபதிகள் இருவர் உட்பட 15 போராளிகள் இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டு பலாலி முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர். போர் நிறுத்த நேரத்தில் பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட சூழ்நிலையில் விடுதலைப் புலிகளின் தளபதிகளும் போராளிகளும் கைது செய்யப்பட்டது ஒப்பந்தத்திற்கு முரணானது என பிரபாகரன் இந்திய அரசுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தார். ஆனால், இந்திய அரசின் குரோதத்தனத்தால் 15 போராளிகள் சயனைட் உட்கொண்டதில் 12 போராளிகள் வீரச்சாவடைந்தனர். விடுதலைப்புலிகளை ஒழித்துக் கட்டுவது தான் இந்திய அரசின் நோக்கம் என அறிக்கையிட்ட பிரபாகரன் யுத்த நிறுத்தத்தை பேனுவதில்லையென முடி வெடுத்தார். 1987 ஐப்பசி 10 இல் இந்திய - தமிழீழ போர் ஆரம்பமானது. யுத்தம் தீவிரமடைந்தது. யுத்தத்தை தலைமையேற்று நடத்திய பிரபாகரன், கெரில்லாப் போர் முறைதான் இந்திய இராணுவத்தை எதிர்கொள்ள சரியான வழி என்பதை உணர்ந்து தனது போராளிகளுடன் காடுகளுக்குச் சென்றார். இந்நிலையில் இந்திய அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமெனக் கோரி உண்ணாவிரதமிருந்த அன்னை பூபதியும் தியாக மரணமடைந்தார். போர் உக்கிரமடைந்த நிலையில் 1988 இல் ஜனாதிபதியாக பதவியேற்ற பிரேமதாஸா இந்திய இராணுவத்தை வெளியேறுமாறு அறிவித்தார். விடுதலைப் புலிகளிடம் படுதோல்வியடைந்திருந்த இந்திய இராணுவம் 1990 பங்குனியில் தமிழீழத்திலிருந்து வெளியேறியது. பிரபாகரன் மறைவிடத்திலிருந்து வெளியே வந்தார். இலங்கை அரசுக்கும் புலிகளுக்குமிடையே பல பேச்சுகள் நடந்தன. தோல்வி கண்டன. 1990-06-01 இல் இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானது. இராணுவ முகாம்கள், கடற்படைக் கலங்கள் தகர்த்தழிக்கப்பட்டன. 1993 மே 1 இல் ஜனாதிபதி பிரேமதாஸா தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். 1995 இல் பதவிக்கு வந்த சந்திரிகா அரசும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது. அவையும் தோல்வி கண்டன. மீண்டும் 3 ஆம் ஈழப்போர் வெடித்தது. 17-10-1995 இல் சூ ரியக் கதிர் இராணுவ நடவடிக்கையை யாழ். குடாநாட்டி ன் மீது சந்திரிகா அரசு தொடுத்தது. மக்களினதும் போராளிகளினதும் இழப்பைத் தவிர்க்கும் பொருட்டு புலிகள் தந்திரோபாயமாக பின்வாங்கினர். குடாநாட்டு மக்கள் 5 இலட்சம் பேரும் புலிகளுடன் இணைந்து வெளியேறினர். இந்த இடம்பெயர்வு ஒரு வரலாற்று நகர்வாகும். விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டி விட்டதாக அகில உலகமெலாம் சொல்லித் திரிந்த இலங்கை இராணுவத்துக்கு ஓயாத அலைகள் -01 இராணுவ நடவடி க்கை மூலம் 2000 இராணுவத்தினருக்கு மேல் கொன்றொழித்து பல கோடி, பெறுமதியான படைக்கலங்களை கைப்பற்றி முல்லைத்தீவு மாவட்டத்தை சிங்கள ஆக்கிரமிப்பிலிருந்து விடுவித்து தமது இராணுவப் பலத்தை இலங்கை அரசிற்கும் உலகுக்கும் 19-07-1996 இல் புலிகள் நிரூபித்தனர். வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பாதை திறப்பதற்காக 13-05-1997 இல் இராணுவம் மேற்கொண்ட "ஜெயசிகுறு' இராணுவ நடவடி க்கை ஒரு வருடத்திற்கு மேல் நடைபெற்றது. இராணுவம் மாங்குளம் பகுதியை அண்மித்த நிலையில் 27-09-1998 இல் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட ஓயாத அலைகள்-02 இராணுவ நடவடிக்கை மூ லம் கிளிநொச்சி மாவட்டத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதனால் ஜெயசிகுறு முடி வுக்கு வந்த போதும் இராணுவம் வேறு பெயர்களில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டது. இராணுவம் பலத்த ஆளணி, தளபாட இழப்பிற்கு மத்தியில் கைப்பற்றிய வன்னி நிலப்பரப்பை ஐந்தே நாட்களில் மீட்டெடுத்து புலிகள் வரலாற்றுச் சாதனை படைத்தனர். ஓயாத அலைகள்-03 இராணுவ நடவடி க்கை 02-11-1999 இல் ஆரம்பமாகி வன்னி நிலப்பரப்பு மீட்கப்பட்டது. கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி, குடாரப்பு தரையிறக்கங்கள் மூலம் ஆனையிறவின் பாதுகாப்பு வலயங்கள் மீட்டெடுக்கப்பட்டன. ஆனையிறவு முப்படைப் பெருந்தளம் 22-02-2000 ஆம் ஆண்டு புலிகளால் முற்றாக அழிக்கப்பட்டது. 240 வருடகால அடி மைச் சின்னம் இல்லாதொழிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வடமராட்சி கிழக்கு பகுதியில், நாகர்கோவில் வரையும், யாழ் நகர் நோக்கி எழுதுமட்டுவாள், பளை, சாவகச்சேரி கைதடி, நாவற்குழி, அரியாலை என யாழ்.குடாநாட்டி ன் முக்கிய பகுதிகளை மீட்டெடுத்துக் கொண்டு யாழ் நகரை நோக்கி நகர்ந்த விடுதலைப் புலிகளின் படையணி இந்தியா உட்பட சில வல்லரசு நாடுகளின் அழுத்தம் காரணமாக, யாழ். குடாநாட்டு மீட்பு நடவடிக்கையை தற்காலிகமாக மக்களின் பாதுகாப்பு கருதி இடைநிறுத்த வேண்டி யேற்பட்டது. இதேவேளை, ஆனையிறவு பெருந்தளத்தை மீண்டும் கைப்பற்ற இராணுவம் "கினிஹிர' இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. இந்நிலையில் 26-09-2000 அன்று ஓயாத அலைகள்-04 மூ லம் கிளாலியிலிருந்து நாகர்கோவில் வரையான 8 கிலோ மீற்றர் பரப்பளவை புலிகள் மீட்டெடுத்தனர். இதற்கிடையில் இலங்கையரசின் சர்வதேச விமான நிலையமான கட்டுநாயக்க விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 20 இற்கும் மேற்பட்ட விமானங்கள் அழிக்கப்பட்டன. இந்நிலையில் நோர்வே அரசின் சிறப்புத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் 02-11-2000 அன்று வன்னியில் புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்து சர்வதேச அரசியலில் மாபெரும் ராஜதந்திர நகர்வொன்றை மேற்கொண்டார். இச் சந்திப்பின் பின்னர் டிசம்பர் 24 இலிருந்து விடுதலைப் புலிகள் சமாதானத்தின் நல்லெண்ண சமிக்ஞையாக ஒரு தலைப்பட்ச போர் நிறுத்தத்தை மேற்கொண்டனர். புலிகள் போர் நிறுத்தம் மேற்கொண்டு 5 மணி நேரத்தினுள் நாகர்கோவில், எழுதுமட்டுவாள், கிளாலி பகுதிகளிலிருந்து 'தீச்சுவாலை" என்ற பெரும் இராணுவ நடவடி க்கையை அரசு மேற்கொண்டது. இதனைப் புலிகள் வெற்றிகரமாக முறியடித்தனர். பல நூற்றுக் கணக்கான இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். படைக்கலங்கள் அழிக்கப்பட்டன. இதையடுத்து அரசு புலிகளுடன் நோர்வேய10டாக சமாதானம் பேசி வந்தது. பல தரப்பட்ட சுற்றுப் பேச்சுகள் நடத்தப்பட்ட பின்னர் 2002 பெப்ரவரி 22 ஆம் திகதி விடுதலைப் புலிகளும் இலங்கையரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இதையடுத்து இரு தரப்புகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தைகள், வெளிநாடுகளில் ஆரம்பமாகித் தொடர்ந்து நடந்து வந்தன. இதில் புலிகள் தரப்பில் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனுடன் கலந்து கொண்டவர் புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதி கேணல் கருணா. அரசுக்கும் புலிகளுக்குமிடையிலான சமாதான முயற்சிகளை விரும்பாத சில சக்திகள் கருணாவை விலைக்கு வாங்கின. இதனால், 2004-03-03 இல் பிரதேசவாதம் கிளப்பிய கருணா, புலிகளுக்கும் தமிழீழ மக்களுக்கும் வரலாற்றுத் துரோகமிழைத்து மன்னிக்க முடி யாத துரோகியானார். துரோகி கருணாவின் கிளர்ச்சியை மிகவும் தந்திரோபாயமாக எதிர்கொண்ட புலிகள், கிழக்கு மாகாணத்தை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததுடன், கருணாவைத் தனிமைப்படுத்தினர். இதனால், தற்போது இலங்கை இராணுவத்தினரோடும், தமிழ்த் துரோகக் கும்பல்களுடனும் இணைந்துள்ள கருணா துரோகத்தனங்களில் ஈடுபட்டு வருகின்றார். 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கைத்துப்பாக்கியுடன் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு இன்று மரபுவழி இராணுவமாக தமிழினத்தின் தேசிய இராணுவமாக வளர்ச்சியடைந்துள்ளது. ஒரு நாட்டுக்குள் இரு இராணுவம், இரு கடற்படை, இரு பொலிஸ் படையாக பெரு வளர்ச்சி பெற்றுள்ளது.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

This page is powered by Blogger. Isn't yours? Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது தேன்கூடு, தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி http://ta.wikipedia.org