<$BlogRSDUrl$>

தீபாவளி வந்த காரணம்

* இறைவன் மகாவிஷ்ணு பத்து அவதாரங்கள் எடுக்க வேண்டி நேர்ந்தது. இதனைத் தசாவதாரம் என்பார்கள். * முதலாவது அவதாரம் மச்சம் எனப்படும் மீனின் அவதாரம். இரண்டாவது அவதாரம் கூர்மம் எனப்படும் ஆமை அவதாரம். மூன்றாவது அவதாரம் வராகம் எனப்படும் பன்றி அவதாரம். * இவரை வராக மூர்த்தி என்றும் பூவராகன் என்றும் அழைத்தனர். அப்போது தன்னைக் காப்பாற்றிய இறைவனான திருமாலின் அருள் பெருக்கை வியந்து அவர் மேல் காதலானாள் பூமாதேவி. வராகரும் பூமாதேவியின் மேல் மையல் கொண்டார். எனவே, இருவரும் மணந்து கொண்டனர். * அவர்களுக்கு அற்புதமான ஒரு குழந்தை பிறந்தது. அவனுடைய பெயர் நரகன். அசுரத் தன்மையுடன் கூடியவனாக நரகன் விளங்கினான். எனவே, பிற உயிர்களைக் கொடுமையிலும் கொடுமை செய்து வந்தான். * நாளாக, ஆக அவனுடைய கொடுமைகள் எல்லை மீறிப் போயின. அந்த நேரத்தில் திருமாலின் எட்டாவது அவதாரமாக கிருஷ்ணர் தோன்றி இருந்தார். * நரகாசுரனிடம் தாங்கள் படும் கொடுமைகள் குறித்து அனைவரும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவிடம் விரிவாக எடுத்துரைத்தனர். அவர்களைத் தாம் காப்பாற்றுவதாக வாக்களித்தார் திருமாலான கிருஷ்ணர். * அந்த நாளில் சத்ராஜித்து என்ற மன்னனுடைய மகளாகப் பூமாதேவி தோன்றி இருந்தாள். அவளுடைய பெயர் சத்யபாமா. * சத்ராஜித்துவிடம் அற்புதமான ஒரு மணி இருந்தது. அது நரியனால் தரப்பட்ட மணி. அதன் பெயர் "ஸ்யமந்தகம்.' ஒருமுறை சத்ராஜித்துவிடம் அந்த மணியைத் தனக்குத் தருமாறு கேட்டார் கிருஷ்ணர். அவன் மறுத்து விட்டான். * பின்னொரு நாளில் சத்ராஜித்தின் தம்பி அந்த மணியை கழுத்தில் அணிந்து கொண்டு வேட்டைக்கு சென்றபோது அவனை ஒரு சிங்கம் கொன்று விட்டது. அந்த சிங்கத்தை ராம பக்தரான ஜாம்பவான் கொன்று ஸ்யமந்தக மணியைக் கைப்பற்றி, தன் புத்திரி ஜாம்பவதிக்குப் பரிசாகத் தந்திருந்தார். * தன் தம்பியைத் தேடி காணாத சத்ராஜித்து அவனைத் தேடி காட்டிற்கு சென்ற போது அவனது இறந்த உடலை மட்டுமே காண முடிந்தது. * எனவே, மணியின் மேல் ஆசை கொண்ட கிருஷ்ணரே தன் தம்பியைக் கொன்றார் என்று பழி சுமத்தினான் மன்னன். * கிருஷ்ணர் தம் பழியைப் போக்கிக் கொள்ள மணியைத் தேடிக் காட்டிற்குள் புகுந்து ஜாம்பவதியைக் கண்டார். ஜாம்பவானும் கிருஷ்ணரும் போராடிய பின்னர் கிருஷ்ணரே ராமர். ராமரே கிருஷ்ணர் என்று உணரப்பட்டு ஜாம்பவதியுடன், அந்த மணியையும் ஒப்படைத்தார் ஜாம்பவான். ஜாம்பவதியைத் திருமணம் செய்து கொண்ட கிருஷ்ணர் ஜாம்பவதியுடன் சத்ராஜித் நாடு சென்று நடந்த விவரங்களைக் கூறி மணியை அவனிடம் ஒப்படைத்தார். * கிருஷ்ணரின் நேர்மையை மெச்சிய மன்னன் தன் புதல்வி சத்யபாமாவை அவருக்கு திருமணம் செய்து வைத்தான். * சத்யபாமா தேரோட்டுவதில் கெட்டிக்காரி. எனவே, நரகாசுரனுடன் போரிடும் போது தனக்கு அற்புதமான ரத சாரதி வேண்டும் என்று கருதிய கிருஷ்ணர் சத்யபாமாவையே ரத சாரதியாக்கி நரகன் மேல் போர் தொடுத்தார். * இதற்கு இன்னொரு காரணம் இருந்தது. தன்னுடைய தாயாரின் கையினாலேயே தன் மரணம் நிகழவேண்டும் என்று நரகன் வரம் கேட்டிருந்தான். எனவே, அவளையும் அழைத்துச் சென்றார் கிருஷ்ணர். * நரகனுக்கும், கிருஷ்ணருக்கும் கடும் போர் நடைபெற்றது. நரகனின் கூரிய அம்பு ஒன்றினால் மயக்கமடைந்தார் கிருஷ்ணர். தன் கணவர் தாக்கப்பட்டது கண்டு வெகுண்ட சத்யபாமா, கணவருக்கு பதில் தானே நரகனுடன் போரிட்டாள். * போரில் நரகன் படுகாயமடைந்து கீழே விழுந்தான். அவன் உயிர் ஊசலாடியது. இந்த நேரத்தில், வந்திருப்பவள் தன் தாய் என்பதை உணர்ந்து கொண்ட நரகன், தன் பெற்றோரைக் கையெடுத்து வணங்கினான். * கிருஷ்ணரும், சத்யபாமாவும் அவனருகே கருணை பொழிய வந்து நின்றனர். * ""நீங்கள் இருவரும் என் தாய், தந்தையர் என்பதை நான் உணர்ந்தேன். தெரியாமல் நான் அரிய, பெரிய பாவங்களைச் செய்து விட்டேன். என்னை மன்னித்தருள வேண்டுகிறேன்!'' என்று வேண்டினான் நரகன். * ""குழந்தாய், உனக்கு வேண்டிய வரம் யாது?'' என்று கேட்டார் கிருஷ்ணர். * ""நான் கொடியவன் ஆகையால் நான் உயிர் விடவே விரும்புகிறேன். நான் உயிர் விடும் இந்நாளை மக்கள் எல்லாரும் விரும்பிக் கொண்டாடி மகிழ்வர். அக்கொண்டாட்டம் இன்றுடன் நின்று விடக் கூடாது. ஒவ்வொர் ஆண்டும் இந்த நாளைக் கொண்டாடும்படி தாங்கள் அருளவேண்டும்'' என்று கேட்டுக் கொண்டான் நரகன். * கிருஷ்ணர் புன்னகை புரிந்தவராக, அன்பனே, இன்று சதுர்த்தசி திதி. உன் நினைவாக இன்று முதல் "நரக சதுர்த்தி' என்று பெயர் உண்டாகட்டும். * இந்த விடியற்காலை வேளையில், எண்ணெய் தேய்த்துக் குளிப்பவர்கள் கங்கையில் குளித்த புண்ணியத்தை அடையட்டும்! * மக்கள் புதிய ஆடை, அணிகளை அணிந்து என்னை முறைப்படி பூஜைகள் செய்யட்டும். அப்படிச் செய்பவர்களுக்கு கிருஷ்ணனாகிய என்னுடைய அருளும், சத்யபாமாவின் அருளும் கண்டிப்பாக என்றென்றும் உண்டு. * "இந்த உலகம் உள்ள வரை மக்கள் உன்னை நினைத்து இதனை பெரியதொரு பண்டிகையாகக் கொண்டாடுவார்களாக' என்று அருள்புரிந்தார். * கிருஷ்ணரின் இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் நரகாசுரன் அமைதி அடைந்தான். அவன் உயிர் பிரிந்தது. இது தான் நாம் தீபாவளி கொண்டாடுவதன் பின்னணி!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

முடிச்சுகள் அவிழட்டும்

ஒரே வாரத்தில் துக்கத்தையும், மங்களகரத்தையும் சந்தித்த வீடு, ராணி எனது தோழியினுடைய வீடாகத்தான் இருக்க வேண்டும். இன்று நினைக்கும் போது அந்த பசுமையான நினைவுகள் என்னில் எழும்புவதை தடுக்க முடியவில்லை. ஆறு குழந்தைகள் அடங்கிய அந்த குடும்பத்தின் முதல் கனியான என் தோழி ராணி, எனக்கு மிகவும் நெருக்கமானவள். அதற்குக் காரணம், அவளது தியாக உணர்வும், தன்னம்பிக்கையான துணிச்சலும்தான். தனது உடன் பிறப்புகளுக்காக தன் வாழ்வை தியாகம் செய்த சேவகி என்றும் சொல்லலாம். ஏகப்பட்ட பிரச்சினைகளுடன் தீர்வு காணப் போராடி இறுதியில் தங்கை திருமணம் நடைபெறும் என்ற ஆவலோடு காத்திருந்தவள் ராணி. திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பு, ராணியின் தந்தை ரத்தினம் திடீரென மாரடைப்பால் இறந்து போனார். மனதை தைரியப்படுத்தியவளாய், வீட்டின் கடின சூழலை மாற்ற முயற்சித்தாள் ராணி. விடிந்தால் திருமணம், இன்னும் சற்று நேரத்தில் நிச்சயம். மணப்பெண் ஸ்டெல்லாவிற்கு ஒரு புறம் மனதுக்கு உகந்த வாழ்வு, மறுபுறம் துக்கம். அப்போதுதான் அந்நிகழ்வு நடந்தது. ராணியின் அம்மா, தாம்பாளத்தட்டில் நலுங்குப் பொருட்களுடன் ஆரத்தி கரைத்து எடுத்து வர, அங்கு கூட்டத்தில் சலசலப்பு... தாலியிழந்தாச்சு, மூலையில் உக்காராம, இதென்ன கூத்து, என்று சிறுசு முதல் பெரிசு வரை, பேச, ராணியின் தாய் தட்டை வைத்து விட்டு, மூலையில் போய் அமர்ந்து அழுதாள். எத்தனை ஆசையாய்தன் மகளுக்கு, நலுங்குவிட ஆசைப்பட்டிருப்பாள், அத்தனையும் ஒரு வார்த்தையில் போனதே. கூட்டத்தின் சலசலப்பு பார்த்து ஓடிவந்தாள் ராணி. என்னப் பிரச்சனை ஸ்டெல்லா என்றாள் ராணி, அம்மாவ நலுங்குவிடக் கூடாதுன்னு சொல்றாங்க அக்கா. அதான் அம்மா அழறாங்க என்றாள் ஸ்டெல்லா. எங்கிருந்துதான் வந்ததோ அந்த துணிவு! சபை நடுவே ஒலி வாங்கியைப் பிடித்தவள் இடியென முழங்கத் தொடங்கினாள். பெரியோர்களே! நண்பர்களே! எங்களுக்கு எங்களது தாய்தான் முக்கியம். அக்கறையும், கரிசனையும், பாசமும் ஊட்டி வளர்த்தவள் தாய். அவள் மனம் குளிர, அவள் வாழ்த்த, அவள் ஆசிர்வாதத்தோடு நடைபெறும் எல்லாமே நல்லபடிதான் முடியும். நான்கு நாட்களுக்குள் கணவனை இழந்ததால், இத்தனை ஆண்டுகள் அவள் செய்த தியாகம், இழக்கப்படுவதில்லை, எஙëகளுக்கு தாயும், தந்தையுமான அவளே எங்கள் தெய்வம். அவளது ஆசிருடன் இந்த திருமணம் நடந்தால் நடக்கட்டும். இல்லையெனில், நாங்கள் இத்திருமணத்தை நிறுத்தவும் தயங்க மாட்டோம் என்றாள் ராணி. கூட்டமே ஸ்தம்பித்து போனது. மீண்டும் சலசலப்பு... ஆனாலும் இத்தனை துணிச்சல் கூடாது பெண்ணுக்கு என்று பல்வேறு பேச்சுக்கள். இறுதியாக ஒரு பாட்டி எழுந்தாள். அவ அம்மாவையை சடங்கு செய்ய அனுப்பு அவ மக சொல்லுறத போல தாய் ஆசிர்வாதத்த தவிர ஒரு மகளுக்கு வேற ஆசிர்வாதம் பெரிசில்ல. நீ சொல்றது சரிதாண்டி ராணி. உன் மனசு எங்களுக்கு இல்லாமல் போச்சே என்றாள் பாட்டி. கண்கள் பனிக்க திரும்பி தங்கையைப் பார்த்தாள் ராணி. மெல்ல தாயிடம் சென்றாள். அம்மாவின் முகத்தில் சோகத்தை மிஞ்சிய ஒரு சந்தோஷம், தெளிவு, திடம் தெரிந்தது. "இனியொரு விதி செய்வோம் இனி சதியல்ல சகியேசாதனை மட்டும்தான் சரியே"அங்கு ஒரு பெண்மை மேன்மையானது.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

புலியா எலியா??

மனைவிக்கு கணவன் பயப்படுவது ஏன், எதற்கு?`வெளியே புலி. வீட்டில் எலி' - என்று சில ஆண்களை குறிப்பிடுவார்கள். வெளியே வீர சாகசம் செய்வார்கள், எதையும் தட்டிக்கேட்கும் ஆற்றலும் கொண்டவர்களாக சில கணவர்கள் இருப்பார்கள். ஆனால் வீட்டில் மனைவி சொல்வதற் கெல்லாம் ``ஆமாம்...'' போடுவார்கள். மனைவி செய்வது தவறு என்று தெரிந் தால் கூட வாயைத் திறக்காமலே இருந்து விடுவார்கள். சிலரோ இதைவிட எல்லாம் பல படி மேலே சென்று, மனைவியைப் பார்த்தாலே பயத்தில் உதறல் எடுக்கத் தொடங்கி விடுவார்கள். யார் யாருக்கெல்லாம் `மனைவி பயம்' ஏற்படும்? பெண் பார்க்கும்போதே, மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் ஜோடி பொருத்தம் பார்ப்பார்கள். ஜோடி பொருத்தத்தில் இருவரது உடல்வாகு மட்டுமின்றி அழகையும் கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். சுமாரான அழகு கூட இல்லாத கணவனுக்கு, மிக அழகான மனைவி வாய்த்து விடும்போது அங்கே சிக்கல் தோன்றி விடும் வாய்ப்பு அதிகம். ``தனது அழகான மனைவியை தட்டிக்கேட்டால், அவள் தன் மீது கோபித்துக்கொண்டு தன்னை பிரிந்து சென்று விடுவாள்' என்று பயந்து இப்படிப்பட்ட கணவன்மார், மனைவி சொல்லே மந்திரம் என்று தலையாட்டி பொம்மைகளாக இருப்பார்கள். சில நேரங்களில் மனைவி செய்யும் தவறை தட்டிக்கேட்கக்கூட இவர்களுக்கு தைரியம் இருக்காது. இப்படிப் பட்டவர்களில் பலர், திரு மணத்திற்கு முன்பு குடிகாரர்களாய் இருந்து, பின்பு திருந்தி இருக்கிறார்கள். அழகான மனைவி வாய்க்கும் போது, பயந்து காணப்படுவதைப்போல அதிகமான வரதட்சணை வாங்கிக்கொண்டு பயப்படும் கணவன் மார்களும் உண்டு. இவர்களும் மனைவிக்கு அடங்கியே நடப்பார்கள். மனைவியிடம் வாக்குவாதம் செய்தாலோ, சண்டை போட்டாலோ மனைவி மூலம் கிடைக்கும் சுகபோகமும், செல்வமும் கையை விட்டு போய்விடும் என்று பயம் கொள்வார்கள். சில வகை வெளியே தெரியாத ஊனங்களை கொண்டவர்களும் மனைவிக்கு மனதளவில் பயப்படுவார்கள். மனைவியை பகைத்துக்கொண்டால், தனது பல கீனங்களை எல்லாம் வெளியே சொல்லி விடுவாள் என்று அவர்கள் பயப்படு வார்கள். இந்த பலகீனங்களில் செக்ஸ் பலகீனம் கூட இடம்பெறலாம். எல்லா விஷயங்களைப் பற்றியும் கணவனும் மனைவியும் மனந்திறந்து பேச வேண்டும். அதற்குரிய பக்குவம் இருவருக்குமே தேவை. `மனைவியிடம் பேசினாலே சண்டைதான் வரும்' என்று சில ஆண்கள் சொல்வார்கள். இப்படிச் சொல்பவர்களில் பலரும் மனைவிக்கு பயந்தவர்களாகவே இருப்பார்கள். சிலர் தனது சொந் தக்காரர்களிடம், குடும்பத்தினரிடம் மோசமாக நடந்து கொள்வார்கள். உண்ட வீட்டிற்கே ரெண்டகம் செய்வார்கள். அப்படிப் பட்டவர்களின் செயல், மனை விக்கு தெரிந்திருக்கும். அந்த குற்றத்தை மனைவி உற் றார் உறவினர்களிடம் சொல்லக் கூடாது என்பதற்காக, மனைவிக்கு பயந்து நடுங் குகிறவர்களும் உண்டு. ஆண்களில் சிலருக்கு தன் சுய நலத்தைவிட குழந்தைகள் நலம் முக்கியமாகத் தெரியும். மனைவி தவறு செய்கிறாள் என்பது தெரிந்தும், அந்த தவறை சுட்டிக்காட்டினால் குடும்பத்தில் பெரும் பிளவு ஏற்பட்டு, அது குழந் தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் என்ற பயத்துடன் வாழ்க்கையை கழிப்பவர்களும் உண்டு. சில பெண்கள் வன்முறை எண்ணம் கொண் டவர்களாக இருப்பார்கள். கணவர் நல்லது சொன்னால் கூட சுவரில் முட்டுவது, நெஞ்சில் குத்துவது, ஓ...வென்று அழுது ஒப்பாரி வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடு வார்கள். மனைவிக்கு காயமும், தனக்கு பணச் செலவும் ஆகி விடக் கூடாதே என்ற பயத்துடன் வாழும் கணவர்களும்இருக்கிறார்கள்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

அழகின் அர்த்தம்

குளித்து முடித்து விட்டு தன் அறைக்குள் வந்தாள் சுமதி. எதிரே பொருத்தப் பட்டிருந்த ஆள் உயர கண்ணாடிக்கு முன் நின்றாள். உடம்பில் மாருக்கு மேலே கட்டப்பட்ட டவல். கீழே தொடை அழகை பளிச்சென காட்டியது கண்ணாடி. மெழுகுச் சிலையாக தன் மேனியை பிரதிபலித்துக் காட்டிய கண்ணாடிக்கு நன்றி சொன்னாள். இன்னும் இருபது நாளில் இந்த அழகு ஒருவனிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறது. பத்தொன்பது ஆண்டுகளாக மெருகேற்றி வளர்த்த அழகும், செழுமையும், எங்கிருந்தோ வரும் ஒருவனுக்கு சொந்தமாகப் போகிறது. ஆமாம்! சுமதியின் திருமணம் நடக்க இன்னும் இருபது நாட்கள்தான் இருக்கின்றன. இயற்கையிலேயே வனப்பும் வாளிப்பும் கொண்ட அழகுப்பதுமை சுமதியைப் பெண் பார்க்க வந்த தினேஷ், அப்போதே அங்கேயே சம்மதம் சொல்லி விட்டான். அழகுக்கு அழகு சேர்ப்பது போல வண்ணமயமான ஆடைக்குள் ஐக்கியமானது அவள் உடம்பு. தேவதை ஒன்று புறப்பட்டது போல தன் அறையைவிட்டு வெளியே வந்தாள். அவள் அம்மா மரகதம் ஹாலில் உட்கார்ந்திருந்தாள். மகள் சுமதியைக் கண்டதும் பரிவோடு சொன்னாள். ``சுமதி! அம்மன் கோவிலுக்கு போகணும்னு சொன்னியே, டிபன் ரெடியாகி இருக்கும். சாப்பிட்டுவிட்டு போயேன்!'' என்றாள். ``சரிம்மா! என்றாள் சுமதி. உடனே மரகதம், சமையல் அறையை நோக்கி குரல் கொடுத்தாள்.'' ``அடியே.. சுப்பு! சுமதிக்கு டிபன் எடுத்து வை!'' வேலைக்காரி சுப்புவுக்கு ஆர்டர் பறந்தது. அடுத்த ஐந்து நிமிடத்தில் வேலைக் காரி சுப்புவின் பணிவுக்குரல் வந்தது. ``அம்மா! ரெடியா எடுத்து வைச்சிருக்கேன். சாப்பிட வாங்க!'' டைனிங் டேபிளில் இருந்த இட்லியை பரிமாற ஆரம்பித்தாள் சுப்பு. தட்டில் இட்லியை வைத்து சட்னியை ஊற்றினாள். கை தவறி சட்னி கரண்டி தடுமாறியது. சுமதியின் ஆடையில் சட்னி தெறித்தது. அவ்வளவு தான்! சட்னியில் உள்ள காரம், சுமதியின் முகத்தில் ஏறியது. கோபத் தால் முகம் சிவந்தது. `பட'டென வேலைக்காரி சுப்புவின் கன்னத்தில் ஓர் அறை வைத்தாள். ``உன் கண் என்ன குருடா.... இப்பத்தான் குளிச்சு முடிச்சு டிரஸ் பண்ணி வந்து உட்கார்ந் திருக்கேன். இப்படி அசிங்கப்படுத் திட்டியே!'' சுமதியின் சத்தம் கேட்டு மிரண்ட வேலைக்காரி சுப்பு, அடி விழுந்த தன் கன்னத்தை தடவியபடி சமை யறைக்குள் சென்று விட்டாள். மகளின் அடாத செயலைக்கண்டு பதறிப்போய் ஓடி வந்தாள் மரகதம். ``என்ன காரியம் பண்ணிட்டே சுமதி! உன் வயசென்ன... வேலைக்காரி சுப்பு வயசென்ன... கை நீட்டலாமா?'' ``அப்போ அவளை கொஞ்சணுமாக்கும். செய்த தவறுக்கு உடனே தண்டனை கொடுத்தேன். அது என்ன தப்பா?'' கோபம் குறையாமல் சுமதி கொதித்தாள். சுமதியின் தலையைக் கோதியபடி அமைதியாகப் பேச அமர்ந்தாள் மரகதம். ``சுமதி! அடுத்த வீட்டில் போய் வாழப்போற பெண்ணுக்கு முதலில் பொறுமை குணம் மிக மிக அவசியம். மணப்பெண் ஆகப்போற உனக்கு அழகு எக்கச்சக்கமா இருக்கு. மருமகள் ஆகப்போற உனக்கு பெண்மைக்குரிய அழகான, பொறுமை குணம் ரொம்ப அவசியம்!'' தன் தாய் சொன்ன பக்குவமான பாடம் சுமதியின் ஆழ் மனத்தில் பதிந்தது. உண்மையான அழகின் அர்த்தத்தை அப்போதுதான் புரிந்து கொண்டாள். அப்போதே வேலைக்கார பெண்மணியிடம் போய் மன்னிப்பு கேட்டாள்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

உடன் பிறப்பு

``மீனாட்சி, உங்கண்ணன்கிட்டேருந்து கடுதாசி வந்திருக்கு. அவனோட மகனுக்கு, நம்மோட பொண்ண, குடுக்கணும்னு கேட்டு எழுதியிருக்கான். இது சம்பந்தமா பேசறதுக்கு இன்னும் பத்து நாள்லே வர்றானாம். ஆக்கங்கெட்டவன் வரட்டும். நாலு வீதிக்கு இழுத்து நாரடிச்சு அனுப்பறேன்... படவா ராஸ்கோல்...'' கணவன் கதிரேசனின் கனல் கக்கும் வார்த்தைகளை கேட்டு விட்டு அடுப்படி யிலிருந்து ஆவேசத்தோடு வந்த மீனாட்சி, அவனின் ஆக்ரோஷமான முகத்தைக் கண்டு, தன்னைத்தானே அடக்கிக் கொண்டாள். ``வந்ததுமா வராததுமா, இப்ப ஏன் எங்க அண்ணனை கரிச்சிக் கொட்றீங்க? அவனுக்கு நம்ம பொண்ண கேக்கறதுக்கு உரிமை இருக்கு, கேட்ருக் கான், குடுத்து சந்தோஷப் படறதுக்கு நமக்கு குடுப்பினை வேணும்...?'' ``வாய மூடு. இதுக்கு மேல பேசினே வெளக்குமாறு பிஞ்சுரும். ஏண்டி அன்னிக்கு ஊர் சனங்க முன்னாடி என்ன அவன் வீட்டு வாசல்ல நிறுத்தி, போடா வெளியேன்னு கழுத்துல கைய வச் சானே... மறந்துட்டியா'' அவன் பொண்டாட்டி, நாளும் கிழமைய மதிக்காத, மண்ணை வாரி தூத்தினாளே... மறந்துடுச்சாடி மாஞ்சி போனவளே? தபார், இப்ப சொல்றேன் கேட்டுக்க, நீ அவனுக்கு தங்கச்சியுமில்லே, அவன் உனக்கு அண்ணனும் இல்லே, புரிஞ்சுக்கோ...'' எரிச்சலில் கூச்சல் போட்டான் கதிரேசன். மீனாட்சி, கண்களில் கனிவையும், வார்த்தைகளில் வசியத்தையும் தேக்கிக் கொண்டவளாக வார்த்தைகளை நைச்சியமாக இறக்கினாள். ``என்னங்க இப்படி கோபப்படறீங்க? அன்னிக்கு எங்க அண்ணன் அப்படி நடந்துட்டதும், அண்ணிக்காரி அத்துமீறி நடந்துக்கிட்டதும் தப்புத்தாங்க, நா இல்லேங்கல, நீங்கதானே முதல்ல செருப்பைத் தூக்கிக் காட்டினீங்க...? அப்புறமாத்தானே அவங்க அப்படி நடந்துட் டாங்க. ஏங்க அது நடந்து பத்து வருசமாச்சு. இன்னும் அத நெனச்சி புலம்பிக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்? பழசையெல்லாம் மறந்துடுங்க. உறவுகள பகைச்சிட்டு ஊர்ப்பழிக்கு எதுக்குங்க ஆளாகணும்? நல்லா யோசனை பண்ணிப் பாருங்க. எங்க அண்ணனுக்கும், அவங்க பையனுக்கும் என்ன குறைச்சல்?'' அடிபட்ட புலிபோல பாய்ந்தான் கதிரேசன். ``அடி செருப்பால, ஏண்டி போயும் போயும் உனக்கு புத்தி ஏண்டி இப்படி போகுது. அந்த அளவுக்கு நா ஒண்ணும் மானம் கெட்டுப் போயிடல, கிழிஞ்சி போன துணிகளை தச்சிக்கிற மாதிரி அறுந்து போன உறவுகள ஒட்டுப் போட முடியாதுடீ... எனக்கும் மானம் மரியாதை இருக்கு. சுயகவுரவம் இருக்கு. அவங்க சகவாசமே வேண்டாங்கறேன். சம்பந்தியா ஆகணும்னு பார்க்கிறீயா... அது தாண்டி நடக்காது...'' தீர்க்கமாக பேசி னான் கதிரேசன். கொதித்துப் போனாள் மீனாட்சி. ``ச்சீ... இவ்வளவுதானா உங்க புத்தி...? பணங் காசு, சொத்து, பத்து போச்சுண்ணா சம்பாதிச்சிக்கலாம். ஆனா உறவுங்கறது அப்படியில்லே, உங்கம்மாவுக்கு இன் னொரு தரம் நீங்க புள்ளயா பொறக்கப் போறீங்களா... இன்னொரு தரம் உங்க அண்ணனுக்கு நீங்க தம்பியா பொறக்கப் போறீங்களா? காலம் கெட்டா பிரிஞ்சிக்கிற மாதிரி நேரம் வந்தா கூடிக்கறது புத்தி சாலித்தனம். அதுதா உறவு, பத்து பாசங் கறது. முதல்ல அதப் புரிஞ்சுக்கிங்க...'' ``ஏய்... ஏண்டி சினிமா வசனமெல்லாம் பேசறே. விட்டது விட்டதுதான் மறுபடியும் அத தொட்டு எதுக்காக அசிங்கப்பட்டுக் கணும். மனுசனுக்கு மானம்தாண்டி பெரிசு. எம்பொண்ண ஆத்துல, கொளத் துல தள்னினாலும் தள்ளு வேனே தவிர, உறவுன்னு சொல்லிக்கிட்டு அந்த காஞ்சி போன காட்ல தள்ளமாட்டேன். புரிஞ்சிக் கிட்டு இந்த வீட்டுல இருந்தா இரு... இல்லே, கூடப்பொறந்த அண்ணன்கிட்ட போயி சேர்ந்துக்கோ...'' தீர்மானமாக பேசி விட்டு திண்ணைக்கு நகர்ந்தான், கதி ரேசன். மீனாட்சி ஆடிப் போனாள். ஊர் உலகம் மெச்ச உறவாடிக் கொண்டிருந்த அண்ணன் தங்கை என்கிற உறவு பத்து வருடங் களுக்கு முன் அப்பாவுக்குப் பின் அம்மா போய் சேர்ந்த பின் பாகப்பிரி வினை என்ற பெயரில் அவர் களுக்குள் சண்டை வளர்ந்து, சாபங்கள் பெருகி, பாசங்கள் பட்டுப் போய் விட்ட பிறகு, அவ ளுக்கும் அவளது அண்ணன் ஆறுமுகத் துக்கும் கண்கள் மூடிக் கொண்டதே தவிர, கண்ணீர் வற்றிப் போய் விடவில்லை. ஆசைகள், அடிபட்டுப் போனதே தவிர, அன்பு குறைந்து போய் விடவில்லை. பிரிவுகளிலும் அவர்களது உறவுகள் இறு கிக் கொண்டேதான் இருந்தது. விட்டுப் போன அந்த புனிதமான பாசத்தை, பந்தத்தை மறுபடியும் புதுப்பித்துக் கொள்ள நாட்கள் எண்ணிக் கொண்டு தான் இருந்தது. அந்த சந்தர்ப்பம் இப் போது கூடி வந்திருக்கிறது. அந்த ஆதங்கத்தில் அடுப்படியில் கிடந்து அழத் துவங்கினாள், மீனாட்சி. காலையில் காப்பியை வயிற்றுக்குள் இறக்கியபின் திண்ணைக்கு வந்து பேப் பரை எடுத்தான் கதிரேசன். சொல்லி வைத்தாற்போல் மாமூல்கிராக்கி மகா லிங்கம் வந்து உட்கார்ந்தார். ``தம்பி கதிரேசா! நான் நேத்து சந் தைக்கு போயிருந்தப்போ உங்க அண்ண னைப் பார்த்தேன். பாவம்பா ரொம்ப நொடிஞ்சுப் போயிட்டான். பேங்குல வாங்குன கடனை கட்ட முடியாம ஜப்திக்கு போய் நிக்குது. உங்க அண்ணிக்காரி வேற உடம்புக்கு முடியாம போய் ஆஸ்பத்தியில படுத்திருக்கா. ஹும்... எப்படி இருந்தவன் இப்ப இப்படி இடிஞ்சி போய் கிடக்கறான்...'' சோகத்தோடு சொன்னார், மகாலிங்கம். ``என்ன அண்ணே சொல்றீங்க...? எப்படி திடீர்ன்னு எங்க அண்ணனுக்கு இப்படியொரு நிலமை வந்தது'' பதறிப் போனான் கதிரேசன். அவனையும் அறியாமல் அவனது அடி மனது அதிரத் தொடங்கியது. இதுநாள் வரையில் அண்ணன் மேலிருந்த கோபமும், ஆவேசமும் ஒரு நொடியில் சிதறிப் போய், `எங்க அண்ணனுக்கா இப்படி?' என்கிற ஆதங்கம் இப்போது அவனை ஆட்டிப் படைக்கத் தொடங்கியது. வெறுப்பின் உச்சத்தில் இருந்தவனுக்கு, இந்த சேதியைக் கேட்ட தும் கண்கள் கசிந்தது. மனது பதைபதைத்தது. அவனை கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. உள்ளுக்குள் தகித்த ஊமை மரணங்கள் அவனை உஷ்ணப்படுத்தியது. ``கதிரேசா... அது என்னவோப்பா எனக்கு முழு விவரமும் தெரியலே. ஆனா உங்க அண்ணனை நேர்ல பார்த்தப்போ எனக்கே பதறி போச்சு. பாவம் எளச்சிப் போய் எலும்புக்கூடு மாதிரி நிக்கறான். தபார்பா உங்களுக்குள்ளே ஆயிரம் அளிச்சாட்டங்க இருக்கலாம். ஆனாலும் இந்த நேரத்துல நீ போயி அண்ணா நானி ருக்கேன்னு ஒரு வார்த்தை சொன்னா அவ னுக்கு பாதி கஷ்டம் நீங்கிப் போயிடும். அதுதான் மனுஷத்தனமும் கூட .இன் னொரு தடவ நீங்க ரெண்டு பேரும் உங் கம்மா வயித்துல பொறக்கப் போற தில்லே. ஆண்டவன் குடுத்த அந்த உறவு களை ஊனப்படுத்திடாதீங்க கதிரேசு, சரி சரி, நான் வரட்டுமா...'' மகாலிங்கம் போய் விட்டார். சலனங்களால் சரிந்து போன கதி ரேசன் சஞ்சலத்தால் தவித்தான். இனம் புரியாத வேதனை அவனை அரிக்கத் தொடங்கியது. அண்ணனும் தம்பியுமாய் அப்பா, அம்மாவுக்கு பிள்ளைகளாய் ஆடிக் கழித்து ஓடித்திரிந்த அந்த நாட்களின் நினைவுக் குமிழ்கள் நிதர்சனமாய் இப்போது அவனுக்குள் நெட்டி முறித்தன,. இனம்புரியாத வேதனை அவனுக் குள் புரண்டு புலம்பியது. இரவு முழுவதும் தூக்கத்துக்கு பதில் துக்கமே அவனை ஆரோகணித்தது. விடையில்லா கேள்விகள் அவனை விரட்டத் துவங்கியது. மூடிய கண்ணுக் குள்ளும் அண்ணனின் நினைவுகள் முடங்கிக் கிடந்தன. தானாடாவிட்டாலும் தன் சதையாடும் என்பார்களே அது இதுதானோ. பகலில் அவன் மனைவி மீனாட்சி சொன்னாளே, ஊர் பழிக்கு அஞ்சி உறவுகளை ஏன் பகைத்துக் கொள்ளவேண்டும்னு. மகாலிங்கம் சொன்ன மாதிரி இன்னொரு தடவை கிடைக்கக்கூடிய உறவா இது? பாசம் என்பதென்னை சந்தைச்சரக்கா? விடிந்தது கூட தெரியாமல் விறகுக்கட்டைபோல் கட்டிலில் கிடந்தான் கதிரேசன். ``என்னங்க மணி ஏழாகப் போகுது. என்ன இது. அதிசயமா இன்னிக்கு இப்பிடி தூங்கறீங்க? எந்திரிங்க!'' உசுப்பி விட்டுப் போனாள் மீனாட்சி. கட்டிலில் இருந்து எழுந்த கதிரேசன் விடுவிடுவென சமையல் கட்டுக்குள் போனான். ``தபார் மீனாட்சி சீக்கிரமா பயணப் படு. ஊர்ல அண்ண னைப் போய் பார்க்கணும். அண்ணிக் காரி சீக்கா கிடக்காம். அங்க போயிட்டு அண் ணனை பார்த் துட்டு அப் படியே உங்கண்ணன் வீட்டுக்கும் போய் மாப்பிள்ளை பார்த்து பேசிட்டு வருவோம். மள மளண்ணு கிளம்பு'' சொல்லி விட்டு குளிக்கப் போனான். தன்னைத்தானே ஒருமுறை கிள்ளிப் பார்த்துக்கொண்ட மீனாட்சி! ``ஆத்தா நீ கண்ணுமுழிச்சிட்டே!'' என்று மனதுக்குள் வேண்டியபடி புறப்பட தயாரானா

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

This page is powered by Blogger. Isn't yours? Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது தேன்கூடு, தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி http://ta.wikipedia.org