Dienstag, März 02, 2004
காதல் ஒரு நம்பிக்கை
----------------------------
நீங்கள் ஆதர்சனமாகத் தான் காதலிக்கப்படுகிறீர்கள். ஒருவரது கண்களில் மட்டும் உங்கள் பிம்பம் மட்டும்தான் சிறப்பானதாக உள்ளது. அது ஒன்று தான் என்றாலும் அந்த ஒன்று பல நூறு கோடிகளுக்குச் சமம். மற்றவர்களைப் பொறுத்தவரையில் நீங்கள் பத்தோடு பதினொன்றாக இருக்கலாம். ஆனால் உங்களவருக்கு நீங்கள் அப்படியல்ல. நீங்கள் தான் அவருக்கு முக்கியம். உங்களுடன் சேர்ந்து வாழ்ந்தால் தான் வாழ்க்கை இனிமையாக, வாழும் பூமி சொர்க்கமாக அமையும் என்று அவர் நம்புகிறார். நீங்களும் நம்புங்கள்.
பாலின கவர்ச்சி மட்டுமே திருமணத்தின் மீது நம்பிக்கை ஏற்படுத்துவதில்லை. திருமணம் என்பது இருவர் தங்களை முழுமையாக மற்றவரிடம் ஒப்படைப்பது. இது நம்பிக்கை சார்ந்தது. உங்களால் முடிந்த அனைத்தையும் மற்றவருக்காக நீங்கள் தருகிறீர்கள். அவர் தான் உங்கள் வாழ்க்கை என்று நம்புகிறீர்கள். அந்த நம்பிக்கை தான் உங்கள் நேசத்தின், திருமணத்தின் உயிர். இருவருக்குமே இது பொருந்தும், பொருந்த வேண்டும். அப்போது தான் திருமண பந்தம் சுவைக்கும், நிலைக்கும்.
தெருவோரம் இருப்பவர் கோடீஸ்வரியை மணந்தால், அவரும் பணக்காரர் ஆகலாம். அவருடைய கடன்கள் அனைத்தையும் அவள் அடைத்து விடுவாள். வெட்கப்பட்டு கூனிகுறுகி நின்றவருக்கு கௌரவத்தைப் பெற்றுத் தருவாள். ஆனால் இது நடைபெற வேண்டுமானால், அவள் தனது உறவுகளை அவருக்காக முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும். சொத்துக்களை தனது என்று கருதாமல் அவரது என்று நினைக்க வேண்டும். திருமணத்துக்குப் பின்னர், தனக்குச் சொந்தமானது அனைத்தும் அவருக்குச் சொந்தம் என்று அவள் கருதினால் அவருக்குச் சொந்தமான அனைத்தும் அவளுக்கும் சொந்தமாகும்.
திருமண உறவு என்பது கணவனுக்கு 50 சதவீதம் மனைவிக்கு 50 சதவீதம் என்று ஆகாது. இருவரும் 100 சதவீதம் தங்களை அர்ப்பணித்தால் தான் அந்தத் திருமணம் வெற்றிகரமானதாக அமையும்.
Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்