Samstag, நவம்பர் 15, 2003
பூப்புனித நீராட்டு விழா
தமிழர்களின் விழாக்களில் பூப்புனித நீராட்டு வழாவும் ஒன்றாக
இன்று வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடத்தில் முதல்
இடத்தை பிடித்துள்ளது இந்த விழாவானது தமிழர்களிடம்
தொன்று தொட்டு இருந்து வந்ததற்கான ஆதாரம் எதுவும்
தொல்காப்பியத்திலோ சங்க இலக்கியங்களிலோ அதன் பின்பு
வந்த நூல்களிலோ காணப்படவில்லை
இது சில நூற்றாண்டுகளுக்கு முன்புதான் தமிழர்களின்
கலாச்சாரத்தில் புகுத்தப்பட்டிருக்க வேண்டும்
ஒரு பெண்ணின் வளர்ச்சியில் அதாவது பன்னிரண்டு
பதின்மூன்று வயதில் இயற்கையாக நடக்கும் உடல்
மாறுதல்களினால் ஏற்படும் ஒருநிகழ்வே பெண் பூப்பெய்துதல்
மூடப்பழக்க வளக்கங்களை தன்வசம் வைத்துள்ள தமிழ்
சமூகம் அவற்றை பெண்களுக்கே விலங்குகளாகப்
போட்டுள்ளன அவற்றை இந்த சடங்கு நிழ்விலும்
கண்டு கழித்திருப்பீர்கள் ஆனால் இந்த பூப்புனித நீராட்டு
விழாவின் மூலம் அறிவியல் பூர்வமான ஒரு நோயின்
கூறியீட்டையும் உணர்த்துகின்றார்கள் நமது முன்னோர்கள்
பெண்ணாணவள் பருவம் அடைந்தபின் ஆணுடன் சேர்ந்து
கருவுற்று குழந்தை பெற்று பாலூட்ட வேண்டும்
ஆகவே இந்தப் பெண் நல்ல திடகாத்திரத்தோடும் நல்ல
உடல்நலத்துடனும் தன் இனத்தை விருத்தி செய்து
காப்பாற்றக்கூடிய பருவம் அடைந்துள்ளாள் என்று
அறிவிக்கும் நிகழ்வே இந்த சாமத்தியச்சடங்கு
ஆனாலும் சில பெண்கள் மேற்குறிப்பிட்ட வயதை தாண்டியும்
பூப்பெய்த மாட்டார்கள் இவர்களிடம் குறைபாடுகள்
காணப்படும் மாதவிலக்கு இவர்களுக்கு ஏற்படாது
இவர்களை இருழி என்று ஊர்வழக்கில் அழைப்பார்கள்
இப்படியான பெண்களை ஆண்கள் திருமணம் செய்ய
முன்வரமாட்டார்கள் மருத்துவ வசதிகள் இல்லாத
அன்றைய காலங்களில் இப்படியான விழாக்களை கொண்டாடி
தங்கள் உற்றார் உறவினர்களுக்கு விருந்துவைத்துச் சொன்னார்கள்
கிராமங்களில் இந்தவிழாவை சிறப்பாகக் கொண்டாடுவார்கள்
தமிழ் நாட்டில் பெண்ணை கட்டிக்கொள்ளும் முறையுள்ள
மாமனோ அல்லது மச்சானோ பூப்பெய்திய பெண்ணை
தனிமைப்படுத்தி மறைப்பு கட்டிக் கொடுப்பார்கள்
இவர்தான் உனது கணவர் என்று அன்றே அடையாளம்
காட்டி விடுவார்கள் பிறகென்ன பெரியவர்களின் சம்மதத்துடன்
கரம் பிடிக்குமட்டும் காதல் வானில் பறப்பார்கள்
இன்றய சூழ்நிலையில் கிராமங்கள் மெல்ல மெல்ல
சிதறி பொருளாதார வசதிதேடி பட்டணத்துக்கும் நகரத்துக்கும்
நகர்ந்ததால் கூடிவாழ்ந்த மக்கள் உறவுகளை மறந்தார்கள்
இப்படியான விழாக்கள் நடத்துவதன் மூலம் உறவுகளை
வரவளைத்து விருந்தழித்து உறவாடி மகிழ்வதில் மனதுக்கொரு
மகிழ்ச்சியும் ஆறுதலும் கிடைக்குமல்லவா
Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்