<$BlogRSDUrl$>

மேலைத்தேய பெண்களின் சுதந்திரம் ------------------------------------------------ மேலைத்தேய சமூகங்களில் பெண்ணிய அமைப்புக்களினதும் பெண் ஆய்வாளர்களினதும் பெண் அரசியல் வாதிகளினதும் பெருக்கம் அதிகமாகியிருக்கின்ற போதிலும், பெண்விடுதலை என்பது இற்றைக்கு 50 வருடங்களுக்கு முன்னிருந்த நிலையைவிட பின்நோக்கியே சென்றுள்ளது. இங்கு பெண்ணியம் என்பது சுயம் சார்ந்த பாதைவழியே சென்றுள்ளதுடன், தனிப்பட்ட தன்மையை உடையதாகவே விளங்குகின்றது. அதாவது, இங்கு பெண்விடுதலை என்பது பெண்கள் தாங்கள் விரும்பும் எந்தப் பொருளையும் அவை உடனடிச் சந்தோசம் தரும் பட்சத்தில், அவை எவ வளவு பிரயோசனம் அற்றவை என்றாலும் அவற்றை கொள்வனவு செய்வதற்கான சுதந்திரம் என்றும், தங்கள் உடல்களைப் போதைப்பொருள் பாவனைக்கும், புகையிலை மற்றும் மதுபானபாவனைக்கும் உள்ளாக்கி வருத்திக் கொள்வதற்குமான சுதந்திரம் என்றும், தாங்கள் விரும்பும் அளவிற்கு தங்கள் இஸ்டத்திற்கு பாலியல் உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் சுதந்திரம் என்றும் பிரபலப்படுத்திக் கொள்கின்றனர். இந்த 'சுதந்திரங்கள்' மிகவும் தனித்துவிடப்பட்டதும், அன்னியதுமான வாழ்க்கையை பெருமளவிலான பெண்கள் வாழ்வதற்கு வழிகோலும் பாதைக்கு இட்டுச் செல்கின்றன. அங்கு வாழும் பெண்களில் காணப்படும் இம்மாற்றமானது மிகவும் ஆழமான அறிவு கொண்டதாயிருக்கின்றது. ஆனால், விடுதலை பெற்றுத்தரக்கூடியதொன்றாகக் காணப்படவில்லை. ஏனெனில் ஒரு காலத்தில் தந்தையர்களாலோ, சகோதரன்களாலோ அடிமையாகக் கொள்ளப்பட்டவர்கள் தற்போது தொழில் நிறுவனங்களில் இலாபத்தைப் பெற்றுத்தரும் வியாபாரப் பொருட்களாக இருக்கின்றனர். பெண்களுக்கெதிரான வன்முறைக்குற்றங்கள் அதிகரிக்கின்றனவேயொழிய குறையவில்லை. அது மட்டுமல்லாமல் ஒரு பெண் நன்னடத்தை கொண்டவள் என்றாலும் அதற்கான மதிப்பை தன் சொந்த சகோதரர்களிடமிருந்துகூடப் பெற்றுக்கொள்ள முடிவதில்லை. இதற்குச் சான்றாக குடும்பத்தில் நடைபெறும் சாதாரண சச்சரவுகளின்போது பெண்ணை பாலியல் hPதியாக இழிவுபடுத்தி அவளைப் பொதுவில் அவமானப்படுத்தும் வார்த்தைப் பிரயோகங்களைக் கூறலாம்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

This page is powered by Blogger. Isn't yours? Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது தேன்கூடு, தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி http://ta.wikipedia.org