<$BlogRSDUrl$>

இன்று சிறுவர்களின் நிலை என்ன...? ****************************** இன்றைய 21ஆம் நூற்றாண்டில் மனிதன் விண்ணிலும் மண்ணிலும் பல சாதனைகளைப் புரிந்துகொண்டுள்ளான். ஆனால் அவனது பகுத்தறிவு விஸ்தரிக்கப்படவில்லை என்பது தான் கவலைக்குரிய விடயம். உண்மையிலேயே அவனது பகுத்தறிவு பரந்ததாக இருந்திருந்தால் ஓர் மனிதன் இன்னோர் மனிதனுக்குத் தீங்கு செய்யமாட்டான். எனவே உலகிலே தீயவை என்ற சொல்லுக்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும். ஆனால் இன்று அப்படியா நடக்கிறது? இல்லை இன்று உலகிலே சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் வன்முறை போன்ற வன்செயல்கள் மலிந்து கிடக்கின்றன. இவற்றிலும் சிறுவர் துஷ்பிரயோகம் அனைத்து இடத்திலுமே நடக்கிறது. எனவே சிறுவர்கள் படும் சீரழிவினைத் தடுத்து அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். உலகிலே பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் சுதந்திரத்துடன் வாழ முழு உரிமை உண்டு. அதாவது தனக்குப் பிடித்ததைச் செய்வது, தன் இஷ்டப்படி வாழ்வது போன்ற முறையில் முழு சுதந்திரத்துடன் வாழ உரிமை உண்டு. ஆனால் இன்று பெரும்பாலும் சிறுவர்களின் சுதந்திரம் பறிபோய்விட்டது என்பது மறைக்க முடியாத உண்மை. இன்று பெரும்பாலான சிறுவர்கள் தான் வேலைகள் பலவற்றைச் செய்கின்றனர். இவற்றிற்கெல்லாம் அடிப்படைக்காரணம் வறுமை. எனவே வறுமையின் காரணமாக வயிற்றுக்குப் போதிய உணவு கிடைப்பதில்லை. எனவே பசியைப் போக்குவதற்காவது வேலை செய்ய வேண்டிய கட்டாயம். இதனால் தான் இன்று சிறுவர்கள் வேலைக்கு செல்வது சகஜமாகப் போய்விட்டது. வேலைக்குச்செல்லும் இடங்களில் இவர்கள் மிகவும் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். எனவே அவர்கள் மனிதனாக மதிக்கப்படுவதில்லை. கடையில் வாங்கப்பட்ட ஒரு பொருளாக நினைக்கிறர்கள். இதனால் அவர்களின் சுக துக்கங்களை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. பணக்காரர், ஜமீன் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் போன்ற உயர்மட்டத்து ஆட்கள் இவ்வாறு சிறார்களை கொடுமைப்படுத்துகின்றனர். தம்மால் செய்ய முடியாத வேலைகளை சிறார்களைக் கொண்டு செய்விக்கின்றனர். இதனால் பாதிக்கப்படுவது சிறுவர்களே. போதைவஸ்து விற்பதற்குக் கூட சிறவர்கள் அனுப்பப்படுகின்றனர். தனது வயதை ஒத்த சிறுவர்கள் எல்லா வசதிகளையும் பெற்று வாழும் போது தாம்இப்படித் துன்பப்படுகின்றோமே என்று பல சிறார்கள் மன விரக்தி அடைந்து மேலும்மேலும் தீய பழக்கங்களில் ஈடுபடுகின்றனர். புத்தகமும் பென்சிலுமாகத் திரிய வேண்டியவர்கள் காலித் தட்டுக்களுடனும், காலிப்பேணிகளுடனும் எவனோ ஒருவனுக்குச் சேவை செய்து கொண்டிருப்பது எந்த வகையில் நியாயம் ஆகும்? பகல் 12 மணி நேரமும் வேலை செய்யும் சிறுவர்கள் இரவு நிம்மிதியாகத் து}ங்குவதற்கு கூட தடை செய்யப்படுகின்றனர். இவ்வாறு சிறுவர்கள் தீய பழக்கங்களுக்கு உட்பட்டு அவர்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு சுதந்திரம் பறிக்கப்பட்டால் அவர்கள் உயிர் வாழ்வதன் அவசியம் என்ன? மூன்று வேளை உணவுக்காக சிறுவர்கள் மேலும் மேலும் கொடுமைக்குள்ளாக வேண்டுமா? ஒவ்வொருவரும் ஒவ்வொருசிறுவரையும் தனது பிள்ளையாக நினைத்தால் நிட்சயமாக இவ்வாறான கொடுமைகள் சிறுவர்களுக்கு நிகழாது. வயிற்றுப் பசியைப் போக்குவதற்காக சிறார்கள் ஏழு வயதிலேயே வேலைக்குச் செல்கின்றனர். அங்கு வேலைசெய்யும் இடங்களில் முதலாளிகள் தமக்கு கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களை மனிதனாக நினைப்பதில்லை. தமது அடிமைகளாகவே நினைக்கின்றார்கள். எனவே தமது இஷ்டப்படி வேலைகளை அவர்களைக்கொண்டு செய்விக்கின்றார்கள். இவ்வாறு செய்யப்படும் வேலைகள் பெரும்பாலும் தீயவைகளாகவே காணப்படுகின்றன. எனவே தொழிலாளர்களாக செல்லும் சிறுவர்கள் தமது எழு வயதிலேயே தீயவர்களாக மாறிவிடுகின்றனர். இன்றைய சிறார்கள் தான் நாளைய சமுதாயத்தின் தலைவர்கள். இன்றைய சிறார்கள் இவ்வாறு தீயவர்களாகிப் போனால் நாளைய சமுதாயத்தை ஒரு நல்ல சமுதாயமாக கட்டி எழுப்புவது யார்? இதை ஒருவரும் யோசிப்பதில்லை. நாளைய சமுதாயம் ஒரு தீய சமுதாயமாக மாறப்போகிறது என்பது இன்று நம் கண்முன்னே தெரிகிறது. இருந்தும் நாம் கண்ணை மூடிக்கொண்டு தெரியாத மாதிரி இருந்து விடுகிறோம். ~~கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வதில் பிரயோசனமில்லை|| எனவே இவ்வாறு சிறார்கள் வேலைக்குச் செல்வதை இன்றைய தலைவர்கள் தான் தடுக்க வேண்டும். ஆனால் இன்றுவேலியே பயிரை மேய்கிறதே பின் எப்படி பயிர் வளர முடியும்? ஆம் இன்று மிக வேகமாகச் சுழலும் இந்த உலகத்திலே, பணம், பணம் என்று எல்லோருமே அலைகின்றனர். பணத்தைக் கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருப்பதனால் தான் பணத்தின் மூலம் பணப்பேய்களாக மாறுகின்றனர். பணத்தைக் கொண்டு சிறுவர்களை விலைக்கு வாங்குகிறார்கள். எனவே வேலைக்கு சென்று பல இன்னல்களை அனுபவிக்கும் சிறுவர்களை நாம் அனைவரும் பாதுகாக்க வேண்டும். அவர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் கொடுக்க வேண்டும். சமூக நிறுவனங்களை அமைத்து அவற்றின் மூலம் சிறுவர்களைப் பாதுகாக்க வேண்டும். வேலைக்கு தம்மிடையே சிறுவர்களை அமர்த்துவோரை இனங்கண்டு அவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிடின் எதிர்கால சமுதாயம் ஓர் நற்சமுதாயமாக உருவாகும் என்பது கேள்விக்குறியாகவே காணப்படும். நாம் எதற்காக ஒடி ஓடி உழைக்கிறோம்? எமது பரம்பரை அனுபவிக்க. ஆனால் இவ்வாறுஎதிர்கால சமுதாயம் இன்றே சீரளிந்து போனால் பிறகேன் உழைக்க வேண்டும். எனவே வெள்ளம் வருமுன்னேயே நாம் அனைவரும் அணை கட்டுவோம். எல்லோரும் ஒன்றுபட்டு தீய சக்திகளை அழிப்போம். சிறுவர்களைப் பாதுகாப்போம். எதிர்காலத்தில் ஓர் நற் சமுதாயத்தைக் கட்டி எழுப்புவோம்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

This page is powered by Blogger. Isn't yours? Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது தேன்கூடு, தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி http://ta.wikipedia.org