<$BlogRSDUrl$>

தமிழர்களிடையே பிரதேசவாதம் வேண்டாம் -------------------------------------------------------- வடக்கு, கிழக்கு என்பது தமிழ் பேசும் இனங்களின் தாயகம், தாயகத்தை பிரதேசத்தின் பேராலோ, மதத்தின் பேராலோ, குறுகத்தறிக்க முனைகின்றமை ஒரு பச்சைத் துரோகம் ஆகும். இந்தப் பச்சைத் துரோகத்தைப் புரியும் ஒருவராக விடுதலைக்காகச் சிந்தப்பட்ட விடுதலைப் போராளிகளின் குருதியின் பேரால் விலை கூýவி விற்கும் ஒருவராக மாறியுள்ளார். அந்நிய விடுதலை விரோத சக்திகளுக்கு விலைபோன ஒருவர். யார் இவர் என்று பேர் சொல்லி அறிய வேண்டிýய தேவையில்லை. விடுதலைக்காக ஏந்தப்பட்ட கருவிகளை சொந்த தமிழ் மக்களுக்கு எதிராக இவர் திருப்பியுள்ளார். உண்மையில் மறுவளமாகச் சொல்வதானால் தனக்கு எதிராகத் திரும்பியுள்ளார். மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்திலிருந்து திருகோணமலை, வன்னி, யாழ்ப்பாணம் மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் மக்களை வெளியேறுமாறு கோரிக்கை வேறு அவர் பேரால் விடப்பட்டுள்ளது. தொலைபேசியூடாக அநாமதேயத் தொலைபேசி மிரட்டல்கள் வேறு விடப்பட்டுள்ளன. மிகமோசமான உட்பகையைத் தூண்டிý தமிழ் பிரதேசங்களுக்கு இடையே பகைமையை மூýட்டிý அந்தத் தீயிலே தனது சுயலாபம் ஈட்டிýக் குளிர்காய முனைகின்றதான ஒரு செயலுக்கு தமிழ் பேசும் மக்களே! யாரும் மனசாலும் துணைபோகாமல் இருங்கள். நாள்தோறும் பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சிகள் ஊடாக வெளிவரும் செய்திகள் மட்டக்களப்பில் இருந்து வெளிமாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் கல்வியாளர்களை, தொழில் புரிவோர்களை, மாணவர்களை, உத்தியோகத்தர்களை வெளியேறிவிடுமாறு வலியுறுத்துவதாக கூýறுகின்றன. உண்மையில் இது மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் கல்விசார் பின்னடைவுகளையும் எமது விடுதலைப் பாதையில் பாரதூரமான பின்னடைவுகளையும் ஏற்படுத்தும். தமிழ் தேசியப் போராட்டத்தில் இதுவரையும் கிழக்கு வாழ் தமிழ் மக்கள், போராளிகள், செய்த மகத்தான தியாகங்கள், பங்களிப்புகள், என்கின்ற பவித்திரமான முகத்திலே பச்சைக்கறையைப்பூசும் செயலாகவே அமைகின்றது. எமது விடுதலைப் போராட்டத்திற்கு மட்டுமல்ல கடந்த இரண்டரை வருடகாலத்திற்கு மேலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சமாதான முயற்சிகளை தமிழ் மக்களைக் கொண்டே சீர்குலைப்பதற்கான திட்டமிட்ட சதி முயற்சியின் ஓர் அங்கமாகவும் நாம் இதனை கருத வேண்டும். கடந்த காலங்களில் சமாதான முயற்சிகளிற்கு ஏற்பட்ட சீர்குலைவுகளிற்கு விடுதலைப்புலிகளே அதாவது தமிழ்த்தரப்பினரே காரணம் என்கின்ற பொய்யான குற்றச் சாட்டுகளை நிரூýபித்து நிற்கும் ஒரு முயற்சியாகவும் இது அமைந்து விடும். தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தின் ஒட்டு மொத்தமான குரலை பிளந்தெறியவும், எமது ஆதரவின்றி அரசமைக்க முடிýயாத சூýழ்நிலையை தடுப்பதற்கு துணைபுரியும் துரோகச் செயலாகவும் இது அமைகின்றது. பேச்சுவார்த்தையில் தமிழ் மக்களின் ஏக பிரநிதிகள் புலிகளே என்கின்ற கொள்கையை முன்வைத்தே பாராளுமன்ற தேர்தலில் போட்டிýயிடும் தமிழ் கூýட்டமைப்பிலும் வடக்கு கிழக்கு என்ற பிரிவினை வாதத்தை முன்வைத்து அதன் வலுவையும் ஒற்றுமையையும் சீர்குலைக்கும் சதி முயற்சியாகவும் இது அமைகின்றது. எனவே வடக்கு, கிழக்கு மற்றும் இலங்கை வாழ் தமிழ் பேசும் இனங்களே! சமாதான விரும்பிகளே?. வடக்கு கிழக்கை துண்டாட விரும்பும் ஒரு தீயசக்தியாக இதனை மட்டும் இனங்கான வேண்டாம்! விடுதலைப் பாதையில் இருந்தும் விலகிய ஒரு தனிமனித சக்தியாக மட்டும் இனங்காண வேண்டாம்!. சமாதானத்திற்கும், சமூýகங்களிற்கிடையிலான நல்லிணக்கத்திற்கும் எதிரான, உள்ளக வெளியக சக்திகளின் கூýட்டுச் சதிகளிற்கு உடந்தையாக தொழிற்படும் ஒரு ஊடுருவல் சக்தியின் கருவியாக இனங்காண வேண்டும். வடக்கு, கிழக்கு சமூýகங்களையும் ஒட்டு மொத்த சமாதானத்தையும் கூýறுபோட முனையும் ஒரு நச்சுக் கோடரியாக இனம் கண்டு அதன் தீய நோக்கங்களிற்கு இரையாகாது இருக்கும்மாறு எமது உறவுகளை வேண்டிý நிற்கிறோம். எங்கள் மனங்களில் பிரதேசவாதம் எனும் நச்சு விதை இன்னமும் ஒட்டிýயிருந்தால், அதனைக் கல்லி எறிவோமாக, எந்த சுயநலமான நோக்கங்களிற்காகவும் சிறிதளவேனும் பிரதேசவாதத்தை பயன்படுத்தும் கேவலமான செயல்களை கைவிடுவோமாக, பிரதேச வாதம் என்கின்ற கோடரிக் காம்புகள் ஏந்தி நிற்கின்ற கொடிýய கருவியாக இப்போக்கை இனங்கண்டு அதனை வீசி எறிவோமாக. பல்கலைக்கழக சமூýகத்தினர்களே! கல்வியாளர்களே! புத்திஜீவிகளே! எமக்கு முன்னால் ஒரு மாபெரும் கடமை உள்ளது. தேசிய விடுதலையை ஊறுபடுத்தும் பிரதேசவாதம் போன்ற குறுகிய வாதங்களில் இருந்து எமது இளைய பரம்பரையினர்களை மீட்டெடுக்கவும் நல்நெறிப்படுத்தவும் முனைந்துஃமுயலுதல் வேண்டும். கல்வியாளர்கள் மட்டுமல்லாது சமாதான சூýழலை விரும்பும் சகல நேச சக்திகளும் சமாதானத்திற்கு எதிரான சக்திகளின் சதி முயற்சிகளை கண்டிýத்து குரலெழுப்புவோமாக. ஒன்றிணைந்த வடக்கு, கிழக்கிற்குள் நாம் அனைவரும் இணைந்து செயற்பட்டு நமது தேசியத்தை ஒரு கொடிýயின் கீழ் வென்றெடுப்போமாக.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

This page is powered by Blogger. Isn't yours? Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது தேன்கூடு, தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி http://ta.wikipedia.org