<$BlogRSDUrl$>

திருமணச்சடங்கு

கும்பம்: கங்கை புனிதமானது. எல்லாவற்றையும் தூய்மை செய்வது தண்ணீர். ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது பொய்யாமொழி. தண்ணீரால் பயிரும், உயிரும் தழைக்கின்றன. ஆகையால், மணவறையில் கும்பத்தில் நீர் வைத்து வழிபட வேண்டும். ஓமம்: அனைத்துக்கும் அக்னியே சாட்சி. ‘நீயே உலகுக்கொரு காட்சி’ என்று சீதாதேவியார் கூறுகின்றார். அக்னியால் உலகமும் உயிரும் வாழ்கின்றன. நம் உடம்பில் சூடு இல்லையானால் உயிர் நிலைபெற மாட்டாது. இதனால் அக்னியை வழிபட வேண்டும். ஓமப்புகை ஆயுளையும் வளர்க்கும். நவகோள் வழிபாடு: ஞாயிறு முதலிய நவகோள்கள் இந்த உலகை இயக்குகின்றன. அதனால், நவகோள்களை வழிபட வேண்டும். மணமக்களுக்கு நவகோள்களின் நல்லருள் துணை செய்யும். தாலி: பழங்காலத்தில் அணிகலன்கள் செய்யும் நாகரிகம் இல்லாதிருந்தபோது ஒழுக்கம் மட்டும் உயர்ந்திருந்தது. ‘தாலம்’ என்பது பனையோலையைக் குறிக்கும். அந்தப் பனையோலையை ஒழுங்கு செய்து மஞ்சள் தடவி, அதில் பிள்ளையார் சுழியிட்டு ‘இன்னாருடைய மகளை, இன்னாருடைய மகன் மணந்து கொண்டார். வாழ்க’ என்றெழுதி, அதைச் சுருட்டி மஞ்சள் கயிற்றிலே கோர்த்து மணமகள் கழுத்திலே தரிப்பர். தால ஓலையில் எழுதிக் கட்டியதனால் அதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. நாகரிகம் வளர்ந்த பிறகு (பனையோலை தண்ணீர் பட்டு நைந்து போவதால்) தாலியைத் தங்கத்தினால் செய்து தரித்துக் கொண்டனர். மனைவிக்கு மணவாளனே தெய்வமாதலின் கணவருடைய இரு பாதங்கள் போல் திருமாங்கல்யத்தைச் செய்து மார்பில் தரித்துக் கொண்டனர். பெண்களுக்குத் திருமாங்கல்யம் என்ற அந்த மங்கலநாண் உயிரினும் சிறந்தது. பெண்கள் எந்த அணிகலன்களை நீக்கினாலும், திருமாங்கல்யத்தைக் கழற்றக் கூடாது. சீதா தேவியார் இராவணனால் கவரப்பட்ட பொழுது, எல்லா அணிகலன்களையும் சுழற்றி எறிந்தனள். திருமாங்கல்யம் மட்டும் அவள் கழுத்தில் அணி செய்து கொண்டிருந்தது. அட்சதை: திருமாங்கல்ய தாரணம் முடிந்ததும் அட்சதை தெளிப்பார்கள். க்ஷதம் என்றால் குத்துவது என்று பொருள்: அகரம் அண்மைப் பொருளைத் தெரிவிக்கிறது. அட்சதை என்றால் உலக்கையால் குத்தப்படாதது என்று பொருள். குத்தப்படாத அரிசியில் முளைக்கும் ஆற்றல் உள்ளது. திருமணத்துக்கு முன்பே நெல்லைப் பக்குவமாக உரித்து, முறையோடு அதில் பன்னீர் தெளித்து, மஞ்சள்பொடி தூவி, அந்த அட்சதையை மணமக்கள் தலையிலே இறைவனுடைய மந்திரங்களைச் சொல்லித் தெளித்தால் ஜீவகளையுண்டாகும். அம்மி மிதித்தல்: மணமக்கள் அக்னியை வலமாக வருகிறபோது வலப்பக்கத்திலே ஒரு கல் இருக்கும். மணமகளின் பாதத்தை அந்தக் கல்லின் மீது வைக்குமாறு மணமகன் செய்வான். அதன் பொருள் ‘‘இந்தக் கல்லைப்போல் உறுதியாக இரு’’ என்பதாகும். தன்மேல் வைக்கும் பாரம் அதிகமானால் இரும்பு வளையும். ஆனால், கல் வளையாது; பிளந்து போகும். மணமகளே! கற்பில் நீ கல்லைப்போல் உறுதியாக இரு. அந்தக் கற்பில் கொஞ்சம் உறுதி தளர்ந்த அகலிகையைக் கல்லாயிருக்கச் சொன்னார் கௌதமர். அதனாலேதான் ‘நீ கல்லைப் போல் உறுதியாக இரு’ என்று, கணவன் கூறும் பாங்கில் மனைவியின் காலைப் பற்றி அந்த அம்மிமேலே வைப்பது. அம்மி மிதித்து அருந்ததியை வணங்குவார்கள். அருந்ததி = அ+ருந்ததி (கணவனின் சொல்லுக்குக் குறுக்கே நில்லாதவள் என்று பொருள்) மணமகனுக்கு: புதிய வாழ்வில் அடியெடுத்து வைக்கும் புது மணமகனே, உன் வாழ்வு புனிதமாகவும் புத்தமுதம் போலவும் இனிமையுடன் விளங்குவதாக. உன் மனைவியை அடிமைபோல் எண்ணி அடக்கியாளக் கூடாது. மனைவி மலருக்கு நிகராவாள். அதனால் மலரிடம் பழகுவதுபோல் மனைவியிடம் மெத்தென்று பழகவேண்டும். உன் மனைவி உன் வீட்டுக்கு வந்த ராஜலட்சுமியாகும். அவள் திருமணமான அன்றே பெற்ற தாய்_தந்தையரையும், உடன் பிறந்தாரையும், பழகிய வீட்டையும், எல்லாவற்றையும் துறந்து உன்னை நாடி வந்திருக்கிறாள். சுருங்கச் சொன்னால், தன் பெயரையே துறந்து விடுகின்றாள். ஆதலால், மனைவியிடம் அன்பாகப் பழக வேண்டும். நீ வீட்டிற்கு வரும்பொழுது வன் சொற்கள் என்றுமே பேசக் கூடாது. மனைவியின் அன்பைப் பெற வேண்டுமானால், மாமனார் மாமியாரை உயவசதி செய்யும்.ர்த்திப் பேச வேண்டும். பெண் உருவத்துடன் கூடிய காலண்டரைக் கூட உற்றுப் பார்க்கக் கூடாது. மனைவியின் சுகதுக்கத்தில் நீ பங்குபெற வேண்டும். மனைவியை நீ உன் உயிர்போல் நேசிக்க வேண்டும். மனைவி ஏதாவது சிறுகுற்றம் செய்தால் அதனைப் புறங்காத்தல் அமைதிக்கும் அன்பு பெருகவும்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

This page is powered by Blogger. Isn't yours? Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது தேன்கூடு, தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி http://ta.wikipedia.org