Mittwoch, Juli 21, 2004
மீண்டும் மரமாவோம்
அந்த வேப்பமரம் விசாலித்து குடைபோல விரிந்து. பூக்களும், காய்களும் கனிகளாகத் தொங்கிக்கொண்டு இருப்பது பார்ப்பதற்கு அழகாக இருந்தது. வேப்ப மரக்கிளை ஒன்றில் காகம் கூடு கட்டி முட்டையிட்டு அடை காத்துக் கொண்டிருந்தது. காகத்திற்கு வேப்பம்பழத்தில் பிரியம் அதிகம். காலையானதும் பழுத்திருக்கும் பழங்களைக் கொத்தித்தின்றுவிட்டுப் பறந்து செல்லும். ஒருநாள் வேப்பமரம், காகமே உனக்கு நான் தங்க இடமும், உணவும் தருவதால் நான் பயந்தவன் என்றா நினைக்கிறாய் உன் இனத்தையே காப்பாற்றும் என் மீதே எச்சங்களை கொட்டுகின்றாய் என பரந்து வளர்ந்த வேப்பமரம் காகத்தைப் பார்த்துக் கேட்டது. உங்களால் என்ன செய்யமுடியும்? உன் பழங்களை அழிப்பேன் என்றது காகம். அதுதான் முடியாது. நீ காய்களாகவும் பிஞ்சுகளாகவும் அடித்துக்கொட்டலாம், ஆனால் நீ உண்ணும் பழங்கள் உன் உடலில் புகுந்து, விதையாக வெளியே வரும்போது எங்கள் மண்ணில் மீண்டும் முளை கொள்வோம்
என்றது வேப்பம் பழம்.
காகம் சற்று யோசனையில் ஆழ்ந்தது.
சரிதான் விதையாக வீழ்வது மீண்டும் முளைகொள்ளும்
மண்கொண்ட தாகம் அதுவாகும்
காகம் எங்கோ பறந்து சென்றது.
Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்