<$BlogRSDUrl$>

வேலை செய்யும் பெண்களை தேடும் ஆண்கள் -------------------------------------------------------------- -------------------------------------------------------------- இன்றைய உலகில் தமிழ் சமுதாயத்தில் உள்ள பெண்களின் நிலை முன்னேறி வருகின்றது பெரும் கல்வி அறிவு புகட்டப்படாது ஒரு வயதுடன் வீட்டுடனும் சமையல்கட்டுடனும் பளக்கப்பட்ட எமது சமுதாயப்பெண்கள் போலி வேலிகளைக் கடந்து நவஉலகத்துடன் கலந்து ஆண்களுடன் போட்டி போடும் நிலைக்கு வளர்ந்து வருகின்றார்கள் இன்று பெண்கள் பல துறைகளிலும் கால் பதித்திருக்கின்றார்கள் உயர் கல்வி கற்கினறார்கள் நிர்வாகக் கட்டமைப்பை கொண்டு நடத்துகின்ற பெரும் வேலைகளில் கூட அமர்ந்திருக்கிறார்கள் ஆனாலும் இவர்களுக்கும் சில சோதனைகளும் வேதனைகளும் மற்றப் பெண்களை விடவும் இரட்டிப்பாகிறது வயது வந்த பெண்களுக்கு திருமணம் என்று வரும்போது தற்போதைய இளைஞர்கள் வேலை செய்யும் பெண்ணையே பெரும்பாலும் விரும்புகின்றார்கள் தங்கள் வருங்கால மனைவி படித்தவளாய் மட்டும் போதாது வேலை செய்து கைநிறையக் காசு சம்பாதிக்கின்றவளாகவும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றார்கள் இன்றைய நிலமையில் குடும்பம் என்று வரும் போது கணவன் மனைவி இருவருமே வேலை செய்தால்த்தான் வீட்டின் பொருளாதார நிலமையைச் சமாளிக்கலாம் இதில் அவர்கள் எதிர் பார்ப்பதிலும் தவறில்லை இன்றைக்கு மத்தியவர்க்க குடும்பங்களில் இதுதான் நடைமுறையாய் உள்ளது பொதுவாக பெண் படித்தவளாக இருக்கவேண்டும் என்பது உண்மைதான் அவளால்த்தான் குடும்பத்தை நல்ல முறையில் நடத்திச் செல்ல முடியும் குழந்தைகள் என்று வரும் போது தனது குழந்தைகளின் கல்வியில் கவனம் செலுத்தி அவர்களை வழி நடத்த முடியும் மேலும் உலக நடப்புகளை அறிந்து கொண்டு வாழ்க்கையை அதற்கேற்றால்ப்போல் நடத்தவும் தெரியும் இன்றைய சூழ்நிலையில் ஒரு பெண் வேலைக்குச் செல்லுகின்ற போது அவள் எத்தனையோ பிரச்சனைகளை குடும்பத்துக்குள்ளும் வெளிஉலகத்திலும் சந்திக்க வேண்டியவளாக இருக்கின்றாள் அப்படி சந்திக்கும் பிரச்சனைகள் ஒரு ஆணினுடைய பிரச்சனைக்கு முற்றிலும் மாறுபட்டிருக்கின்றது இணைந்து வாழும் வாழ்க்கையில் ஆண் தந்தைப் பொறுப்பையும் பெண் தாய்ப் பொறுப்பையும் அடைகின்றார்கள் ஆனால் இருவரின் கடமைகளும் மாறுபட்டவைகளாக இருக்கின்றன ஆகவே இங்கு குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பு பெரும்பாலும் தாயிடமே ஒப்படைக்கப் படுகின்றது குழந்தையின் தரிப்பக்கு தந்தை காரணமாகலாம் ஆனால் தாய் குழந்தை தரித்த நாளில் இருந்து பத்து மாதம் வரை அவனது குழந்தைக்கும் அவளே பொறுப்பாகிறாள் வேலை பார்க்கும் பெண்ணாக இருந்தால் வேலைப்பளுவும் குழந்தைப்பழுவும் சேர்ந்து அவளுக்கு இரட்டிப்பாக் குகின்றது ஆணுக்கு சமமாக வேலை பார்த்து விட்டு வந்தும் வீட்டில் சமையல் வேலையில் கவனம் செலுத்த வேண்டும் வீட்டை சுத்தம் செய்வதிலும் பிள்ளைகளின் படிப்பிலும் மற்றும் இதர வேலைகளிலும் அவளே இடுபட வேண்டியுள்ளது குடும்பத்துக்காக வெளியிலும் வீட்டிலும் கூடிய நேரம் உழைக்க வேண்டி ஏற்படுகின்றது ஆனால் இதற்கெல்லாம் அவளுக்கு போதுமான தேகபலம் இருக்கின்றதா ஆரோக்கியம் இருக்கின்றதா போதிய நேரம் இருக்கிறதா என்று கேட்டால் பதில் பூச்சியமே வேலை பார்க்கும் பெண் மனைவியாக வரவேண்டும் என்று விரும்பும் ஆண்கள் இதைப் பற்றி எல்லாம் சிந்திக்கின்றார்களா அல்லது மனைவியுடன் சேர்ந்து அவளது வீட்டு வேலையில் பங்கு போட்டுக் கொள்கிறார்களா பெரும்பாலன ஆண்கள் இதனை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை வீட்டு வேலை அவளுடையதுதானே என்று பெண்ணின் தலையிலே சுமத்தி விடுவார்கள் ஆனால் அவளின் சம்பளத்தில் குறியாய் இருப்பார் பெரும்பாலான ஆண்கள் குடும்பம் என்று எண்ணுகின்றபோது தங்களது நலனை கருத்தில் கொண்டுதான் நடக்கின்றார்கள் தங்களது துக்க துயரங்களை பெரிது படுத்துகின்றார்கள் ஆனால்தனது வாழ்க்கையுடன் கூடிச சுகதுக்கங்களை பங்கு போட்டுக் கொள்ள வருகிறவளின் நலன்களைப்பற்றி உணர்ச்சிகளைப்பற்றி அவர்கள் பெரிதும் சிந்தித்துப் பார்ப்பதில்லை இந்த நிலை மாறவேண்டும் ஆணும் பெண்ணும் சரிசமம் என்ற நிலை உயரவேண்டும்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

This page is powered by Blogger. Isn't yours? Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது தேன்கூடு, தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி http://ta.wikipedia.org